சுள்ளி மலர்
சுள்ளி மலர் | |
---|---|
சுள்ளி மலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. prionitis
|
இருசொற் பெயரீடு | |
Barleria prionitis L.[1] L |
சுள்ளி அல்லது செம்முள்ளி(தாவரவியல் பெயர்: Barleria prionitis[2]) பற்றிய குறிப்பு சங்கப்பாடல்களில் இரண்டு இடங்களில் மட்டும் உள்ளது.[3]
குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் 99 மலர்களில் ஒன்று என்பது ஒரு குறிப்பு.[4]
குறிஞ்சி நில மகளிர் கூந்தலில் சூடிக்கொண்ட மலர்கள் என்று திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்றாக இருப்பது மற்றொரு குறிப்பு.
சுள்ளி, சுனையில் பூக்கும் நீலம், சோபாலிகை, செயலை ஆகிய 4 மலர்கள் மகளிர் சூடிக்கொண்டதாக இந்தப் பாடல் தெரிவிக்கிறது. [5]
இதில் உள்ள ‘சுள்ளி’ என்னும் மலரை ‘ஞாழல்’ என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[6]
குறிஞ்சிப்பாட்டு தொகுத்துக் கூறும் 99 மலர்களில் சுள்ளி மலரும், ஞாழல் மலரும் வெவ்வேறாகக் காட்டப்பட்டிருப்பதால் சுள்ளி மலரை ஞாழல் மலர் எனக் கொள்ள வழி இல்லை.
சுள்ளி என்னும் சொல்லால் காய்ந்து கிடக்கும் சிறு குச்சி-விறகைக் குறிக்கும் வழக்கு இக்காலத்திலும் உண்டு.
எனவே, இந்த மலர், குச்சி போல் மலரும் நாயுருவி மலர் என்பது பொருத்தமானது.
இந்த மலர் 'சுள்' என்று விலங்குகளின் உடலிலும், மக்களின் ஆடைகளிலும் தைத்துப் பற்றிச் சென்று தன் இனத்தை பரப்பிக்கொள்கிறது. 'சுள்' என்று தைப்பதாலும் இதனைச் சுள்ளி என்றனர் எனக் கண்டு இந்தச் செடிப் பெயருக்கு அரண் சேர்க்கலாம்.[சான்று தேவை]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "Barleria prionitis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2024.
"Barleria prionitis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2024. - ↑ "Barleria prionitis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2024.
"Barleria prionitis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச்சு 2024. - ↑ INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)
- ↑ குறிஞ்சிப்பாட்டு அடி 66
- ↑ <poem> சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதணால் கடிந்தான் உளன். - திணைமாலை நூற்றைம்பது 2
- ↑ http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:1713.tamillex[தொடர்பிழந்த இணைப்பு]