கொரில்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொரில்லா[1]
Male silverback Gorilla.JPG
சாம்பல்முதுகு ஆண் கொரில்லா
(Gorilla gorilla)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: முதனிகள்
குடும்பம்: ஓமினிடீ
மாந்தனனை குடும்பம்
(Hominidae)
துணைக்குடும்பம்: ஓமினீ
மாந்தனனை உட்குடும்பம்
(Homininae)
சிற்றினம்: கொரில்லினி
Gorillini
பேரினம்: கொரில்லா
Gorilla

I. Geoffroy, 1852
மாதிரி இனம்
Troglodytes gorilla
Savage, 1847
Species

Gorilla gorilla
Gorilla beringei

ZL Gorilla (genus).png
distribution of Gorilla
Sexual dimorphism of the skull

கொரில்லா, மனிதர்களுக்கு நெருங்கிய இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். கை முட்டிகளால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.

பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலை தழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய டி.என்.ஏ 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால்[2] இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள்.

வாழ் முறைகள் வாழிடங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-Anaglyph.svg
முப்பரிமாண படிமங்களைக் காணச் செல்கவிக்கிமீடியா காமன்ஸ்:
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

  1. Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பக். 181-182. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100787. 
  2. Greater Than 98% Chimp/Human DNA Similarity? Not Any More.. Answers in Genesis (2003-04-01). Retrieved on 2011-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரில்லா&oldid=2067283" இருந்து மீள்விக்கப்பட்டது