விக்கிப்பீடியா பேச்சு:கைப்பாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//3. பாதுகாப்பு குறைந்த வெளிச்சூழல்களிலும்...// இங்கு பாதுகாப்பு என்பது (உயிர், உடைமை) பாதுகாப்பு என்பது சரியா? -- மாகிர் 13:45, 27 ஏப்ரல் 2011 (UTC)

கணினி/இணையப் பாதுகாப்பு என்ற பொருளில் வர வேண்டும். மாற்றி விடுகிறேன். இது வை ஃபை, மாற்றார் கணினி போன்ற வற்றை பயன்படுத்தும் போது கடவுச்சொலை இட தயக்கமாக உள்ள சூழ்நிலைக்காக --சோடாபாட்டில்உரையாடுக 13:52, 27 ஏப்ரல் 2011 (UTC)
சர்ச்சைக்குரிய சில கட்டுரைகளில் உயிர், உடைமை சார்ந்த பாதுகாப்பு கருதி இன்னொரு கணக்கு வைத்துக்கொள்ள விக்கிகொள்கை அனுமதிப்பதாக (அல்லது அது தொடர்பாக) எங்கோ படித்த நினைவு. -- மாகிர் 14:58, 27 ஏப்ரல் 2011 (UTC)
ஆங்கில விதிமுறைகளில் உள்ளது. நான் தான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:00, 27 ஏப்ரல் 2011 (UTC)

கைப்பாவையின் பேச்சுப் பக்க உரையாடல்கள் பற்றிய கொள்கை[தொகு]

"கைப்பாவை கணக்கின் மூலம் எழுதிய பேச்சுப் பக்க உரையாடல்களை கோடிட்டு அடித்துக் காட்டலாம். வேண்டுமானால், அவ்வுரையாடல் விக்கிப்பீடியா நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமேயானால், கைப்பாவை கணக்கை இயக்கிய பயனர் தனது உண்மையான பயனர் கணக்கின் மூலம் வந்து அக்கருத்துகளை மீளப் பதியலாம்".

மேற்கண்ட வழிகாட்டலை கொள்கைப்பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:58, 8 ஏப்ரல் 2014 (UTC)

ஏற்கத்தக்கதாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 11:59, 11 ஏப்ரல் 2014 (UTC)
நன்றி, சுந்தர். மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லா நிலையில், இன்னும் ஒரு வார காலத்தில் இச்சேர்க்கை கொள்கை பக்கத்தில் இடம்பெறும். நன்றி.--இரவி (பேச்சு) 10:58, 13 ஏப்ரல் 2014 (UTC)
மேற்கண்ட உரையாடலுக்கு இணங்க கொள்கையில் கூடுதல் வழிகாட்டல் சேர்க்கப்பட்டுள்ளது..--இரவி (பேச்சு) 10:47, 21 ஏப்ரல் 2014 (UTC)

ஒரே IP-ஐ பயன்படுத்தும் இரு பயனர் கணக்குகள்[தொகு]

ஒரே IP-ஐ பயன்படுத்தும் இரு பயனர் கணக்குகள் குறித்த ஆங்கில விக்கி வழிகாட்டுதல்கள் இங்கு உள்ளன. தமிழ் விக்கியிலும் அதை கடைபிடிக்கலாமே?

குடும்பத்தினரோ, நண்பர்களோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருப்போரோ ஒரே IP-ஐ பயன்படுத்தும் வேலைகளில்:

  • ஒரே IP-ஐ பயன்படுத்தும் இரு பயனர் கணக்குகள் தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை தங்களின் பயனர் பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும். (இதை {{User shared IP address}} கொண்டு செய்யலாம்.)
  • இரு கணக்குகளும் ஒரே நோக்கோடு தொகுப்பது, விவாதங்களில் பங்கேற்பது, சச்சரவுகள் ஏற்படின் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
  • தொகுப்பு எச்சரிக்கை (edit warring) விடுவது குறித்த நடைமுறை விதிகளின் கீழ் இக்கணக்குகள் ஒரேகணக்காகக் கருதப்படும்.
  • ஒரு கணக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட (edit warring) அதே செயலை மற்றக் கணக்கும் செய்வதை தவிற்க வேண்டும். இவ்விதியினை மீறினால் இக்கணக்குகள் கைப்பவையாகக் கருதப்படும்.
  • தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்த விறும்பாதோர் ஒரே துறைசார் கட்டுரைகளைத் தொகுப்பதையோ அல்லது சச்சரவுகளின் விவாதங்களில் பங்கேற்பதையோ தவிர்க்கவேண்டும்.

