தளவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தளவம்
(MHNT) Jasminum polyanthum – flowers and buds.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Oleaceae
பேரினம்: Jasminum
இனம்: J. polyanthum
இருசொற் பெயரீடு
Jasminum polyanthum
Franch.
தளவம், சூடும் கண்ணி

சங்ககாலத்தில் தளவம் [பிச்சிப்பூ] என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்த மலர் இக்காலத்தில் செம்முல்லை என வழங்கப்படுகிறது. இதனைச் சாமந்தி என வழங்குகின்றனர். செவ்வந்தி எனப்படும் பூ வேறு.

பெயர் விளக்கம்
தளவ மலரின் மொட்டுகள் சிவப்பாக இருக்கும். அதாவது பூவிதழின் புறத்தோற்றம் சிவப்பாக இருக்கும். மலர்ந்ததும் ஒவ்வொரு பூவிதழின் அகத்தோற்றமும் வெண்மையாக இருக்கும். இவ்வாறு பூவிதழின் தளம் மாறுபடுவதால் இதனைத் தளவம் என்றனர்.
இது முல்லைப் பூவின் இனம். இந்த முல்லை-மொட்டு செந்நிறத்தில் இருப்பதால் இதனைச் செம்முல்லை என்றனர்.

சங்ககாலச் செய்திகள்[தொகு]

  • சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் தளவமும் ஒன்று.[1]
  • விளக்கப் பெயர்கள்
தளவமுல்லை [2]
அவிழ்தளவின் அகன்தோன்றி நகுமுல்லை [3]
  • தளவம் கொடியில் பூக்கும்.[4] புதர்மேல் படரும்.[5] பனியில் பூக்கும்.[6]
  • நூல்: புறநானூறு (335)
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை
[விளக்கம் - பூக்கள் என்றால் குரவு, தளவு, குருந்து, முல்லை என்று இவற்றையே சிறப்பாகக் குறிப்பிடுவர்.]
  • சிரல்(மரங்கொத்தி)ப் பறவையின் வாய்போலச் சிவந்திருக்கும் [7][8]
  • பல்வகையான பூக்களோடு மலரும்.[9][10][11][12]
  • பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் குடிப்பூ தளவம்.[13]
  • தளவம்பூ பூத்தலை ‘நனைதல்’ என்பர்.[14] ‘பிணி அவிழ்தல்’ என்பர் [15]

மேலும் குறிப்புகள் [16][17][18][19][20]

இவற்றையும் காண்க[தொகு]

சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. குறிஞ்சிப்பாட்டு - அடி 80
  2. அகநானூறு 254-15,
  3. பொருநராற்றுப்படை 199
  4. தவழ்கொடித் தளவம் - கலித்தொகை 102-2,
  5. புதல் இவர் தளவம் - நற்றிணை 242,
  6. பனிப்பூந் தளவம் - கலித்தொகை 108-42
  7. நற்றிணை 61,
  8. பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை - ஐங்குறுநூறு 447,
  9. முல்லைக் கொடியொடு தழுவி வளரும் ஐங்குறுநூறு 454,
  10. புதல்மிசைத் தளவின் இதல்முள் நெடுநனை (பிடவம் பூவோடு சேர்ந்து மலரும்) அகநானூறு 23-3,
  11. ஐங்குறுநூறு 412,
  12. தோன்றியொடு தளவம் ஐங்குறுநூறு 440, கொன்றை, காயா, வெட்சி, தளவம் - கலித்தொகை 103-2,
  13. ‘புதல் தளவின் பூ’ புறநானூறு 395-6, 335
  14. ஐங்குறுநூறு 499,
  15. தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி - அகநானூறு 64-4,
  16. ஐந்திணை எழுபது 24,
  17. கார்நாற்பது 36,
  18. திணைமாலை 93, 105, 110, 116
  19. சிலப்பதிகாரம் 13-155,
  20. மணிமேகலை 3-143, 19-93
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளவம்&oldid=3405090" இருந்து மீள்விக்கப்பட்டது