விக்கிப்பீடியா:தணிக்கை
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஏற்ப செய்யப்படும் வழமையான மாற்றங்களைத் தவிர, எவ்வகையான புற அழுத்தங்களை ஒட்டியும் தமிழ் விக்கிப்பீடியா தன்னை தணிக்கை செய்து கொள்வதில்லை. அவ்வாறு செய்வது விக்கிப்பீடியாவின் அடிப்படை நோக்கத்துக்கு முரணாகவே அமையும்
எனினும், ஏற்கனவே இருக்கும் உள்ளடக்கங்களை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு மட்டும் சில அடிப்படை வழிகாட்டல்களைப் பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது.
அவையாவன:
- முதற்பக்கம் அனைத்து வயதினரும் பார்க்கும் வகையிலான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
- சில வகை உள்ளடக்கங்களின் காரணமாக தங்களுக்குத் தனிப்பட்ட வகையில் பாதிப்பு வரலாம் என்று பயனர்களில் ஒரு சிலர் கவலை தெரிவிக்கும் போது, அத்தகைய உள்ளடக்கத்தை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதா வேண்டாமா என்பது மற்ற பங்களிப்பாளர்களின் தனிப்பட்ட முடிவாக இருக்கும். தனிப்பட்ட பங்களிப்பாளர்களின் மதிப்பீட்டின் படி காட்சிப்படுத்தப்படும் உள்ளடக்கத்தை இக்காரணத்தைக் காட்டி தணிக்கை செய்ய கோருவதோ தொகுப்பை மீள்விப்பதோ கூடாது. இத்தகைய கவலைகளை ஒட்டிய வேண்டுகோள்களை முதற்பக்க உள்ளடக்கம் தொடர்பான பக்கங்களின் பேச்சுப் பக்கங்களின் தொடக்கத்தில் இடலாம்.
மேற்கண்ட இரு பரிந்துரைகளும் முதற்பக்க உள்ளடக்கத்துக்கு மட்டுமே பொருந்தும். மற்ற பெயர்வெளிகள், கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களுக்குப் பொருந்தாது. அவை வழமையான விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு உட்பட்டே இருக்கும்.