முதனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதனிகள்[1]
புதைப்படிவ காலம்: Late Paleocene–recent
Olive Baboon, Papio anubis
Olive Baboon, Papio anubis
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு பாலூட்டிகள்
உள்வகுப்பு: யூத்தேரிய
பெருவரிசை: Euarchontoglires
வரிசை: முதனிகள்
லின்னேயசு, 1758
Range of the non-human primates (green)
குடும்பங்கள்
சிம்ப்பன்சி என்னும் வாலில்லா குரங்கு. இது மனிதர்கள் உட்பட்ட முதனி குடும்பத்தைச் சேர்ந்தது.

முதனி (Primate) என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். உயிரின வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படும் இனம் இந்த முதனி இனம். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூச்சிப் புழுக்களை உண்டுவந்த பூச்சியுண்ணிப் பிரிவில் இருந்து தோன்றி கிளைத்த இனங்கள்தாம் குரங்குகளும், வாலில்லா மனிதக் குரங்குகளும், மனிதர்களுமாகிய 180க்கும் அதிகமான தனி விலங்கின வகைகள். முதனிகள் ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில்தான் காணப்படுகின்றன. வட அமெரிகாவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் கிடையாது (ஆனால் வட ஆப்பிரிக்கவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்ட்டர் என்னும் 6.5 ச.கி.மீ பரப்பளவு கொண்ட சிறு இடத்தில், வாலில்லா பார்பரி என்னும் ஒரேயொரு குரங்கினம் உள்ளது).

முதனியின் தனிப்பண்புகள்[தொகு]

  • முதனிகளுக்கு அறிவு அதிகம். இவைகளின் மூளை மொத்த உடல் எடையோடு ஒப்பிடும் பொழுது மற்ற விலங்குகளைக் காட்டிலும் பெரும்பாலும் அதிகமானது.
  • முதனிகளின் கைகளும் கால்களும் சிறப்பாக மற்ற விலங்குகளில் இருந்து மாறுபடுகின்றன. கைகளிலே, கட்டை விரலானது மற்ற நான்கு விரல்களுக்கும் எதிர்தாற் போலவும், மரக்கிளைகளைப் பற்றுவதற்கு ஏற்றாற் போலவும் அமைந்துள்ளன. கை கால்களின் விரல் நகங்கள் பெரும்பாலும் தட்டையாக உள்ளன (பிற விலங்குகளைப்போல உருண்டு முள் போலும் உள்ள உகிர்கள் அல்ல).
  • பல் அமைப்பு பல பற்களைக்கொண்டதாகவும், கடைவாய்ப் பற்கள் பல கூரான பகுதிகளும், குழிகளும் கொண்டு இருக்கின்றன. கொரில்லாக்களின் கடைவாய்ப் பற்களில் ஐந்து குழிகளும், மற்ற குரங்கினங்களிலே நான்கு குழிகள் கொண்டதுமாக உள்ளன.
  • கண்கள் இரண்டும் முகத்தில் முன்னோக்கி இருப்பது, இருகண் பார்வை (இரண்டுகண்களும் ஒரு சேர ஒன்றைப்பார்த்து அக் காணும் பொருட்களின் திரட்சி வடிவை அறிவது) கொண்டிருப்பது, பல நிறம் உணரும் திறம் படைத்திருப்பது.
ஒப்பீடு: முதனிகளின் மண்டையோட்டின் அளவும் எடையும்.

[வளரும்]

முதனிகளின் சமூகப் பண்புகள்[தொகு]

மற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவம், அவற்றின் சமூகப் பண்புகள்.

  • சேய் பாதுகாப்பு (maternal care) மற்றும் பெற்றோர் மீதான சார்பு. முதனிகளின் மூளை அளவும் அறிவுத்திறன் மற்ற விலங்குகளை விட அதிகம், அதே போல் அவற்றின் வளர்ச்சிக் காலம் அதிகம். இதன் காரணமாக பிறந்து நீண்ட காலம் வரை அவை பெற்றோர் அல்லது பிற மூத்த முதனிகளைச் சார்ந்து வாழுகின்றன. முதனிகளின் தாய்மைப் பண்பு ஒரு குமுகப் பண்பு (social trait) என்றும் வெறும் விலங்கின உள்ளுணர்வு (animal instinct) சார்ந்த இயல்பான ஒன்று இல்லை என்றும் ஃகாரி ஃகார்லோவின் ( Harry Frederick Harlow ) இரீசசுக் குரங்குகள் மீதான ஆய்வுகள் தெரிவிக்கின்றன்.
  • ஒன்றைப் பார்த்து நடித்தல் (imitation) அல்லது கற்றல் (learning).
மேற்கத்திய கீழ்நில கொரில்லா
ஒராங்குட்டான்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பக். 111–184. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதனி&oldid=1827143" இருந்து மீள்விக்கப்பட்டது