மெல்லுடலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெல்லுடலிகள்
Molluscs
புதைப்படிவ காலம்:கேம்பிரியன் அல்லது அதற்கு முற்பட்ட காலம் தொடக்கம் - தற்போது வரை
Caribbean reef squid.jpg
கரீபியன் ஸ்குயிட்டு- Sepioteuthis sepioidea
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
பெருந்தொகுதி: Lophotrochozoa
தொகுதி: மெல்லுடலி
L, 1758
Classes

Aplacophora
இருவால்விகள்
Caudofoveata
தலைக்காலிகள்
கஸ்ரோபோடா
Helcionelloida
Monoplacophora
பொலிபிளாக்கோபோரா
Rostroconchia
Scaphopoda
Tentaculita

உயிரியற் பல்வகைமை
c.200,000 species[1]
நத்தை-எமக்கு அதிகம் பழக்கமான மெல்லுடலியாகும்.

மெல்லுடலிகள் (Molluscs அல்லது mollusks; இலத்தீன்: molluscus) எனப்படும் விலங்கினங்கள் மிக மெலிதான ஓடுகளைக் கொண்டவை[2].

மெல்லுடலிகளில் மொத்தம் 100,000க்கும் அதிகமான இனங்கள் இருந்துள்ளன. மேலும் 70,000க்கும் அதிகமான சிற்றினங்கள் அற்றுப்போய்விட்டன. முத்துச்சிப்பி, கணவாய் முதலியன மெல்லுடலி வகையைச் சேர்ந்தன. வகைப்பாட்டியலில் மெல்லுடலிகள் பொதுவாக பத்து வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் இரன்டு வகுப்புகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டன.

மெல்லுடலிகள் முக்கியமான முள்ளந்தண்டிலி விலங்குகளாகும். இவற்றுள் மிக மெதுவாக அசையும் நத்தை தொடக்கம் மிக வேகமாக நீந்தும் இராட்சத ஸ்குயிட்டுக்களும் அடங்குகின்றன. இவற்றின் உடல் பொதுவாக வளவளப்பானதாகவும், மென்மையானதாகவும் இருக்கும். பல இனங்கள் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்காக கல்சியம் காபனேற்றாலான ஓட்டைச் சுரக்கின்றன. இவற்றின் அடிப்பகுதியில் தசையாலான பாதமொன்று காணப்படும். ஒக்டோபசு போன்ற சீபலோபோடா விலங்குகளில் இப்பாதப் பகுதியே பல கைகளாகத் திரிபடைந்திருக்கும்.

மெல்லுடலிகளில் உணவுண்பதற்காகச் சிறப்பாகக் காணப்படும் உறுப்பு வறுகி (radula) ஆகும். இவை இவ்வுறுப்பைப் பயன்படுத்தியே உணவைக் கிழித்து உண்கின்றன. இவற்றின் குருதிச் சுற்றோட்டத் தொகுதி திறந்த தொகுதியாகும். மெல்லுடலிகளில் சீபலோபோடாக்களே மிகவும் சிக்கலான உடலியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றில் பல கைகளுள்ளன, ஓடு பலவற்றில் காணப்படுவதில்லை, மூடிய குருதிச் சுற்றோட்டம் உள்ளது, கூர்மையான நன்கு விருத்தியடைந்த கண்களும், நன்கு விருத்தியடைந்த மூளை மற்றும் நரம்புத் தொகுதியும் உள்ளன. இதனால் கடலில் ஆட்சியுள்ள உயிரினங்களில் சீபலோபோடா வகுப்பைச் சேர்ந்த ஒக்டோபசு, இராட்சத ஸ்குயிட்டு போன்ற உயிரினங்களும் அடங்குகின்றன. எனினும் பொதுவாக மெல்லுடலிகளின் உடலியல் கட்டமைப்பு அவ்வளவாக சிக்கலானதல்ல. மெல்லுடலிகள் ஆதிகால மனிதனின் உணவில் முக்கிய பங்கு வகித்தன. எனினும் தற்காலத்தில் கணவாய், மட்டி போன்றவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மெல்லுடலிகளின் மிகப் பெறுமதியான முக்கிய பயன்பாடு முத்து ஆகும்.

