விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குறுக்கு வழி:
H:M

இரு வேறு கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் பெரும்பாலும் ஒத்ததாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஒரே கட்டுரைப் பக்கத்தின் கீழ் ஒன்றிணைப்பது அவசியமாகும்.

கட்டுரைகளை ஒன்றிணைப்பதற்கான சூழ்நிலைகள் கீழ் வருமாறு:

1. பல்வேறு தலைப்புகளில் ஒரே பொருள் குறித்த கட்டுரைகள் அமையும் போது, அவற்றின் உள்ளடக்கங்களை ஒரு தலைப்பின் கீழ் மட்டும் ஒன்றிணைக்கலாம். இத்தலைப்பு வேறுபாடுகள் வெவ்வேறு கலைச்சொல் வேறுபாட்டின் காரணமாகவோ, பல சரியான எழுத்துக்கூட்டல்கள் காரணமாகவோ இருக்கலாம்.

2. ஒரு கட்டுரையின் துணைத் தலைப்பின் கீழ் வரக்கூடிய சிறு குறிப்புகள் தனிக்கட்டுரையாக எழுதப்படும் போது அவற்றை முதன்மைக் கட்டுரையுடன் இணைக்கலாம்.


முதன்மைத் தலைப்புத் தெரிவு[தொகு]

முதன்மைக் கட்டுரைத் தலைப்பின் தெரிவு Wikipedia:பெயரிடல் மரபுக்கு ஏற்ப இருத்தல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், இது குறித்து உரையாடல் பக்கத்தில் பேசி முடிவெடுக்கலாம்.

கட்டுரைகளின் வரலாறுகளை இணைத்தல்[தொகு]

ஏன் இணைக்க வேண்டும்?[தொகு]

கட்டுரைகளை ஒன்றிணைக்கும்போது அவற்றின் வரலாறுகள் முழுமையாகப் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தாவிட்டால் பழைய கட்டுரைகளை எழுதிய பயனர்களின் பங்களிப்பு விபரம் அழிக்கப்பட்டுவிடும்.

விக்கிப்பீடியாவுக்குச் செய்யப்படும் எந்த ஒரு பங்களிப்பும் பேணப்பட வேண்டும் என்பதாலேயே வரலாறுகள் இணைக்கப்பட வேண்டும்.

எவ்வாறு இணைக்கலாம்[தொகு]

ஒரு நீக்கப்பட்ட கட்டுரையை மீட்டெடுக்கும்போது முன்னர் அதே தலைப்பில் இருந்து நீக்கப்பட்ட வரலாறுகளும் மீட்கப்படுகின்றன. அவ்வகையில் இரு கட்டுரை வரலாறுகளை இணைக்க இரண்டையும் ஒரே தலைப்பில் வைத்து நீக்கிப் பின்னர் மீட்க வேண்டும். இவ்வாறு நீக்கும்போது திருத்தமான கட்டுரையைக் கடைசியாக நீக்க வேண்டும்

ஒரே தலைப்பில் இருக்க வேண்டிய தகவல்கள் வெவ்வேறு தலைப்புக்களில் இருக்கும்போது முதலாவதாக இரு பக்கங்களையும் ஒப்பிட்டு எந்தத் தகவல்களும் விடுபடாதவாறு ஒரு கட்டுரையை திருத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு திருத்தப்பட்ட பக்கம் முதன்மைத் தலைப்புடையதாக இருந்தால் அதனை இரண்டாவது தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும்போது இரண்டாவது தலைப்பு கொண்ட பக்கம் நீக்கப்படும்) பின்னர் மீண்டும் இரண்டாவது தலைப்புப் பக்கத்தை நீக்கிப் பின்னர் பக்கத்தை முழுமையான வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீட்ட பக்கத்தை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்திவிட வேண்டும்.

திருத்தப்பட்ட பக்கம் இரண்டாவது தலைப்புக் கொண்டதாக இருந்தால் அதனை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும் போது பழைய கட்டுரை நீக்கப்படும்) பின்னர் நீக்கிவிட்டு முழு வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் முறை[தொகு]

  1. இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைபை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள்
  2. அக்கட்டுரையை முதன்மைக் கட்டுரையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை, முக்கியமான தகவல் இழப்புக்கள் எதுவும் இல்லாதவாறு, இரண்டாவது கட்டுரையில் இருக்கும் உள்ளடக்கத்தினுள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. அவ்வாறு உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்ட இரண்டாவது கட்டுரையை, சரியான தலைப்பிற்கு, அதாவது முதன்மைக் கட்டுரையின் தலைப்பிற்கு நகர்த்துங்கள்.
  5. அவ்வாறு நகர்த்தும்போது, அக்கட்டுரை ஏற்கனவே உள்ளது அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கப்படுவீர்கள்.
  6. அதற்கு 'ஆம், இப்பக்கத்தை நீக்குக' என்பதைக் குறித்துவிட்டு, 'நீக்கிவிட்டு நகர்த்து' என்ற பொத்தானை அழுத்துங்கள்.
  7. பின்னர் அவ்வாறு நகர்த்திய முதன்மைக் கட்டுரையையும் நீக்குங்கள். அப்போது அதற்கான காரணமாக 'இருவேறு பக்கங்களை இணைக்கும்பொருட்டு' என்ற காரணத்தைக் கொடுங்கள்.
  8. நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின், அண்மைய நீக்குதல்களின் பதிவுக்கு நீக்கல் பதிவு ஐப் பார்க்க என்ற தகவல் கிடைக்கும்.
  9. அதில் நீங்கள் நீக்கிய முதன்மைக் கட்டுரையைத் தெரிவுசெய்து, பார்க்க/மீட்டெடு என்ற இணைப்பை அழுத்துங்கள் அழுத்தவும்.
  10. அதில 'கட்டுரைகளை இணைக்க' என்ற காரணத்தைக் கொடுத்த பின்னர், 'மீட்டெடு' அன்பதனை அழுத்துங்கள்.
  11. தற்போது கட்டுரை இரு கட்டுரைகளின் வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.

பயனுள்ள வார்ப்புரு[தொகு]

  • {{mergeto|title}}
  • {{mergefrom|title}}

உதாரணத்திற்க்கு 'கட்டுரை 1' என்னும் தலைப்புடைய கட்டுரையை 'கட்டுரை 2' என்னும் தலைப்புடைய கட்டுரையுடன் இணைக்க, இவ்வாறு வார்ப்புரு இடவும். இந்த உதாரணத்தில் 'கட்டுரை 1' என்பது நீக்கப்பட வேண்டிய கட்டுரையின் தலைப்பு. 'கட்டுரை 2' என்பது முதன்மைக் கட்டுரையின் தலைப்பு.

'கட்டுரை 1' என்னும் பக்கதை தொகுத்து {{mergeto|கட்டுரை 2}} என்று வார்ப்புரு இடவும்.

'கட்டுரை 2' என்னும் பக்கதை தொகுத்து {{mergefrom|கட்டுரை 1}} என்று வார்ப்புரு இடவும்.

அவை இவ்வாறு தோற்றமளிக்கும்.

அந்த கட்டுரை ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் என்ற பகுப்பில் சேர்க்கப்படும். இதன் மூலம் அக்கட்டுரை விரைவில் ஒன்றிணைக்கப்படும்.