பேச்சு:ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆய்வு[தொகு]

அறிவுத்தேடல் மனிதனுக்கு இயல்பானது. தேடலை வரையறுத்து, கவனத்தை குவியப்படுத்தி, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக செய்யப்படும் அறிவுத்தேடலே ஆய்வு ஆகும். தற்கால தகவல்யுகத்தில் ஆய்வு ஒரு முக்கிய செயற்பாடாகும்.

இயல்களுக்கு ஏற்றவாறு ஆய்வின் அக்கறை, தன்மை, முறைமை, அணுகுமுறை வேறுபடும். கணிதத்தில் கணக்கு முக்கியம், கணினி அறிவியலில் மென்பொருள் ஆக்கம் முக்கியம், இலத்திரனியலில் இலத்தினிய சுற்று அல்லது அமைப்பு முக்கியம்.

ஆய்வுக்கு முன் கேட்க்கப்பட வேண்டிய கேள்விகள்[தொகு]

 • ஆய்வின் தேவை என்ன?
 • ஆய்வின் மதிப்பீட்டாளர்கள் யார்?
 • அவர்களின் மதிப்பீடுகள் என்ன?
 • ஆய்வின் பயனர்கள் யார்?
 • ஆய்வின் முடிவில் ஈட்டப்படவேண்டிய விளைவுகள் எவை?
 • ஆய்வு எப்படி ஆவணப்படுத்தப்பட வேண்டும்?

ஆய்வும் ஆதாரங்களும்[தொகு]

ஆய்வுக்கு அடித்தளமாக அமைவது ஆய்வில் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள். ஆதாரங்கள் தகுந்தவாறு, மதிப்பு பெற்றவையாக அமையவேண்டும்.

ஆய்வும் ஆவணப்படுத்தலும்[தொகு]

ஆய்வுக்கு அடிப்படையாக அமைவது தகவல்கள். தேவையான தகவல்களை சேகரித்து, ஒழுங்கு செய்து, ஆவணப்படுத்தல் ஆய்வின் ஒரு முக்கிய அம்சமாகும். ஆதாரங்களைச் சுட்டும் சீர்தரப்படுத்தப்பட்ட முறைகளை ஒழுங்கே பின்பற்றுவது முக்கியமாகும்.



சொல்லாடல்கள்[தொகு]

 • ஆய்வு - research
 • ஆராய்ச்சி - research
 • கரு - idea
 • கருது - கொள்க -
 • கருத்து - comment
 • கருத்துரு - concept = கருத்து + உரு; கருதப்பட்ட கரு; கருவின் உரூவாக்கம்
 • கருத்தியம், கருத்துமுதலியல் - idealism
 • கருத்தியல் - ideal
 • கருத்துருவம் - ideology ??
 • கருத்துலகு - the world of idea
 • கருதுகோள் - hypothesis
 • கருதுதல் - having an opinion
 • கருத்துருவாக்கம் - forming or shaping an opinion
 • எண்ணக்கரு - basic initial thought
 • சிந்தனை - thought
 • சிந்தை - மனம், மூளை
 • சிந்தித்தல் - thinking
 • அகவயம் - subjective
 • புறவயம் - objective
 • கோட்பாடு - theory
 • கோட்பாட்டாக்கம் - theorizing
 • தருக்கம் - logic
 • பகுத்தறிவு - rationlization, reasoning
 • பகுவியல் - analysis
 • பரிசோதனை - test, experiment
 • மறுப்பு - refute

வழிமாற்று[தொகு]

இந்த பக்கத்திற்கு ஆராய்ச்சி என்ற பக்கத்திலுருந்து வழிமாற்று அமைக்கலாமா..? ஆராய்ச்சி என்ற சொல்லும் பல இடங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறதே.. கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:09, 11 பெப்ரவரி 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆய்வு&oldid=1319529" இருந்து மீள்விக்கப்பட்டது