கொன்றை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Mergefrom.svg
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) சரக்கொன்றை என்ற கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
கொன்றை
Konnamaram.JPG
தங்க மழை போன்று சொரியும் பூக்கள்
NE
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசித்கள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Cassia
இனம்: C. fistula
இருசொற் பெயரீடு
Cassia fistula
லி.

கொன்றை மரம், (Golden Shower Tree) பேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியற் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தெற்காசியப் பகுதியைச் சேர்ந்தது. பாகித்தானின் தெற்குப் பகுதிகளிலிருந்து, இந்தியா ஊடாகக் கிழக்கே மியன்மார் (பர்மா) வரையும், தெற்கே இலங்கைத் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.

இது நடுத்தர உயரம் கொண்ட ஒரு மரம். விரைவாக வளரக்கூடிய இம்மரம் 10 தொடக்கம், 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இலையுதிர்க்கும் தன்மை கொண்ட அல்லது, ஓரளவு பசுமைமாறாத் தன்மை கொண்ட இம் மரத்தின் இலைகள், 15 தொடக்கம் 60 சென்ட்டி மீட்டர் வரை நீளம் கொண்டவை. இறகு வடிவான இவ்விலைகள், 3 தொடக்கம், 8 சோடிகள் வரை எண்ணிக்கையான சிற்றிலைகளைக் கொண்டவை. சிற்றிலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ நீளமும், 4 – 9 சமீ அகலமும் உள்ளவை. பூக்கள், 20 – 40 சமீ நீளமுள்ள நுனிவளர் பூந்துணர்களில் (racemes) உருவாகின்றன. சம அளவும், வடிவமும் கொண்ட ஐந்து மஞ்சள் நிற இதழ்களாலான பூக்களின் விட்டம் 4 – 7 சமீ வரை இருக்கும். இதன் பழம் 30 – 60 சமீ நீளமும், 1.5 – 2.5 செமீ வரை அகலமானதுமான ஒரு அவரையம் (legume) ஆகும். நச்சுத்தன்மை கொண்ட பல விதைகளைத் தன்னுள் அடக்கிய இப் பழம் எரிச்சலூட்டும் மணம் தருவது.

பயன்பாடும், வளர்ப்பும்[தொகு]

கொன்றை பெரும்பாலும் அலங்காரத் தாவரமாகவே வளர்க்கப்படுகிறது. வெப்ப வலயம் மற்றும் குறை வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. நன்றாக நீர் வடியக் கூடிய நிலத்தில், நல்ல சூரிய ஒளியில் சிறப்பாக வளரும். வறட்சியையும், உப்புத்தன்மையையும் தாங்கக் கூடிய இத் தாவரம், குறுகியகால உறைபனிக் காலநிலையையே தாக்குப் பிடிப்பதில்லை. கொன்றை, பூஞ்சணம், இலைப்புள்ளி, மற்றும் வேர் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியது.

மருத்துவ பயன்கள்[தொகு]

கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும்.

இந்துசமயத்தில் கொன்றை[தொகு]

இந்துக்கள், கொன்றைப் பூவைச் சிவனின் பூசைக்குரியதாகக் கருதுகின்றனர். இச் சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன. (எ.கா: மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே)

இலக்கியத்தில் கொன்றை[தொகு]

 • காயா கொன்றை நெய்தல் முல்லை(ஐங்குறுநூறு 412 , பேயனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது)
 • கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
  (ஔவையார், கொண்றை வேந்தன்)
 • ”பொன்னெனமலர்ந்த கொன்றை மணியென(ஐங்குறுநூறு 420, பேயனார், முல்லை திணை – தலைவன் சொன்னது)
 • கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றை(குறுந்தொகை 21 – ஓதலாந்தையார், முல்லை திணை – தலைவி தோழியிடம் சொன்னது)
 • காசி னன்ன போது ஈன் கொன்றைகுருந்தோடு அலம் வரும் ( குறுந்தொகை 148, -இளங் கீரந்தையார், முல்லை திணை )
 • புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
  பொன் எனக் கொன்றை மலர மணிஎன (நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லை திணை – தலைவன் சொன்னது)
 • காயாங் குன்றத்துக் கொன்றை போல(நற்றிணை 371 – ஒளவையார், முல்லைதிணை – தலைவன் சொன்னது)
 • பைங்காற் கொன்றை மெல்பிணி அவிழ(அகநானுறு 4, பாடியவர் – குறுங்குடி மருதனார், திணை -முல்லை, தோழி தலைவியிடம் சொன்னது)

படக் காட்சியகம்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொன்றை&oldid=2283242" இருந்து மீள்விக்கப்பட்டது