உள்ளடக்கத்துக்குச் செல்

உலகத் தாவரங்கள் இணைநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகத் தாவரங்கள் இணைநிலை
Plants of the World Online
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ
வணிக நோக்கம்No
வெளியீடுமார்ச்சு 2017; 7 ஆண்டுகளுக்கு முன்னர் (2017-03)
உரலிPlants of the World Online


உலகத் தாவரங்கள் இணைநிலை (POWO = Plants of the World Online) என்பது தாவர இனங்களின் இணைநிலை தரவுதளம் ஆகும்.[1] இணையத்தில் இந்த இணையதள தரவுப்பக்கங்களை, அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ பேணுகிறது. 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இத்தளத்தினை உலகினருக்கு அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய தொடக்க இலக்கு யாதெனில், “க்க2020 ஆம் ஆண்டுக்குள் உலக வித்துத் தாவரங்கள் குறித்த செய்திகளை ஒருங்கிணைத்து, தனது பயனர்களுக்கு தருதல்” ஆகும். எனவே, முதல் இலக்காக, வெப்ப வலயத்திலுள்ள ஆப்பிரிக்க தாவர வளங்களை ஒருங்கிணைத்தது. குறிப்பாக சாம்பேசியகா (Zambesiaca) தாவரவளம், கிழக்கு; மேற்கு ஆப்பிரிக்கத் தாவர வளங்கள் ஒருங்கிணைத்தல் ஆகும்.

இதன் தாவரத் தரவுதளமானது, பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு தரவுகள் உள்ள தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டியை பயன்படுத்திக் கொண்டது. மேலும், அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ (WCVP) தரவுகளும் அடங்கியுள்ளன.[2] தற்போது இத்தளத்தில், 14, 25, 000 தாவரங்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாவரவியல் பெயர்கள் உள்ளன. அவற்றில் 2, 02, 400 தாவர விவரங்களும், 3, 86, 600 தா்வரங்களின் படங்களும் கட்டற்ற உரிமத்தில் உள்ளன.

இவற்றையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Plants of the World Online | Kew Science". Plants of the World Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச்சு 2024.
  2. Holz, Hanna; Segar, Josiane; Valdez, Jose; Staude, Ingmar R. (2022). "Assessing extinction risk across the geographic ranges of plant species in Europe". Plant, People, Planet 4 (3): 303–311. doi:10.1002/ppp3.10251. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகத்_தாவரங்கள்_இணைநிலை&oldid=3900602" இலிருந்து மீள்விக்கப்பட்டது