சுராசிக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுராசிக் காலம்
199.6 - 145.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
J
சராசரி வளிமண்டல O
2
அளவு
ca. 26 % கனவளவு [1]
(130 % of modern level)
சராசரி வளிமண்டல CO
2
அளவு
ca. 1950 ppm[2]
(7 times pre-industrial level)
சராசரி தரை வெப்பநிலை ca. 16.5 °C [3]
(3 °C above modern level)
வார்ப்புரு:சுராசிக் காலம் காலக்கோட்டுப் படிமம்
சுராசிக் காலப்பகுதியின் பாரிய தொன்மாக்க அதிகளவில் காணப்பட்டன.

சுராசிக் அல்லது ஜுராசிக் (Jurassic) என்பது 199.6± 0.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145.5± 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையௌம் குறிக்கும். அதாவது டிராசிக் காலத்தின் முடிவிலிருந்து கிரீத்தேசியக் காலத்தின் தொடக்கம் வரையான காலமாகும். சுராசிக் மெசொசொயிக் ஊழியின் நடுக்காலமாகும். இக்காலப்பகுதியின் தொடக்கம் டிராசிக்-சுராசிக் அழிவினால் குறிக்கப்படுகிறது எனினும் சுராசிக் காலத்தின் முடிவில் எந்தவொரு அழிவு நிகழ்வும் நடைபெறவில்லை. சேர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சுரா மலை (Jura Mountains) யில் காணப்படும் சுண்ணக்கல் படிவுகளுக்காக இக்காலப்பகுதிக்கு இப்பெயர் அலெக்சாண்டர் புரொங்னியார்ட் என்ற பிரெஞ்சு வேதியியலாளரால் சூட்டப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராசிக்_காலம்&oldid=1374685" இருந்து மீள்விக்கப்பட்டது