புன்னை
புன்னை | |
---|---|
புன்னை மரப் பூ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | க. இனோஃபைலம்
|
இருசொற் பெயரீடு | |
கலோஃபைலம் இனோஃபைலம் லிம்., |
புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகட் பகுதியும் கொண்டது. புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதின் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை. calo என்பது கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை. சிங்கள மொழியில் இது தொம்ப (දොඔ) எனவும், மலையாளத்தில் புன்னாகம் പുന്നാഗം எனவும் அழைக்கப்படுகிறது.[1]
இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகள், மியன்மார், மலேசியா, ஆத்திரேலியா, இலங்கை, கிழக்காபிரிக்கக் கரையை அண்டிய தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இது ஏனைய பல இனத் தாவரங்கள் வளர முடியாத, வரண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது. இந்தியாவில் மும்பாய்க்கும் இரத்தினகிரிக்கும் இடைப்பட்ட பகுதியிலும், அந்தமான் தீவுகளிலும் பெருமளவில் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிலும் கடற்கரையோரப்பகுதிகளில் காணலாம்.
இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டு வளர்க்கப்படுகின்றது.
இலக்கியப் பயன்பாடு
[தொகு]- உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன
- பெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை
- (நற்றிணை-231)
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறையில் இப்புன்னை மரம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிகம் மேல் வருமாறு.
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.
(புன்னை மரத்தின் பூ சிட்டுக்குருவியின் பொரித்த முட்டை போல இருப்பதாகக் கூறுகின்றது).
- குரீஇ = குருவி
- போது= மலர், மலரும் பருவத்து அரும்பு, மகரந்தம்
- கருந்தாட் புன்னை = கருந்தாள் புன்னை, கருமையான அடித்தண்டைனையுடைய புன்னை)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ விரியும் கிளைகள் 34: மின்னிலைப் புன்னை 11 ஜூன் 2016
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Calophyllum inophyllum தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.