நத்தை
Jump to navigation
Jump to search
நத்தை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குகள் |
தொகுதி: | மெல்லுடலி |
வகுப்பு: | குடற்காலி |

Helix pomatia, ஒருவகை நில நத்தை.

மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தையின் ஓடுI
நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.
ஒரு வகை (Pulmonata) நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை இன்னொரு வகை (paraphyly) நத்தைகள் பூக்களினால் (செவுள்களினால்) சுவாசிக்கின்றன.
மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தை என்பது நத்தைகளில் பொதுவாகக் காணப்படாத பச்சை நிறத்தில் உள்ளது.
நத்தைகளினால் பயிர்சேதம்[தொகு]
நேரடி விதைப்பு நெல் வயல்களில் நெல் நாற்று தண்டு பகுதியை நத்தை வெட்டி சேதப்படுத்தும்[1].
நத்தை உணவு[தொகு]
சிலர் நெல் வயல்களில் காணப்படும் நத்தைகளை சேகரித்து குழம்பாக சமைத்து உண்பார்கள்.[2]
பாப்பா பாட்டு[தொகு]
- நத்தை யம்மா, நத்தை யம்மா, எங்கே போகிறாய்?
- அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்
- எத்தனைநாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
- பத்தே நாள்தான்; வேணு மானால் பார்த்துக் கொண்டிரு.