செம்மல்
Appearance
செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.[1] உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது.[2]
செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று.