தோன்றி (மலர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர்.[யார்?] மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில்

காந்தள் = செங்காந்தள்
கோடல் = வெண்காந்தள்

என்னும் மலர்கள் உள்ளன. ஆயின் தோன்றி-மலர் என்பது இருநிறமும் கலந்த மலரோ என எண்ணவேண்டியுள்ளது.[சான்று தேவை]

குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இதனைச் ‘சுடர்பூந் தோன்றி’ எனக் குறிப்பிடுகிறது. [1]

இப்பெயர் ‘நள்ளிருள் நாறி’ என்னும் பெயருக்குத் தரப்பட்டுள்ள விளக்கம் போல் உள்ளது. தோன்றி < தோன்றிப்பூ < சுடர்பூந்தோன்றிப்பூ – என இந்தப் பூவின் விளக்கம் அமைகிறது.

மருதோன்றி, மருத்தோன்றி, மருதாணி, அழகணம் என்றெல்லாம் கூறப்படும் பூவின் பெயரே தோன்றி என வழக்காறு நோக்கிக் கொள்வது பொருத்தமானது.[சான்று தேவை]

(‘தாமரை’ என்னும் சொல்லிலுள்ள ‘தா’ குறைந்து ‘மரை’ என நின்று, ‘மரை’ என்னும் சொல் தாமரை மலரை உணர்த்துகிறது.[சான்று தேவை] இதனை முதற்குறை என்று இலக்கணம் குறிப்பிடுகிறது.[2])

அதுபோல ‘மருத்தோன்றி’ என்னும் சொல்லிலுள்ள ‘மரு’ என்னும் முதல் மறைந்து ‘தோன்றி’ என நின்று மருதாணிப் பூவை உணர்த்துகிறது எனல் பொருத்தமானது.[சான்று தேவை] இதனை இப்படிப் பார்க்கவேண்டும். தோன்றி என்பது பழந்தமிழ். மரு = மணம். தொலை தூரம் மணக்கும் பூ என விளக்கும் விளக்கப்பெயராக அமைந்துள்ளது ‘மருத்தோன்றி’.[சான்று தேவை]

சங்கப்பாடல்கள் காட்டும் தோன்றி மலர்[தொகு]

 • இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று. [3]
 • தோன்றிப்பூ தீ போல மலரும். [4]
 • பவள நிறத்தில் இருக்கும். [5]
 • அகல் விளக்கில் சுடர் எரிவது போல இருக்கும். [6]
 • தீச்சுடர் போல இருக்கும். [7]
 • செம்முல்லை பூப் போல இருக்கும். [8]
 • இதழ்கள் நிறைந்த பூ தோன்றி. [9]
 • புதரில் விளக்கு போல் தோற்றமளிக்கும். [10]
 • குவிந்த கொத்துகளாக இருக்கும். [11]
 • உரு என்னும் சிவப்புநிறம் கொண்டிருக்கும். [12]
 • வெறியாட்டம் போல் சுருக்கம் கொண்டிருக்கும். [13]
 • எடுப்பான வண்ணம் கொண்டிருக்கும். [14]
 • தோன்றிப் பூக்கள் மிகுதியாக உள்ள மலை தோன்றி-மலை. அதன் அரசன் தோன்றிக்கோ. [15]

மேலும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1. குறிஞ்சிப்பாட்டு - அடி 90
 2. ஒருமொழி மூவழிக் குறைதலும் அனைத்தே - நன்னூல் 156
 3. குறிஞ்சிப்பாட்டு
 4. தாய தோன்றி தீ என மலரா – பரிபாடல் 11\21
 5. தோன்றி பவளத்து அன்ன வெம்பூ – பரிபாடல் 14-15
 6. தோன்றி சுடர் கொள் அகலின் மலர – அகம் 235
 7. ஒண் சுடர்த் தோன்றி – ஐங்குறுநூறு 440 எரி மருள் தோன்றி – அகம் 218
 8. அவிழ் தளவின் அகன் தோன்றி – பொருநராற்றுப்படை 199
 9. தோடார் தோன்றி குருதி பூப்ப – முல்லைப்பாட்டு 96
 10. தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ - நற்றிணை 69
 11. குவி இணர்ப் தோன்றி ஒண்பூ அன்ன – குறுந்தொகை 107
 12. உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் –பரிபாடல் 19-78
 13. வெறி உறு நுடக்கம் போல, தோன்றி மலை வயின்வயின் விளங்கும் அருமணி - பதிற்றுப்பத்து 51
 14. வண்ண வண் தோன்றி – கலித்தொகை 102
 15. தோன்றிக்கோ – புறம் 399
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோன்றி_(மலர்)&oldid=3849542" இலிருந்து மீள்விக்கப்பட்டது