தனித்துவமான இயல்புகள்[தொகு]

மெல்லுடலிகள் தமக்கென்று தனித்துவமாக மென்மூடியொன்றையும் (Mantle), தனித்துவமான நரம்புத் தொகுதியையும் கொண்டுள்ளன. பொதுவாக அனைத்து மெல்லுடலிகளும் துண்டுபடாத உடலையும் இரட்டைச் சமச்சீரையும் கொண்டுள்ளன. அனைத்து மெல்லுடலிகளும் கொண்டுள்ள இயல்புகள்:

 • உடலின் முதுகுப்புறம் காணப்படும் மென்மூடி. மென்மூடி ஓட்டை உருவாக்குவதற்கான சுரப்புகளைச் சுரக்கும். மென்மூடிக் குழியும் காணப்படும்.
 • குதமும் இலிங்கக் கான்களும் மென்மூடிக் குழியினுள் திறக்கின்றன.
 • இரண்டு சோடி பிரதான நரம்பு நாண்கள்

உடலமைப்பியல்[தொகு]

மெல்லுடலி ஒன்றின் பொதுவான உடலியற் கட்டமைப்பு

மெல்லுடலிகளின் உடல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவைகள் தலை, உடல் மற்றும் பாதம் ஆகும். முளையவியலின் அடிப்படையில் இவை புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். இவற்றின் உடல் புற,இடை,அக முதலுருப் படைகளான Triploblastica விலங்குகளாகும்.

சுற்றோட்டத் தொகுதி[தொகு]

அனேகமான மெல்லுடலிகளின் சுற்றோட்டத் தொகுதி திறந்த சுற்றோட்டத் தொகுதியாகும். இவற்றில் உடற்குழி காணப்பட்டாலும் உடலுறுப்புக்களைச் சுற்றியுள்ள சொற்பளவு பாய்பொருளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் உடலில் உடற்குழியை விட குருதிக் குழியே சிறப்பாக விருத்தியடைந்துள்ளது. இக்குருதிக் குழி நீர்நிலையியல் வன்கூடாகத் தொழிற்பட்டு மென்னுடலியின் உடலுக்கு ஓரளவு வலிமையைத் தருகின்றது. குருதியில் பிரதான ஆக்சிசன் காவியாக ஈமோசையனின் நிறப்பொருள் உள்ளது. இதில் முள்ளந்தண்டுளிகளில் உள்ள இரும்புக்குப் பதிலாக செம்பு உலோகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமிபாடு[தொகு]

    = உணவு
    = ஒடென்டோபோர் பட்டி
    = தசைகள்
நத்தையின் வறுகியின் கட்டமைப்பு.

மெல்லுடலிகள் தசைப்பிடிப்பான வாயையும், கைட்டினால் ஆக்கப்பட்ட வறுகியையும் கொண்டுள்ளன. வறுகியில் கைட்டினால் ஆன பற்கள் உள்ளன. இப்பற்கள் உணவுண்ணும் போது இழக்கப்பட மீண்டும் மீண்டும் வளர்வனவாகும். வறுகியைப் பயன்படுத்தி அல்காப் படைகளைச் சுரண்டி உட்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் சீதமும் பிசிரும் உள்ளன. சீதமும் பிசிரும் உணவை சமிபாட்டுத் தொகுதியின் உட்பகுதியை நோக்கித் தள்ளி விடுவதில் உதவுகின்றன. உட்கொள்ளப்படும் உணவில் கனியுப்புக்கள் வேறாகவும், உணவுப் பகுதி வேறாகவும் சமிபாடு செய்யப்படுகின்றன. உணவு சீக்கம் எனும் வெளியேறும் துளையற்ற பகுதியினுள் சேதன உணவு அகத்துறிஞ்சப்படுகின்றது. கனியுப்புக்களில் மேலதிகமானவை வெளியேற்றப்படுகின்றன. பிசிர்களால் உணவுத்துகள்களை வடித்துண்ணுகின்ற இருவால்விகளில் வறுகி காணப்படுவதில்லை.

சுவாசத் தொகுதி[தொகு]

அனேகமான மெல்லுடலிகள் மீன்களைப் போன்று பூக்களால் சுவாசிக்கின்றன. அனேகமான இனங்களில் இரண்டு சோடிப் பூக்களும் சிலவற்றில் ஒரு பூ மாத்திரமே காணப்படும். பூக்களில் மூன்று பிசிர்ப்படைகளால் சுவாசம் நிகழ்த்தப்படுகின்றது.

இனப்பெருக்கம்[தொகு]

பிசிர்ப் படை
பிசிர்ப் படை
இரைப்பை
வாய்
பிசிர்ப் படை
இடைமுதலுருப்படை
குதம்
/// = cilia
சக்கரந்தாங்கிக் குடம்பி

பெரும்பாலான இனங்கள் ஒருபாலானவை. சில நத்தையினங்கள் இருபாலானவை. மெல்லுடலிகள் முட்டையீனும் உயிரினங்களாகும். அனேகமான இனங்களில் புறக்கருக்கட்டலே நிகழ்கின்றது. கருக்கட்டலின் பின் சக்கரந்தாங்கிக் குடம்பி, வெலிஜர் குடம்பி அல்லது சிறிய முழுவுடலிகள் வெளியேறுகின்றன. சக்கரத்தாங்கிக் குடம்பிகளே அனேகமான மெல்லுடலிகளின் குடம்பிப் பருவமாகும். சக்கரந்தாங்கிக் குடம்பிகள் சிறிய உணவுத்துகள்களை வடித்துண்ணும் குடம்பிகளாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

மெல்லுடலிகளின் முக்கியமான மூன்று வகைகளாவன:வயிற்றுக்காலிகள், இருவோட்டினம், தலைக்காலிகள். நத்தை முதலியன வயிற்றுக்காலி வகுப்பையும் மட்டி, கிளிஞ்சல் முதலியன இருவோட்டினத்தையும், கணவாய் முதலியன தலைக்காலி வகுப்பையும் சேர்ந்தவை [3].

