சிவந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவந்தி
Chrysanthemum sp
Chrysanthemum sp
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Asterales
குடும்பம்: Asteraceae
Tribe: Anthemideae
பேரினம்: Chrysanthemum
மாதிரி_இனம்
Chrysanthemum indicum L.
Species

Chrysanthemum aphrodite
Chrysanthemum arcticum
Chrysanthemum argyrophyllum
Chrysanthemum arisanense
Chrysanthemum boreale
Chrysanthemum chalchingolicum
Chrysanthemum chanetii
Chrysanthemum cinerariaefolium
Chrysanthemum coccineum
Chrysanthemum coronarium
Chrysanthemum crassum
Chrysanthemum glabriusculum
Chrysanthemum hypargyrum
Chrysanthemum indicum
Chrysanthemum japonense
Chrysanthemum japonicum
Chrysanthemum lavandulifolium
Chrysanthemum mawii
Chrysanthemum maximowiczii
Chrysanthemum mongolicum
Chrysanthemum morifolium
Chrysanthemum morii
Chrysanthemum okiense
Chrysanthemum oreastrum
Chrysanthemum ornatum
Chrysanthemum pacificum
Chrysanthemum potentilloides
Chrysanthemum segetum
Chrysanthemum sinense
Chrysanthemum shiwogiku
Chrysanthemum sinuatum
Chrysanthemum vestitum
Chrysanthemum weyrichii
Chrysanthemum yoshinaganthum
Chrysanthemum zawadskii

கண்ணியாகக் கட்டப்பட்டுள்ள சிவந்திப்பூ

சிவந்தி அல்லது செவ்வந்தி (Chrysanthemum) இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். கண்ணியாகக் கட்டி மகளிர் தலையில் இதனைச் சூடிக்கொள்வர். சிவந்திப்பூ மாலை திருமணத்தின்போது அணிந்துகொள்ளப்படும். இதன் மலர் மணம் மிக்கது; தோட்டங்களில் சிவந்திப் பூவைப் பயிரிட்டு விற்பனை செய்கின்றனர். இந்தப் பூவானது வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் பூக்கும். இந்த நிறப் பூக்கள் தனித்தனிப் பயிர்வகை. ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.

Tamil - Samanthipoo

English - Chamomile flowers

Telugu - Chamanti

Malayalam - Jevanti puva

Sanskrit - Hevamntika-pushpam

Botanical name - Chrysanthemum coronarium

இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இதனால் இதை அதிக இடங்களில் பயிரிடுகின்றனர். இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

மனதோடு தொடர்புடைய பூக்களில் இதுவும் ஒன்று. மனிதனுக்கு ஏற்படும் கோபதாபங்கள், எரிச்சல், விரக்தி, பயம் போன்றவற்றை போக்கும் குணம் செவ்வந்திப்பூவிற்கு உண்டு. மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் இந்தப் பூவை கையில் வைத்துக்கொண்டு அதன் அடுக்குகளை சிறிது நேரம் உற்று நோக்கினால் மன அழுத்தம் மெல்ல மெல்ல விலகி மனம் இலேசாகுவதுபோல் தோன்றும்.

மருத்துவ பயன்கள்[தொகு]

தலைவலி நீங்க தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.

மலச்சிக்கல் தீர சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.

உடல் சூடு நீங்க உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.

உடல் வலுப்பெற சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது.

சுளுக்கு வீக்கங்களுக்கு சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.

சூதகக்கட்டு, சூதகச் சன்னி மாற அரைலிட்டர் தண்ணீரில் 25 கிராம் அளவு நிழலில் உலர்ந்த சாமந்திப் பூவை கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்து அப்படியே மூடிவைத்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தி வந்தால் சூதகக் கட்டு, சூதகச் சன்னி, குளிர்சுரம் எளிதில் குணமாகும். தினமும் இருவேளை என அருந்துவது நல்லது.

சிறுநீர் பெருக்கி சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.

சாமந்திப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் 1 துளி முதல் 5 துளி அளவு எடுத்து சர்க்கரை கலந்து சாப்பிடலாம். மேலும் இந்த எண்ணெயை கீல்வாயு, வீக்கம் முதலியவற்றிற்கு மேல்பூச்சாக பூசலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிவந்தி&oldid=1437558" இருந்து மீள்விக்கப்பட்டது