--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 20:15, 13 சூலை 2014 (UTC)

👍 விருப்பம். திலக்சன் விடயத்தில் விளக்கம் கேட்க வேண்டும்.--Kanags \உரையாடுக 20:56, 13 சூலை 2014 (UTC)
திரு.Kanags, பயனர்:Thilakshan, என்னைத் தொடர்பு கொண்டு உதவி வேண்டினார், ஆதலால் ஆலமரத்தடியில் மேல்முறையீடு செய்யது திரு. AntanO மற்றும் பிற நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கச்சொன்னேன். ஆனால் அவரால் இப்போது எப்பக்கத்தையும் தொகுக்க இயலவில்லை எனவும், ஆதாலால் மேல் முறையீடு செய்ய என்ன செய்யவேண்டும் எனவும் கேட்டுள்ளார். அவரின் கணக்கு தடை செய்யப்படாதிருப்பினும், தடை செய்யப்பட்ட 83.76.129.25 IPஐ பயன்படுத்துவதால் இது நிகழ்வதாக அறிவிப்பு வருகின்றதாம். (அவர் static IP பயன்படுத்துபவராக இருக்கலாம், மேலதிக தகவல் இல்லாததால் சரியாக கனிக்க இயலவில்லை) என்ன செய்வது என வழிகாட்டவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:07, 14 சூலை 2014 (UTC)
அன்ரன், இரவி கவனிக்க.--Kanags \உரையாடுக 08:16, 14 சூலை 2014 (UTC)
மற்றவர்களுக்கு ஆட்சேபனை இல்லாதுவிட்டால் ஜெயரத்தின மாதரசன் தொகுத்துள்ளவற்றை கடைப்பிடிக்கலாம். திலக்சன் என் முகநூலுக்கும் தான் மீண்டும் தடை செய்யப்பட்டிருப்பதாக செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் தற்போது தொகுக்கிறார். திலக்சன் விடயத்தில் விளக்கம் கேட்டு விதிகளுக்குக் கட்டுப்படுவாராயின் மற்ற கணக்கின் தடையை நீக்கி ஜெயரத்தினா உருவாக்கியுள்ள {{User shared IP address}} வார்ப்புரு மூலம் குறிப்பிடலாம். ஆனால் திலக்சன் பழைய கட்டுரைகள் இருக்க புதுக்கட்டுரைகளை உருவாக்கும் முனைப்பும், பிழையான தலைப்பிடுதல் போன்ற ஆரம்பகால பிழைகள் விடயத்தில் என்ன செய்வது? மற்றப் பயனர்களும் ஆலோசனை வழங்குங்கள். திலக்சன் பேச்சுப்பக்கத்தில் உரையாடலைத் தொடரலாமா? --AntonTalk 03:26, 15 சூலை 2014 (UTC)
விசமத்தனமான, சர்ச்சைக்குரிய தொகுப்புகள் இருந்தால் மட்டும் உடனடியாக கைப்பாவை கொள்கையின் அடிப்படையில் தடுக்கலாம். மற்றபடி, விளக்கம் அளிப்பதற்கு ஒரு வாரம் அளித்து, அதன் பிறகு தடுக்கலாம். ஒரே IPயில் இருந்து உண்மையிலேயே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தொகுக்கிறார்கள் என்பதை எப்படி உறுதி செய்வது?--இரவி (பேச்சு) 05:16, 15 சூலை 2014 (UTC)