குருந்து
குருந்து | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. monophylla
|
இருசொற் பெயரீடு | |
Atalantia monophylla (Roxb.) A. DC. | |
வேறு பெயர்கள் | |
Trichilia spinosa Willd. |
குருந்து (தாவர வகைப்பாடு : Atlantia monophylla Linn) இது குருந்தம், காட்டு கொளுஞ்சி, காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படுகிறது.) என்பது ஒருவகை மரமாகும். இதில் சிறு குருந்து பெருங்குருந்து என்னும் வகைகள் தமிழகக் காடுகளில் காணப்படுகின்றன. இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டையான காய்களுள்ள, தண்டில் முள்ளுள்ள எலுமிச்சையைப் போன்ற இன மரமாகும். இதன் இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இம்மரம் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் தலமரமாக உள்ளது.[1]
இதனைக் 'குருந்த மலார் (வலார்)' என்றும் கூறுவர். இதன் வலார்களை வெட்டிவந்து வரிசையாக அடுக்கிப் படல் அல்லது தட்டி கட்டிக்கொள்வர். இது குறிஞ்சி போன்றதொரு புதர்ச்செடி.[2]
இதன் இலைகள் பச்சையும் வெளிறிய வெள்ளையும் கலந்தது போல் காணப்படுகிறது. இந்த தாவரம் பஞ்ச கால தாவரத்தைச்சேர்ந்தது ஆகும். இதன் கனி உணவாகப் பயன்படுகிறது.[3] இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்ததாகும்.
ஆற்றோரங்களில் இது மரமாக வளரும். தெய்வக் கண்ணனின் சேலை விளையாட்டு இந்தக் குருந்தமரத்தில்தான் நிகழ்ந்தது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.30
- ↑ கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணி யென்றாள்; (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை) - ↑ http://www.flowersofindia.net/catalog/slides/Indian%20Atalantia.html