டெவோனியக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெவோனியக் காலம்
416 - 359.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
D
சராசரி வளிமண்டல O
2
அளவு
ca. 15 % கனவளவு [1]
(75 % of modern level)
சராசரி வளிமண்டல CO
2
அளவு
ca. 2200 ppm[2]
(8 times pre-industrial level)
சராசரி தரை வெப்பநிலை ca. 20 °C [3]
(6 °C above modern level)
கடல் மட்டம் (தற்போதைய கடல் மட்டத்துக்கு மேல்) Relatively steady around 180m, gradually falling to 120m through period[4]
வார்ப்புரு:டெவோனியக் காலம் காலக்கோட்டுப் படிமம்

டெவோனியக் காலம் (Devonian) என்பது 416± 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 359.2± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான டெவோனியக் காலம் சிலுரியன் காலத்தின் முடிவிலிருந்து கார்பனிபெரசுக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. இக்காலத்தைச் சேர்ந்த பாறைப்படிவுகள் முதன்முதாலாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் டெவோன் கவுண்ட்டியின் காரணமாக இப்பெயர் இக்காலத்துக்கு இடப்பட்டுள்ளது. இக்காலத்தில், சுமார் 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாக மீன்கள் கால்களைப் கூர்ந்து [5] நாற்காலிகளாகத் தரையில் நடக்கத்தொடங்கின.இக்காலத்தின் தரைவாழ் கணுக்காலிகள் கணுக்காலிகளும் நன்கு நிலைக்கொண்டிருந்தன.

இக்காலத்தின் முதல் விந்துத்தாவரங்கள் தரையில் பரவி பாரிய காடுகளை உறுவாக்கின. கடலில் தொடக்கநிலை-சுறாமீன்கள் சிலுரியன் காலத்தை விட எண்ணிகையில் கூடின. முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன. முதல் அமோனைற்று மெல்லுடலிகள் தோன்றின, முக்கூற்றுடலிகள், விளக்குச் சிப்பிகள், பவழப் பாறைகள் என்பவையும் இக்காலத்தின் பரவலாக காணப்பட்டன. பின் டெவோனிய அழிவு நிகழ்வு கடல்வா உயிரினங்களை வெகுவாக பாதித்தது.

தொல்புவியியல் நோக்கில் இக்காலத்தில் தெற்கே பெருங்கண்டம் கொண்ட்வனாவும், தெற்கே சைபீரியக கண்டமும் தொடக்கநிலை ஐரோஅமெரிக்க பெருங்கண்டமும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:Phanerozoic Carbon Dioxide.png
  3. en:Image:All palaeotemps.png
  4. Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648. 
  5. en:Tiktaalik பார்க்க.

வெளியிணைப்புக்கள்[தொகு]

பேலியோசொயிக்கு ஊழி
கேம்பிரியம் ஓர்டோவிசியம் சிலுரியம் டெவோனியம் கார்பனிபெரசு பேர்மியம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெவோனியக்_காலம்&oldid=1471541" இருந்து மீள்விக்கப்பட்டது