தலைக்காலி
Cephalopods புதைப்படிவ காலம்: | |||||||
---|---|---|---|---|---|---|---|
Bigfin reef squid (Sepioteuthis lessoniana) | |||||||
உயிரியல் வகைப்பாடு | |||||||
திணை: | விலங்கு
| ||||||
தொகுதி: | |||||||
வகுப்பு: | {{{1}}}
Cuvier, 1797
| ||||||
வகுப்பும் வரிசைகளும் | |||||||
|
தலைக்காலிகள் (Cephalopoda) என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த வகுப்பு ஆகும். இதில் கணவாய், எண்காலி மற்றும் கடலோடி நத்தைகள் ஆகியவை அடங்குகின்றன. இவை கடலில் மட்டும் வாழுகின்ற இருபக்கச் சமச்சீரான மெல்லுடலிகளாகும். இவற்றின் தசைப்பிடிப்பான பாதம் கால்களாகவும்/ கைகளாகவும், பரிசக் கொம்புகளாகவும், ஓட்டுக் குழாய்களாகவும் திரிபடைந்துள்ளது. இவற்றில் ஒப்பீட்டளவில் பெரிய தெளிவான தலை உள்ளது. இவற்றின் தலையிலிருந்து கால்கள் வெளிப்படுவது போல் உள்ளதால் இவை தலைக்காலிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் உடலில் உள்ள மைப்பையில் உள்ள மையைக் கக்குவதன் மூலம் எதிரிகளிடமிருந்துத் தப்பித்துக் கொள்ளும் பொறிமுறையைக் கையாளுகின்றன. தலைக்காலிகளில் இரு உப வகுப்புக்கள் உள்ளன. Coleoidea என்ற உபவகுப்பில் உள்ளவற்றில் புற ஓடு இருப்பதில்லை. எனினும் அகவன்கூடு காணப்படலாம் அல்லது அதுவும் இல்லாதிருக்கலாம். இவ்வுப வகுப்பினுள் கணவாய், சாக்குக் கணவாய் என்பன அடங்குகின்றன. மற்றைய உப வகுப்பு நாட்டிலாய்டியா ஆகும். இவ்வுப வகுப்பைச் சார்ந்த உயிரினங்களில் புற ஓடு காணப்படும். உதாரண அங்கத்தவர்: நாட்டிலசு. இதுவரை 800 உயிர்வாழும் தலைக்காலி இனங்கள் அறியப்பட்டுள்ளன.
வாழிடம்
[தொகு]தலைக்காலிகளால் நன்னீரில் உயிர் வாழ முடியாது. இவை கடலின் மேற்பரப்பிலிருந்து கடற்படுக்கை வரை அனைத்து இடங்களிலும் பரம்பிக் காணப்படுகின்றன. உதாரணமாக சாக்குக் கணவாய் கடலடியில் வாழும் ஓர் விலங்காக உள்ளது. அதிகளவான இனங்கள் மத்திய கோட்டை அண்மித்த கடற்பரப்பிலேயே வாழ்கின்றன. துருவக் கடற்பரப்புகளில் இவற்றின் இனப்பல்வகைமை குறைவாக உள்ளது.
உடலமைப்பு
[தொகு]ஏனைய மெல்லுடலிகளைக் காட்டிலும் தலைக்காலிகளின் உடலமைப்பு அதிக விருத்தியைக் காட்டுகின்றது.
நரம்புத் தொகுதியும் புலனங்கங்களும்
[தொகு]முள்ளந்தண்டற்ற விலங்குகளுள் மிகவும் சிக்கலான நரம்புத் தொகுதியைத் தலைக்காலிகள் கொண்டுள்ளன. தலைக்காலிகளே முள்ளந்தண்டற்றவற்றுள் மிகப்பெரிய மூளையைக் கொண்டுள்ளதோடு அதிக நுண்ணறிவையும் பெற்றுள்ளன. மூளை கசியிழையத்தாலான மண்டையோட்டினுள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilbur, Karl M.; Trueman, E.R.; Clarke, M.R., eds. (1985), The Mollusca, vol. 11. Form and Function, New York: Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-728702-7