உயிரிக்கிளை
Appearance


உயிரினக்கிளை (Clade) என்பது உயிரியல் வகைப்பாட்டியல் முறைமையின் புதிய அணுகுமுறை அலகுகளில் ஒன்றாகும். உயிரின வகைப்பாட்டு அறிவியலின் தொடக்க காலத்தில், ஒரு உயிரினத்தின் புறத்தோற்றங்களையும், உடலின் உள்ளமைப்புகளையும் கொண்டு வகைப்படுத்துதல் முறைமை கடைபிடிக்கப்பட்டன. உயிரின மரபியல் துறையின் வளர்ச்சியும், கணினியியல் வளர்ச்சியும், பரிணாமயியல் வளர்ச்சியும் ஏற்பட்ட பிறகு, ஒரே உயிரியிலிருந்து உருவான, ஒத்த மரபணுக்களைக் கொண்டவைகளைக் கொண்டு, கணிய பரிணாம மரபியல் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, உயிரினக்கிளை என்ற அலகு உருவாக்கப்பட்டு, பன்னாட்டு உயிரியல் அறிஞர்களால் பின்பற்றப்படுகிறது.[1][2] இந்த அலகினைக் கொண்டே, உயிரினக்கிளை படத்தினை உருவாக்கினர். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://scienceblogs.com/evolvingthoughts/2007/01/12/clade-1
- ↑ https://www.sierraclub.org/missouri/blog/2013/07/biologist-perspective-glade-restoration-roaring-river-wild-area
- ↑ Cracraft, Joel; Donoghue, Michael J., eds. (2004). "Introduction". Assembling the Tree of Life. Oxford University Press. p. 1. ISBN 978-0-19-972960-9.