உள்ளடக்கத்துக்குச் செல்

கோங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோங்கம்
Cochlospermum religiosum blossoms
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malvales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. religiosum
இருசொற் பெயரீடு
Cochlospermum religiosum
(L.) Alston
கோங்க முகை
கோங்க மலர்

கோங்கம் என்று சங்கப்பாடல் கூறும் மரத்தை இக்காலத்தில் கோங்கு (Cochlospermum religiosum) எனக் கூறுகின்றனர்.

கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. இதனால் செய்யப்பட்ட பொருள்கள் இலேசாகவும், மழமழப்பாகவும், மஞ்சள்-நிறதிலும் இருக்கும்.

சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் கோங்கம் பூவும் ஒன்று.[1]

கோங்கமரம், பூ, தாது பற்றிய சங்கநூல் செய்திகள்

[தொகு]
  • எலியின் காது கோங்கம் பூவின் மையப் பகுதி போல இருக்கும் [2]
  • கோங்க மலரைப் பதத்தோடு பறித்தெடுப்பர் [3]
  • கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர். அதற்காக அவற்றைச் செம்பாலான செப்புகளில் சங்ககாலத்தில் விற்பனை செய்வர். செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர்.[4]
  • கோங்க-மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும்.[5][6][7][8][9]
  • மதுரையை அடுத்த வையை ஆற்றுப் படுகையில் பாணர் முற்றத்தில் கோங்க மலர்கள் கொட்டிக்கிடக்கும்.[10]
  • கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும்.[11]
  • கோங்கின் அடிமரத்தில் செதில்கள் பொரிந்திருக்கும். பூ பொன்னிறத்தில் இருக்கும்.[12]
  • மரத்திலிருந்து கோங்கமலர் காம்பறுந்து விழுவது யானை ஓட்டுநர் வீசும் தீப்பந்தம் போல விழும்.[13]
  • கோங்கமரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்.[14]

இவற்றையும் பார்க்க

[தொகு]
சங்ககால மலர்கள்

அடிக்குறிப்பு

[தொகு]
  1. குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 73)
  2. வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி - புறம் 321
  3. கோங்கும் கொய்குறை உற்றன - அகநானூறு 341
  4. சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு - அகநானூறு 25-10
  5. கோங்கு முகைந்நு அன்ன குவிமுலை - அகம் 240-11
  6. கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலை - புறம் 336
  7. சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து யாணர்க் கோங்கின் அவிர்முலை எள்ளி – சிறுபாணாற்றுப்படை 24
  8. கோங்கின் இளமுலை – திருமுருகாற்றுப்படை -34
  9. முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர்வந்தன - குறுந்தொகை 254
  10. மதுரைக்காஞ்சி 338
  11. புல் இதழ் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றி - நற்றிணை 48
  12. பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசு வீ - ஐங்குறுநூறு 367
  13. தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரியிணர்க் கோங்கின் கால்உறக் கழன்ற கட்கமழ் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும் - அகம் 153-16
  14. அகம் 157
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்கம்&oldid=2225107" இலிருந்து மீள்விக்கப்பட்டது