ஆய்வு
ஆய்வு (ⓘ) (Research) என்பது ஓர் அறிவுத்தேடல்/அறிவியல் தேடல் எனலாம். மதியால் செயலாக்கப்படும் ஆய்வுகள் புதிய அறிதல்களையும் புரிதல்களையும் உள்ளடக்கும். இவை பெரும்பாலும் அறிவியல் முறைசார்ந்து இயங்குகின்றன.[1][2][3]
ஆய்வுகளின் அடிப்படைத் தேவை பயனுள்ள ஆராய்ச்சி, அதில் கண்டுபிடிப்புகள், விளக்கங்கள், புதிய முறைகளை கையாளுதல் மற்றும் கண்டறிதல் ஆகியன. குறிப்பாக அறிவியல் படைப்புகள் மற்றும் வளர்ச்சி சார்ந்தே இவ்வாய்வுகள் இயங்குகின்றன.
ஆராய்ச்சிகளின் வகைகள்
[தொகு]ஆராய்ச்சிகள் பெரும்பாலும் அறிவியல் மற்றும் மதிநுட்பத்தை சார்ந்தே இருக்கும். இதன் மைய நோக்கம் மதி வளர்ச்சியே ஆகும். இவைகளைக்கொண்டு பல துறைகளைக் கருதி மூன்றாகப் பிரிக்கின்றனர்.
- அறிவியல் ஆய்வு - சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி
- கலை ஆய்வு - கலை மற்றும் பண்புகளை நோக்கி
- வரலாற்று ஆய்வு - வரலாறு மற்றும் சான்றுகளை நோக்கி
அறிவியல் ஆய்வு
[தொகு]அறிவியல் வளர்ச்சியை மையப்படுத்தியும், சிக்கல்களுக்கு தீர்வு காணுவதை கொண்டும் அறிவியல் உக்தியை பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு பல முடிவுகளை காணுதல். இவைகளில் அறிவியல் துறைகள், சமுக சார்ந்த சீர்திருத்தங்களைக் காண, இவைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகளில்
- கண்காணித்தல்,
- கண்காணித்ததை தொகுத்து தலைப்பை கண்டறிதல்
- கொள்கைகளை வகுத்தல்
- கொள்கை வரையறைகளைக் கொடுத்தல்
- செயலாக்க வரையறைகளைக் கொடுத்தல்
- ஆவணங்களைச் சேகரித்தல்
- ஆவணங்களைச் சரிபார்த்தல்
- கொள்கைகளைத் தீர அலசுதல்
- தீர்வைக்கண்டறிந்து வெளிப்படுத்தல்.
இவையே அறிவியல் ஆராய்ச்சியின் வழிமுறைகள். இவைகளின் முடிவாக ஒரு தீர்வு காணப்பட்டதை பரிசோதனை செய்து சான்றுபகர்தல்.
கலை ஆய்வு
[தொகு]கலைகளையும் பண்புகளையும் கொண்டு ஆராயும் பகுதியாகும். இது அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆராய்தல் என்பதில் சற்று மாறுபட்டு இவை சில பண்புகளைக்கொண்ட அளவீடூகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளலில் அடங்கும்.
வரலாற்று ஆய்வு
[தொகு]இதில் வரலாற்றாசிரியர்கள் அளித்த ஆதாரங்களைக் கொண்டு, அறிவியல் வழிமுறைகளை பின்பற்றி வரலாற்று சிக்கல்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களை ஒப்பிட்டு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை மேற்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
- ஆவணங்களின் பிறப்பையறிதல்
- சிக்கலுக்கான கிடைக்கப்பெறும் சான்றுகள்
- வரலாற்றாசிரியரின் உண்மை மற்றும் முக்கியத்துவம்
- ஆவணங்களை தீர அலசுதல்
- ஒற்றுமையை கண்டறிதல்
- நம்பத்தக்கவைகளை சுட்டல்/சுட்டிக்காண்பித்தல் ஆகியன.
இவைகளால் நமக்கு வரலாற்று உண்மைகள் அறியக் கிடைக்கின்றன.
ஆய்வு முறைகள்
[தொகு]ஆராய்ச்சியின் இலக்கு அறிவுத்தேடலை நிறைவு செய்தலேயாகும். அதைக்கொண்டு இதை மூன்றாகப் பகுக்கின்றனர்.
- சிக்கல்களின் பண்பை அறிந்து தீரநோக்கல்
- தீர்வுகளுக்கான வழிகளைக் கண்டறிதல்
- கண்டறியப்பட்ட தீர்வுகளை சான்று பகர சாத்தியக்கூறுகளை பார்த்தல் ஆகியன.
இதுவே படிநிலைகளிலும் வகைப்படுத்துகின்றனர்
- முதற்படி - ஆவணங்களை சேகரித்தல்
- இரண்டாம்படி - சுருக்கம், ஒப்பிட்டு தீர்வு காணல் ஆகியன.
கலை ஆய்வைக்கொண்டு, பண்புசார் ஆய்வு எனவும் அளவுசார் ஆய்வும் என்வும் விவரிக்கின்றனர்.
அச்சு வெளியீடுகள்
[தொகு]கண்டறிந்தவைகளை சிறந்த இதழ்களில் வெளியிடுவதன் மூலம் அது பரவி அனைவருக்கும் பயனளிக்கும்.
ஆய்வு நிதியுதவி
[தொகு]நிதியுதவி அளிக்க சில அரச நிறுவணங்களும் சில தனியார் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. ஆனால், சிக்கல்களின் முக்கியத்துவம் அதனால் பெறப்படும் தீர்வைக்கண்டே உதவி கிடைக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- Trochim, W.M.K, (2006). Research Methods Knowledge Base.
- ↑ OECD (2015). Frascati Manual. The Measurement of Scientific, Technological and Innovation Activities. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1787/9789264239012-en. hdl:20.500.12749/13290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9264238800. Archived from the original on 5 June 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020.
- ↑ "The Origins of Science பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2003 at the வந்தவழி இயந்திரம்". Scientific American Frontiers.
- ↑ "Research". Merriam-Webster.com. Merriam-Webster, Inc. Archived from the original on 18 October 2018. பார்க்கப்பட்ட நாள் 20 May 2018.