வகுப்பு உதாரணம்/ விளக்கம் விளக்கப்பட்ட உயிர்வாழும் இனங்களின் எண்ணிக்கை[4] வாழிடம்
Caudofoveata[5] புழு போன்ற விலங்குகள் 120 கடற்படுக்கை 200-3000 மீற்றர்கள்
Solenogastres[5] புழு போன்ற விலங்குகள் 200 கடற்படுக்கை 200-3000 மீற்றர்கள்
Polyplacophora[6] கைட்டோன்கள் 1,000 கட்டற்பெருக்குப் பிரதேசம், கடற்படுக்கை
Monoplacophora[7] தொப்பி போன்ற ஓடுடைய மெல்லுடலிகள் 31 1800-7000 மீற்றர்கள் ஆழமான கடல்
Gastropoda[8] நத்தை, ஓடில்லா நத்தைகள் 70,000 கடல், நன்னீர், நிலம்
Cephalopoda[9] கணவாய், ஸ்குயீட்டு, ஒக்டோபஸ் 900 கடல்
Bivalvia[10] சிப்பி, மட்டி 20,000 கடல், நன்னீர்
Scaphopoda[11] tusk shells 500 6-7000 மீற்றர்கள் ஆழமான கடற்பிரதேசம்
Rostroconchia †[12] இருவால்வுக்களின் மூதாதை விலங்குகள் இனமழிந்தவை கடல்
Helcionelloida †[13] நத்தை போன்ற மெல்லுடலி இனமழிந்தவை கடல்

உணவு[தொகு]

அனேகமான மெல்லுடலிகள் தாவரவுண்ணிகளாக அல்லது வடித்துண்ணிகளாக உள்ளன. தாவரவுண்ணிகள் அல்காக்களைச் தமது வறுகிகளைக் கொண்டு சுரண்டி உட்கொள்ளுகின்றன. கெல்ப் போன்ற இராட்சத அல்காக்கள் நத்தை போன்ற மெல்லுடலிகளால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. சிப்பி போன்ற இருவால்வுக்கள் வடித்துண்ணிகளாகும். இவை தமது பூக்களூடாக உணவுத்துகள்கள் கரைந்துள்ள நீரைச் செலுத்துவதனால் உணவையும், ஆக்சிசனையும் வடித்தெடுத்து உட்கொள்கின்றன. ஒக்டோபஸ் போன்ற சீபலோபோடாக்கள் ஊனுண்ணிகளாகும். இவை தமது கைகளால் இரையைக் கைப்பற்றி பலமான தசைச்செறிவுள்ள வறுகியால் இரையைக் கிழித்து உண்கின்றன.

படிமலர்ச்சி[தொகு]

பட்டியல்[தொகு]

ஓட்டிற்கு வெளியே, உடல் நீட்டும் மட்டிகள்

மேற்கோள்கள்[தொகு]

 1. Ponder, Winston F. and Lindberg, David R. (Eds.) (2008) Phylogeny and Evolution of the Mollusca. Berkeley: University of California Press. 481 pp. ISBN 978-0-520-25092-5.
 2. Mollusc. (n.d.). The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. Retrieved மார்ச் 19, 2008, from Dictionary.com website: http://dictionary.reference.com/browse/mollusc
 3. அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6 (நீர்வாழ்வன) , என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, சென்னை, 1999
 4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Haszprunar2001MolluscsInEncOfLifeSci என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. 5.0 5.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; RuppertFoxBarnes2004MolluscaAplacophora என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; RuppertFoxBarnes2004MolluscaPolyplacophora என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; RuppertFoxBarnes2004MolluscaMonoplacophora என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. p. 300. ISBN 0-03-025982-7. 
 9. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. p. 343. ISBN 0-03-025982-7. 
 10. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. p. 367. ISBN 0-03-025982-7. 
 11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; RuppertFoxBarnes2004MolluscaScaphopoda என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 12. Clarkson, E.N.K., (1998). Invertebrate Palaeontology and Evolution. Blackwell. p. 221. ISBN 0-632-05238-4. http://books.google.com/?id=g1P2VaPQWfUC&pg=PA221&dq=%22Invertebrate+Palaeontology+and+Evolution%22+rostroconchia#PPA221,M1. பார்த்த நாள்: 2008-10-27. 
 13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; RunnegarPojeta1974 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லுடலி&oldid=2190247" இருந்து மீள்விக்கப்பட்டது