விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 • விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதற்கான விளக்கப் பக்கங்களின் பெயர்கள் "விக்கிப்பீடியா:" என்று தொடங்கவேண்டும்.


விக்கிப்பீடியா:தேடல் உதவி - சரியான பெயரிடல் மரபு.
தேடல் உதவி - தவறான பெயரிடல் மரபு.
 • விக்கிப்பீடியா பக்கங்களின் பெயர்கள் / (கட்டுரைத்தலைப்புகள்)
  • தமிழில் இருக்க வேண்டும்.


ஏ. ஆர். ரகுமான் - சரியான பெயரிடல் மரபு.
A. R. Rahman - தவறான பெயரிடல் மரபு.
  • பெயர்களின் தலைப்பு எழுத்துகள் தமிழில் இருக்க வேண்டும்.
எம். எஸ். சுப்புலட்சுமி - தவறான பெயரிடல் மரபு.
ம. ச. சுப்புலட்சுமி - சரியான பெயரிடல் மரபு.

அதே வேளை, தலைப்பு (முன்னொட்டு) எழுத்துகளின் விரிவாக்கங்கள் தெரியாத இடத்து நேரடியாகப் பிழையாகத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுதல் ஆகாது. எடுத்துக்காட்டுக்கு, கே. எம். ரவிக்குமாரின் தலைப்பு எழுத்து விரிவாக்கங்கள் தெரியாத இடத்து க. ம. ரவிக்குமார் என்று எழுதலாகாது.

  • கூட்டுப் பெயர்கள் பொதுவாக பன்மையில் இருக்க வேண்டும், மற்ற தலைப்புகள் ஒருமையிலேயே இருக்க வேண்டும்.


ஆழ்வார்கள் - சரியான பெயரிடல் மரபு.
ஆழ்வார் - தவறான பெயரிடல் மரபு.
ஏரி - சரியான பெயரிடல் மரபு.
ஏரிகள் - தவறான பெயரிடல் மரபு.
  • தெளிவாக இருக்க வேண்டும்.


ரோசா (மலர்) - சரியான பெயரிடல் மரபு.
ரோசா (திரைப்பட நடிகை) - சரியான பெயரிடல் மரபு.
ரோசா (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
தமிழ் இலக்கியம் என்ற தலைப்புடைய நூல் குறித்த கட்டுரையின் தலைப்பு, தமிழ் இலக்கியம் (நூல்) என்று இருத்தல் வேண்டும்; இவ்விடத்தில், தமிழ் இலக்கியம் என்ற கட்டுரைத் தலைப்பு குழப்பம் விளைவிப்பதாகவும் கட்டுரை உள்ளடக்கம் குறித்த தவறான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்கும்.
  • முதலெழுத்துப் புள்ளிக்கு அடுத்து வெற்றிடம் விடுக


ஈ. வெ. ராமசாமி - சரியான பெயரிடல் மரபு.
ஈ.வெ.ராமசாமி - தவறான பெயரிடல் மரபு.
ஈ. வெ.ராமசாமி - தவறான பெயரிடல் மரபு.

முதலெழுத்துகளிடையே இடைவெளி இல்லையெனில் ”ஈ.வெ.ராமசாமி” ஒரே சொல்லாகக் கருதப்படும். அகரவரிசைப் படுத்த, இந்த இடைவெளி தேவை. இடைவெளி இல்லையென்றால் இது “ஈ” இல் தொடங்கும் பெயராகி விடும். தென்னிந்தியாவின் முன்னெழுத்து பெயரிடல் மரபுக்கும் உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரு சொல் பெயரிடல் மரபுக்கும் ஒரு பொதுமை வேண்டுமென்பதற்காக இந்த இடைவெளி முறை பின்பற்றப்படுகிறது

  • கூடுமான வரை பட்டப் பெயர்களை தவிர்க்கவும்


ஜெ. ஜெயலலிதா - சரியான பெயரிடல் மரபு.
புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா - தவறான பெயரிடல் மரபு.


  • கூடிய மட்டிலும் மூல மொழியின் பலுக்கலுக்கு (அல்) உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழ் ஒலிபெயர்ப்பும் இருத்தல் வேண்டும்.


ரொறன்ரோ-சரியான பெயரிடல் மரபு (இலங்கை).
டொராண்ட்டோ-சரியான பெயரிடல் மரபு (தமிழ் நாடு)
ரொரன்ரோ-தவறான பெயரிடல் மரபு.
ரொரன்டோ-தவறான பெயரிடல் மரபு.
ரொரண்டோ-தவறான பெயரிடல் மரபு.
ரொறன்டோ-தவறான பெயரிடல் மரபு.
ரொறண்டோ-தவறான பெயரிடல் மரபு.


  • பட்டப்பெயர்களை இராணுவ தரங்களை தலைப்புக்களில் தவிர்க்க.
லெப்டினன் கேணல் திலீபன் - தவறான பெயரிடல் மரபு.
திலீபன் - சரியான பெயரிடல் மரபு.
  • அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம்.
பிற மொழி வணிகப் பெயர்கள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை நிறுவன ஏற்பற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்.


கூகுள் எர்த் - சரியான பெயரிடல் மரபு.
கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
லைஃவ் ஈசு பியூட்டிஃவுல் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
வாழ்க்கை அழகாக இருக்கிறது (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :)!.


மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவரும் பிறமொழித் திரைப்படங்களின் தமிழ்ப்பெயர்கள் பழக்கம் இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் குழப்பம் விளைவிக்கக்கூடும் என்பதாலும் தவிர்க்கலாம்.

சவோலின் சாக்கர் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
மிரட்டல் அடி (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :) - தமிழாக்கப்பட்டு வெளிவரும் திரைப்படங்களுக்கு வணிகக் காரணங்களுக்காக வேடிக்கையான மூலத் திரைப்படத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பெயரிடுவது உண்டு. அவற்றை தவிர்க்கலாம்.

மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவந்து தமிழ்ப் பெயரிலேயே பரவலமான (பிரபலமான) நூல்களுக்கு மட்டும் தமிழ்ப் பெயரிலேயே கட்டுரை தொடங்கலாம்.

சத்திய சோதனை - சரியான பெயரிடல் மரபு.
இந்தியக் கண்டுபிடிப்பு - தவறான பெயரிடல் மரபு :) (இப்படி Discovery of india நூலின் பெயரை தமிழாக்கலாம் என்று கொள்ளும்பொழுதும்!)