பசும்பிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசும்பிடி
பசும்பிடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Clusiaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Garcinia
இனம்:
G. xanthochymous
இருசொற் பெயரீடு
Garcinia xanthochymous
Hook.f. ex T.Anderson
வேறு பெயர்கள்
  • Garcinia pictoria (Roxb.) Dunn [Illegitimate]
  • Garcinia pictoria (Roxb.) Engl.
  • Garcinia roxburghii Kurz [Illegitimate]
  • Garcinia tinctoria (DC.) W.Wight
  • Garcinia tinctoria (DC.) Dunn
  • Stalagmitis pictoria G.Don
  • Xanthochymus pictorius Roxb.
  • Xanthochymus tinctorius DC.

பசும்பிடி (Garcinia xanthochymus) என்னும் மலரின் இளமுகிழ் சுவைக்காகவும், நறுமணத்துக்காகவும் வாயில் போட்டு மெல்லப்படும் என்பதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

  • குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று பசும்பிடி.[1]
  • இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில் அவனது கோப்பெருந்தேவி கொல்லிமலை அரண்மனையில் கொடை வழங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் பெருவாய் மலரையும், பசும்பிடியையும் மென்று மகிழ்ந்துகொண்டிருந்தாள்.[2]
  • திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்கள் ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளன.[3]
ஆம்பல் (நெகிழ்த்த வாழ் ஆம்பல்)
இலவம் (பகைமலர் இலவம்) (பகை = செந்நிறம்)
எருவை நறுந்தோடு
காந்தள் (கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்)
கோங்கம் (பருவம் இல் கோங்கம்)
தோன்றி (உருவம் மிகு தோன்றி)
நறவம் (ஊழ் இணர் நறவம்)
பசும்பிடி இளமுகிழ்
பல்லவம் (நனிநுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச் சினை போழ்ப் பல்லவம் தீஞ்சுனை உதிர்ப்ப)
வேங்கை (எரியிணர் வேங்கை)

இவற்றில் ஒன்று பசும்பிடி.

இவற்றையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. குறிஞ்சிப்பாட்டு 70
  2. பெரும்பெயர்க் கொல்லிப் பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து – பதிற்றுப்பத்து 81-25
  3. பரிபாடல் 19-75
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசும்பிடி&oldid=2824474" இலிருந்து மீள்விக்கப்பட்டது