உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


  • விக்கிப்பீடியாவை யாரும் தொகுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்லது நகர்த்த முடியும். ஆங்கில விக்கிப்பீடியாவில் கணக்குள்ள பயனர்கள்தான் கட்டுரைகளை ஆரம்பிக்க முடியும், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையை தொடங்க கணக்கு உருவாக்க வேண்டிய கட்டாயமில்லை.
  • நிர்வாகிகளுக்கு பக்கங்களை நீக்குவது, பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது போன்ற மேலதிக அனுமதிகள் உண்டு.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகி அணுக்கத்தை வழங்கக்கூடிய நான்கு "அதிகாரிகள்" உள்ளனர். ஆங்கில விக்கிப்பீடியாவில் மேலதிக சில கட்டமைப்புகளும் உண்டு. (இப்படி பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் தன்னார்வலர்களே. எவ்வளவு பொறுப்பை நீங்கள் ஏற்கின்றீர்கள், எவ்வளவு நேரத்தை தர முன்வருகின்றீர்கள், எப்படி சமூகத்தில் இயங்குகின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த வித்தியாசங்களும் அமைகின்றன. மற்றப்படி அனைவரும் பயனர்களே).
  • எந்த ஒரு மாற்றமும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பிரதிபலிக்கும். எந்த ஒரு பயனரும் அம்மாற்றங்களை கவனித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
  • ஒவ்வொரு பயனரும் தனக்கு முக்கியமான கட்டுரைகளை தனது கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம். அக்கட்டுரைகளில் எவற்றையாவது யாரேனும் மாற்றும் பொழுது அம்மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அந்த பயனர் மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது புகுபதிகை செய்யும் பொழுதோ பெற்று நடவடிக்கை எடுக்கலாம்.
  • தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் அவ்வப்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழும் மாற்றங்களை கவனித்த வண்ணமே இருப்பார்கள். ஆரோக்கியமற்ற மாற்றங்கள் இடம்பெறும் பொழுது அவற்றை அவர்கள் சீர்செய்ய முயல்வார்கள்.
  • ஒரு சில குறிப்பிட்ட பக்கங்கள் அடிக்கடி கீழ்த்தரமான மாற்றங்களுக்கு உட்படுமானால் அப்பக்கங்களை பூட்டு போட்டு வைக்கலாம். அதாவது நிர்வாகிகளைத் தவிர பொது பயனர்கள் மாற்ற முடியாதபடி தொகுப்புப் பக்கத்தை முடக்க முடியும். மேலும், முதற் பக்கம் போன்ற முக்கிய சில பக்கங்கள் இப்படி பூட்டு போடப்பட்டவையே.
  • சில பயனர்கள் வேண்டும் என்றே தொடர் விசமத்தன வேலைகளில் ஈடுபட்டால் அவர்களின் ஐபி முகவரி அல்லது பயனர் கணக்கை நிலையாகவோ குறிப்பிட்ட காலத்துக்கோ தடை செய்யலாம்.

கட்டுப்பாடுகளை படிப்படியாக தேவைக்கேற்ப உபயோகப்படுத்த முடியும். தமிழ் விக்கிப்பீடியா தமிழ் ஆர்வலர்களிடம் பரந்த ஆதரவை கொண்டிருப்பதாகவே உணர்கின்றோம். குறைகள் இருந்தால் நேரடியாக கலந்துரையாடி சரி செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.