உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்பன்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Common chimpanzee[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
சிற்றினம்:
Hominini
பேரினம்:
இனம்:
P. troglodytes
இருசொற் பெயரீடு
Pan troglodytes
(Blumenbach, 1776)
distribution of common chimpanzee. 1. Pan troglodytes verus. 2. P. t. ellioti. 3. P. t. troglodytes. 4. P. t. schweinfurthii.
வேறு பெயர்கள்

Simia troglodytes Blumenbach, 1776
Troglodytes troglodytes (Blumenbach, 1776)
Troglodytes niger E. Geoffroy, 1812
Pan niger (E. Geoffroy, 1812)

சிம்பன்சி

சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப் பகுதிகளிலும் வாழ்கின்றன.

இதனை பொதுவாக சாதாரண சிம்பன்சி என்று அழைப்பர். இந்த சாதாரண சிம்பன்சிக்கு நெருங்கிய இனமான போனபோ என்னும் இன்னுமொரு வாலில்லாக் குரங்கினத்தையும் சேர்த்தே சிம்பன்சி என பெயரிடுவர்[3]. இவ்விரு இனங்களும் காங்கோ ஆற்றுக்குக் கிழக்காக வாழ்கின்றன.

சிம்பன்சிகள் மாமிசங்களை சிறிய கற்கருவிகளால் வெட்டி உண்ணத்தொடங்கியதால், அதன் பற்கள் கடித்து மெல்ல குறைவான அழுத்தமே தேவைப்பட்டது. அதன் பின் சந்ததியினர் இதனாலேயே அதன் வாய் பரிணாமம் அடைந்து பேசுவதற்கு ஏற்ற உடலமைப்பாக மாறியது என காட்டுவேர்டு பல்கலைக்கழகத்தின் பரிணாம ஆய்வாளர் டேனியல் லைபர்மேன் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Pan troglodytes". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes justification for why this species is endangered
  3. [1]
  4. How sliced meat drove human evolution
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பன்சி&oldid=2938531" இலிருந்து மீள்விக்கப்பட்டது