நத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Helix pomatia, ஒருவகை நில நத்தை.
மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தையின் ஓடுI

நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.

ஒரு வகை (Pulmonata) நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை இன்னொரு வகை (paraphyly) நத்தைகள் பூக்களினால் (செவுள்களினால்) சுவாசிக்கின்றன.

மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தை என்பது நத்தைகளில் பொதுவாகக் காணப்படாத பச்சை நிறத்தில் உள்ளது.

நத்தைகளினால் பயிர்சேதம்[தொகு]

நேரடி விதைப்பு நெல் வயல்களில் நெல் நாற்று தண்டு பகுதியை நத்தை வெட்டி சேதப்படுத்தும்[1].

உணவு பழக்கம்[தொகு]

நத்தைகளின் உணவுப் பழக்கம் பரவலாக சிற்றினத்திற்கு சிற்றினம் வேறுபடுகிறது. சில சிற்றினங்கள் பொதுவானவையாகும் சில் சிற்றினங்கள் குறிப்பிட்ட உணவை உண்பவைகளாகவும் உள்ளன.[2] நத்தைகள் இரவில் உணவு தேடி உண்பவைகளாக உள்ளன.[3] இவை முதன்மையாக அழுகும் கரிமப் பொருட்களை உண்கின்றன.[3] இவற்றின் உணவில் பூஞ்சை, லைகன்கள், பச்சை இலைகள், புழுக்கள், சென்டிபீடு, பூச்சிகள், விலங்கு மலம், கேரியன் மற்றும் பிற ஓடில்லா நத்தைகள் அடங்கும்.[3] சில நத்தைகள் மற்ற நத்தைகளையும் உண்ணும்.[3]

செல்லப்பிராணிகளாக[தொகு]

நத்தைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. லெப்டி (பார்ன் ஜெர்மி) மற்றும் புனைகதைகளில், கேரி மற்றும் பிரையன் தி நத்தை போன்ற பல பிரபலமான நத்தைகள் உள்ளன.[4]

பாப்பா பாட்டு[தொகு]

நத்தை யம்மா, நத்தை யம்மா, எங்கே போகிறாய்?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன்
எத்தனைநாள் ஆகும் அத்தை வீடு செல்லவே?
பத்தே நாள்தான்; வேணு மானால் பார்த்துக் கொண்டிரு.

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நெல் வயலி நத்தைகளின் தாக்குதல் அறிகுறி
  2. Vendetti, Jann. "A Microscopic Look at Snail Jaws". nhm.org. Natural History Museum Los Angeles County. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  3. 3.0 3.1 3.2 3.3 Texas Bug Book: The Good, the Bad, and the Ugly - Page 144. University of Texas Press. September 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780292709379. https://www.google.co.in/books/edition/Texas_Bug_Book/3V_w-6tA8hYC?hl=en&gbpv=1&dq=Snail+feeds+on&pg=PA144&printsec=frontcover. 
  4. "BBC Radio 3 - Slow Radio - Seven of the world's most famous snails". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தை&oldid=3435805" இலிருந்து மீள்விக்கப்பட்டது