கணிய பரிணாம மரபியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரினக் கிளைப்படம்

கணிய பரிணாம மரபியல் (Computational phylogenetics) என்பது கணிய நிரல்களாலும், படிமுறைத் தீர்வுகளாலும், உயிரிய முறைகளாலும், பரிணாம மரபு வழி ஆய்வுகளை மேற்கோள்ளுதல் ஆகும். இதன் முக்கிய இலக்கு யாதெனில், மரபணுக்கள், இனங்கள், உயிரலகுகள் முதலியவற்றைக் கொண்டு கணிய நுட்ப வழிமுறைகளைக் கொண்டு தன்னியக்கமாக உயிரினக் கிளைப்படத்தினை உருவாக்குதல் ஆகும். எடுத்துக்காட்டாக, மனிதர், கொரில்லா குரங்கு, பொனொபோ குரங்கு போன்ற உயர்நிலை விலங்கினக் குடும்பத்தினை (Hominidae) புத்தாய்வு செய்யும் ஆய்வுப் பணிகள் இம்முறைகளால் மேற்கொள்ளப்பட்டன.[1] இந்த ஆய்வுகளில் உயிரினங்களுக்கு இடையே இருக்கும் குறிப்பிட்ட மரபணுக்களின் தொடர்புகள் ஆய்ந்து தொடர்புகள் கண்டறியப்பட்டன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Inferring hominoid and early hominid phylogeny using craniodental characters: the role of fossil taxa". Journal of Human Evolution 47 (6): 399–452. December 2004. doi:10.1016/j.jhevol.2004.08.008. பப்மெட்:15566946. 
  2. "A myosin family tree". Journal of Cell Science 113 (19): 3353–4. October 2000. doi:10.1242/jcs.113.19.3353. பப்மெட்:10984423. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிய_பரிணாம_மரபியல்&oldid=3797895" இலிருந்து மீள்விக்கப்பட்டது