உள்ளடக்கத்துக்குச் செல்

தேவாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தேவாங்கு
Red Slender Loris[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தேவாங்குக் குடும்பம்
(லோரிசிடீ)
(Lorisidae)
பேரினம்:
லோரிசு
இனம்:
லோ. தார்டிகிரேடசு
இருசொற் பெயரீடு
லோரிசு தார்டிகிரேடசு
(லின்னேயஸ், 1758)
செந்தேவாங்கின் எலும்புக்கூடு

தேவாங்கு (Slender loris) என்பது இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்காகும். சற்றும் தொடர்பில்லாத விலங்கு போல் தோற்றம் அளித்தாலும், இது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி என்னும் வரிசையைச் சேர்ந்த விலங்காகும். இது பெரும்பாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள மழைவளக் காடுகளில் மரங்களிடையே வாழ்கின்றன. உருவத்தில் இது 18-26 செ.மீ் ( 7-10 அங்குலம்) நீளமும் 85-350 கி எடையுமே உள்ள சிறு விலங்கு. பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும். சுமார் 166-169 நாட்கள் கருவுற்று இருந்து 1-2 குட்டிகளை ஈனுகின்றன. பிறந்த குட்டிகளுக்கு 6-7 மாதம் பாலூட்டி வளர்க்கின்றன.

சூழலியல்

[தொகு]

தேவாங்குகள் ஒரு பூச்சியுண்ணியாகும்.

வாழிடம்

[தொகு]

இவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில் வாழ்கின்றன. மேலும் பிளவுபடாமல் இருக்கும் காடுகளின் மேற்பரப்பில் வாழ்வதையே இவ்விலங்குகள் விரும்புகின்றன.

அறிவியல் பெயர்

[தொகு]

தேவாங்கின் அறிவியல் பெயர் உலோரிசு இடாருடிகிராடசு (Loris tardigradus) (இலினேயசு, 1758)

வகைப்பாடு

[தொகு]

தேவாங்கில் இரண்டு கிளை இனங்கள் உள்ளன.

 • செந்தேவாங்கு (Loris tardigradus )
 • சாம்பல் தேவாங்கு (Loris lydekkerianus) (இதுவும் முன்னர் செந்தேவாங்கு என்று அறியப்பட்டது)

இவற்றின் தற்கால சிற்றினங்கள்:

[தொகு]
 • பேரினம்: உலோரிசு
  • சாம்பல் தேவாங்கு (Gray Slender Loris), உலோரிசு இலைடெக்கெரியனசு (Loris lydekkerianus)
  • உயர்நிலத் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு கிராண்டிசு (Loris lydekkerianus grandis)
  • மைசூர் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு லைடெக்கெரியனசு (Loris lydekkerianus lydekkerianus)
  • மலபார் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு மலபாரிக்கசு (Loris lydekkerianus) malabaricus
  • வடக்குத் தேவாங்கு, உலோரிசு இலைடெக்கெரியனசு நோருடிக்கசு (Loris lydekkerianus nordicus)
  • செந்தேவாங்கு (Red Slender Loris), உலோரிசு இடாருடிகிராடசு (Loris tardigradus)
  • உலர்நிலச் செந்தேவாங்கு, உலோரிசு இடாருடிகிராடசு இடாருடிகிராடசு (Loris tardigradus tardigradus)
  • ஆட்டன் சமவெளிச் செந்தேவாங்கு (Horton Plains Slender Loris), உலோரிசு இடாருடிகிராடசு நிக்டோசெபைடெசு (Loris tardigradus nyctoceboides)

கடவூர் தேவாங்கு சரணாலயம்

[தொகு]

கடவூர் தேவாங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம் 11,806 ஹெக்டேர் (29,170 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[3][4]

அச்சுறுத்தல்

[தொகு]

உயிரியலாளர்களின் கருத்துப்படி தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அருகி வருகின்றன. தேவாங்கின் உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் மருத்துவக் குணமுடையது என உள்நாட்டு மக்களால் நம்பப்படுகின்றது. தேவாங்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். இதற்கு மேலதிகமாக வளர்ந்து வரும் சட்டவிரோதமான செல்லப்பிராணிகளின் கடத்தல் நடவடிக்கைகள் காரணமாகவும் இவை அழிந்து வருகின்றன.

உசாத்துணை

[தொகு]
 • S.M.Nair (English edition); Translated by O.Henry Francis (1999). Endangered Animals of India and their conservation (In Tamil). National Book Trust.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 • Gupta, K.K. 1998. Slender loris, Loris tardigradus, distribution and habitat use in Kalakad-Mundanthurai Tiger Reserve, India. Folia Primatologica. Vol. 69(suppl 1), 394-404.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
 2. Participants of CBSG CAMP workshop: Status of South Asian Primates (March 2002) (2004). Loris tardigradus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-05-09. Database entry includes justification for why this species is endangered
 3. George (13 October 2022). "Kadavur Slender Loris Sanctuary – First of Its Kind in India". Tourist in India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
 4. ANI (12 October 2022). "Tamil Nadu govt notifies India's first Slender Loris Sanctuary". The Print. https://theprint.in/india/tamil-nadu-govt-notifies-indias-first-slender-loris-sanctuary/1165042/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாங்கு&oldid=4007742" இலிருந்து மீள்விக்கப்பட்டது