விக்கிப்பீடியா:கைப்பாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Green check.svg இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழி:
WP:SOCK


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


 • விக்கிப்பீடியாவில் ஒரு பயனர் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்தி பங்களிக்க வேண்டும்.
 • இவ்விதிக்கு கீழ்காணும் விதிவிலக்குகள் உண்டு:
 1. தானியங்கி ஓட்டத்துக்காக தனிக்கணக்கு தொடங்கலாம்
 2. குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் மட்டும் பங்கு பெற தனி கணக்கு தேவையெனில் தொடங்கிப் பயன்படுத்தலாம்
 3. கணினி/இணையப் பாதுகாப்பு குறைந்த வெளிச்சூழல்களிலும், பொதுக் கணினிகளில் இருந்தும் பங்களிக்க தனிக்கணக்கு தொடங்கலாம்.
 4. பழைய கணக்கின் கடவுச்சொல் தொலைந்து போய், மீட்டெடுக்க முடியவில்லையெனில் புதுக்கணக்கு தொடங்கலாம்.
 5. சர்ச்சைக்குரிய தலைப்புகளைத் தொகுப்பது வெளியில் தெரிந்தால் உயிர், உடைமை, நற்பெயர் போன்றவற்றுக்கு ஊறு விளையும் எனக் கருதினால், வேறு கணக்கு கொண்டு தொகுக்கலாம்
 • ஆனால் மேற்சொன்ன விதிவிலக்குகளில் பழைய/முதன்மை கணக்கு என்ன என்பதைத் தெளிவாக பயனர் பக்கத்திலோ வெளிப்படையாகவோ, நிருவாகிகளுக்கோ குறிப்பிட/தெரியப்படுத்த வேண்டும்.
 • பங்களிப்பாளர் யார் என்பதை மறைக்க புகுபதிகை செய்யாமல் ஐபி முகவரியாகத் தொகுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
 • ஒரு கருத்தினை பலர் ஆதரிக்கின்றனர் என்ற பிம்பத்தை உருவாக்க வேறு கணக்குகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்
 • ஒரு கருத்தினை பலர் ஆதரிக்கின்றனர் என்று காட்ட விக்கிக்கு வெளியில் பரப்புரை செய்து ஆள் திரட்டி வருவதைத் தவிர்க்க வேண்டும்.
 • எக்காரணத்தினாலோ கணக்கு தடை செய்யப்பட்டால், தடையை மீறுவதற்கு இன்னொரு கணக்கை உருவாக்கக் கூடாது. தடையை விலக்க விண்ணப்பித்தோ அல்லது தடை நீங்கும் வரை காத்திருந்த பின்னரோ மீண்டும் பங்களிக்கலாம்.
 • மேற்குறிப்பிட்ட விதிகளை மீறி ஒருவர் உருவாக்கும் பிற கணக்குகள் “கைப்பாவைகள்” (Sockpuppets) எனப்படும். உருவாக்குபவர் “ஆட்டுவிப்பவர்” (Sockmaster) என அழைக்கப்படுவார். தனக்கு ஆதரவாக ஆட்டுவிப்பவர் திரட்டி வரும் வெளியாட்கள் “கையாட்கள்” (Meatpuppets) எனப்படுவர்.
 • செயல்பாடுகள் மூலமாகவோ, பயனர் சோதனை (checkuser) மூலமாகவோ ஒருவர் பல கணக்குகளை பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்தால், கைப்பாவை மற்றும் கையாள் கணக்குகள் முடிவிலியாகத் தடைசெய்யப்படும்; ஆட்டுவிப்பவர் முதலில் ஒரு வார காலத்துக்கு தடை செய்யப்படுவார். தொடர்ந்து கைப்பாவைகளை உருவாக்கினால் அவரது தடை முடிவிலியாக்கப்படும்.
 • கைப்பாவை கணக்கின் மூலம் எழுதிய பேச்சுப் பக்க உரையாடல்களை கோடிட்டு அடித்துக் காட்டலாம். வேண்டுமானால், அவ்வுரையாடல் விக்கிப்பீடியா நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமேயானால், கைப்பாவை கணக்கை இயக்கிய பயனர் தனது உண்மையான பயனர் கணக்கின் மூலம் வந்து அக்கருத்துகளை மீளப் பதியலாம்.
 • கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.

ஒரே IP-ஐ பகிர்தல்[தொகு]

குடும்பத்தினரோ, நண்பர்களோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருப்போரோ ஒரே IP-ஐ பயன்படுத்தும் வேலைகளில்:

 • ஒரே IP-ஐ பயன்படுத்தும் இரு பயனர் கணக்குகள் தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை தங்களின் பயனர் பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும். (இதை {{User shared IP address}} கொண்டு செய்யலாம்.)
 • இரு கணக்குகளும் ஒரே நோக்கோடு தொகுப்பது, விவாதங்களில் பங்கேற்பது, சச்சரவுகள் ஏற்படின் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
 • தொகுப்பு எச்சரிக்கை (edit warring) விடுவது குறித்த நடைமுறை விதிகளின் கீழ் இக்கணக்குகள் ஒரேகணக்காகக் கருதப்படும்.
 • ஒரு கணக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட (edit warring) அதே செயலை மற்றக் கணக்கும் செய்வதை தவிற்க வேண்டும். இவ்விதியினை மீறினால் இக்கணக்குகள் கைப்பவையாகக் கருதப்படும்.
 • தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்த விரும்பாதோர் ஒரே துறைசார் கட்டுரைகளைத் தொகுப்பதையோ அல்லது சச்சரவுகளின் விவாதங்களில் பங்கேற்பதையோ தவிர்க்கவேண்டும்.