சாக்குக்கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒக்டோபஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சாக்குக்கணவாய்
Octopus2.jpg
கணவாய் Octopus vulgaris.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: மெல்லுடலிகள்
வகுப்பு: தலைக்காலிகள் (Cephalopoda)
துணைவகுப்பு: Coleoidea
பெருவரிசை: Octopodiformes
வரிசை: எண்காலிகள் (Octopoda)
வில்லியம் லீச், 1818
Suborders

Pohlsepia (incertae sedis)
Proteroctopus (incertae sedis)
Palaeoctopus (incertae sedis)
Cirrina
Incirrina

வேறு பெயர்கள்
  • Octopoida
    Leach, 1817

சாக்குக்கணவாய் அல்லது பேய்க்கணவாய் (Octopus) என்னும் கடல்வாழ் விலங்கு, எட்டுக்கைகள் கொண்ட, எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு, மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுதியில், தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது எண்காலிகள் (Octopoda) என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு. தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில், 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள். இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதற்கு தமிழில் வழங்கப்பெறும் வெவ்வேறு பெயர்கள் பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி மற்றும் பேய்க்கணவாய் என்பன.

சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப் பொருள் உள்ளதால், உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.

சாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.

கணவாய் உயிரினத்தில் முட்டிக் கணவாய், பீலிக் கணவாய், ஓட்டுக் கணவாய், பூங்கணவாய், கூந்தல் கணவாய், மற்றும் தூண்டில் கணவாய் எனப்பல வகைகள் உள்ளன. [1]

நிகழ்படம்[தொகு]

  1. எழுத்தறிவித்த மூராங்குச்சி தி இந்து தமிழ் அக்டோபர் 8 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்குக்கணவாய்&oldid=2181857" இருந்து மீள்விக்கப்பட்டது