உள்ளடக்கத்துக்குச் செல்

இலமியேசியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Mint family
Lamium purpureum L.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
மாதிரிப் பேரினம்
Lamium
L.
Genera

See text

இலமியேசியே அல்லது லேபியேட்டே (Lamiaceae அல்லது Labiatae ) என்பது பூக்கும் தாவரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஆகும். பொதுவாக இந்க் குடும்பத்தைச் சேர்ந்த பல தாவரப் பகுதிகள் அனைத்தும் நறுமணமுள்ளவை இதில் திருநீற்றுப்பச்சை, புதினா, ரோசுமேரி, சாக், சாவரி, மார்ஜோராம், ஆர்கனோ, ஹைசோப், வறண்ட தைம், லாவெண்டர், பெரில்லா போன்ற பரவலாகப் பயன்படுத்தப்படும் சமையல் மருத்துவ மூலிகைகள் அடங்கும். இதில் சில இனங்கள் புதர், மரம் ( தேக்கு போன்றவை) அல்லது, அரிதாக, கொடிகள் என பலவகை தாவரங்களைக் கொண்டவையாக உள்ளன இக்குடும்பத்தில் உள்ளன தாவரங்கள் பரவலாக பயிரிடப்படுகிறன. இவற்றின் நறுமண குணங்களுக்காக மட்டுமல்லாமல், சாகுபடி எளிதாகவும் இருக்கிறதால் சாகுபடி செய்யப்படுகின்றன. ஏனெனில் இவற்றில் பல தாவரங்களின் தண்டை வெட்டி நட்டாலே பற்றிக்கொள்பவையாக உள்ளன.   இவற்றின் இலைகளை உண்ணுவதற்கு வளர்க்கப்படுவதல்லாமல், சில கோலியஸ் போன்ற அலங்கார தாவரங்களாகவும் வளர்க்கப்படுகின்றன. சில இவற்றில் உள்ள விதைக்காகவும் வளர்க்கப்படுகிறன. அதாவது சால்வியா ஹிஸ்பானிகா (சியா), அல்லது அவற்றின் உண்ணக்கூடிய கிழங்குகள் விளையக்கூடியவையான பிளெக்ட்ரான்டஸ் எடுலிஸ், பிளெக்ட்ரான்டஸ் எஸ்குலெண்டஸ், சிறுகிழங்கு மற்றும் ஸ்டாச்சிஸ் அஃபினிஸ் (சீன கூனைப்பூ) போன்றவை வளர்க்கபடுகின்றன..

இந்தக் குடும்பத்தாவரங்கள் உலகம் முழுக்க பரவியுள்ளன.[3] இந்தக் குடுபத்தில் சுமார் 236 பேரினங்கள் [4] உள்ளன, மேலும் இவை 6,900 முதல் 7,200 இனங்கள் கொண்டவை எனக் கூறப்பட்டுள்ளன, ஆனால் உலக சரிபார்ப்பு பட்டியல் இவற்றின் எண்ணிக்கையை 7,534 என பட்டியலிடுகிறது.[5] சால்வியா (900), ஸ்கூட்டெல்லாரியா (360), ஸ்டாச்சிஸ் (300), பிளெக்ட்ரான்டஸ் (300), ஹைப்டிஸ் (280), டீக்ரியம் (250), வைடெக்ஸ் (250), தைமஸ் (220) மற்றும் நேபெட்டா (200) ஆகியவை மிகப் பெரிய இனங்களாகும். கிளெரோடென்ட்ரம் ஒரு காலத்தில் 400 க்கும் மேற்பட்ட இனங்கள் கொண்ட ஒரு இனமாக இருந்தது, ஆனால் 2010 வாக்கில் இது சுமார் 150 ஆகக் குறைக்கபட்டது.[6]

விளக்கம்

[தொகு]

இந்க் குடும்பத் தாவரங்களானது இலையுடிச் செதில்களற்ற தனி இலைகளாக உள்ளன. இவற்றில் குறுக்குமறுக்கு எதிா் இலையடுக்கம் பொதுவாகக் காணப்படுகிறது. பொதுவாக கணுவில் ஒருவட்ட அடுக்கில் மலா்களைப் பெற்ற மஞசாி காணப்படுகிறது. பூவடிச் செதில்களும், பூக்காம்புச் செதில்கள் காெண்ட இரு பாலுறுப்புகளைப் பெற்ற இருபக்கச் சமச்சீரான ஐந்தங்க கீழ்மட்ட சூற்பை மலா்கள் உள்ளன. இதன் புல்லிவட்டமானது ஐந்து இணைந்த இதழ்கள் கொண்டது. தொடு இதழ் அல்லது அடுக்கிதழ் ஒழுங்கில் இவை உள்ளன. இவற்றின் அல்லி வட்டமானது ஐந்து இணைந்த இதழ்கள் அடுக்கிதழ் ஒழுங்கில் அமைந்துள்ளன. மகரந்தத்தாள் வட்டமானது அல்லிக்குழல் இணைந்த, சமநீளமற்ற இரு ஜோடித் தாள்கள் உள்ளன. இவற்றுள் கீழ் ஜோடித் தாள்கள் மேல் ஜோடியை விட நீளமானவை. இதன் சூலக வட்டமானது மேற்மட்ட சூற்பை கொண்டது. இரு சூலக இலைகள் இணைந்து இரு அறைகளைப் பெற்றுள்ளது. இதன் கனிகள் உலா் வெடியாக் கனியாகிய கொட்டைக்கனி காணப்படுகிறது.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. Stevens, P. F. (July 2012). "Lamiales (Lamiaceae Family)". Angiosperm Phylogeny Website. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
  2. Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF). Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x. http://www3.interscience.wiley.com/journal/122630309/abstract. பார்த்த நாள்: 2013-06-26. 
  3. Heywood, Vernon H.; Brummitt, Richard K.; Seberg, Ole; Culham, Alastair (2007). Flowering Plant Families of the World. Ontario, Canada: Firefly Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55407-206-4.
  4. Raymond M. Harley, Sandy Atkins, Andrey L. Budantsev, Philip D. Cantino, Barry J. Conn, Renée J. Grayer, Madeline M. Harley, Rogier P.J. de Kok, Tatyana V. Krestovskaja, Ramón Morales, Alan J. Paton, and P. Olof Ryding. 2004. "Labiatae" pages 167-275. In: Klaus Kubitzki (editor) and Joachim W. Kadereit (volume editor). The Families and Genera of Vascular Plants volume VII. Springer-Verlag: Berlin; Heidelberg, Germany. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-40593-1
  5. World Checklist of Selected Plant Families
  6. Yuan, Yao-Wu; Mabberley, David J.; Steane, Dorothy A.; Olmstead, Richard G. (2010). "Further disintegration and redefinition of Clerodendrum (Lamiaceae): Implications for the understanding of the evolution of an intriguing breeding strategy". Taxon 59 (1): 125–133. doi:10.1002/tax.591013. 
  7. ஆஞ்சியோஸ்பொ்ம்களின் வகைப்பாடு - ச. பழனியப்பன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலமியேசியே&oldid=3927901" இலிருந்து மீள்விக்கப்பட்டது