கணவாய் (உயிரினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கணவாய்
Teuthida
புதைப்படிவ காலம்:(குறைந்தது) Late Cretaceous–Recent[1]
Sepioteuthis lessoniana (Bigfin reef squid).jpg
Bigfin Reef Squid, Sepioteuthis lessoniana
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: மெல்லுடலி
Suborders

Plesioteuthididae (incertae sedis)
Myopsina
Oegopsina

கணவாய் (squid) என்பது ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இது ஒரு மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கணவாய் இனங்கள் 60 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை என்றாலும் சிலவகை கணவாய்கள் 13 மீட்டர் வரை வளரக்கூடியவை. இது மிகவும் பிரபலமான உணவாகும்.மேற்கத்திய நாடுகளில் இது கலமாரி என்ற இத்தாலியன் பெயரால் அழைக்கப்படுகின்றது. கணவாய் என்பது ஆங்கிலத்தில் கட்டில் ஃபிஷ் (cuttlefish) என்றழைக்கப் படுவது.

கணவாய்களை கடல் வாழ் பச்சோந்தி என்று சொல்வதும் உண்டு. காரணம் இவை எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தங்கள் உடல் மீதுள்ள கோலங்களையும் வண்ணங்களையும் சுற்றுப் புறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவை.

கணவாய்களை எதிரிகள் (டால்ஃபின், சுறா மீன் போன்றவை) துரத்தும் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவை நிறம் கொண்ட திரவத்தினை கடலில் பாய்ச்சும். பெரிய கணவாய் கருப்பு நிற திரவத்தினையும், ஊசிக் கணவாய் நீல நிற திரவத்தினையும். கணவாய் பழுப்பு நிற திரவத்தினையும்,வெளி விடும்.

கணவாயின் கண்ணில் உள்ள கருவிழி சற்று வினோதமானது. பல உயிரினங்களின் கண்ணில் கரு விழிகள் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் கணவாயின் கரு விழி டபிள்யூ (W) என்னும் ஆங்கில எழுத்தின் வடிவில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tanabe, K.; Hikida, Y.; Iba, Y. (2006). "Two Coleoid Jaws from the Upper Cretaceous of Hokkaido, Japan". Journal of Paleontology 80 (1): 138–145. doi:10.1666/0022-3360(2006)080[0138:TCJFTU]2.0.CO;2 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவாய்_(உயிரினம்)&oldid=1381830" இருந்து மீள்விக்கப்பட்டது