அருகிய இனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புலி இனத்தின் துணை இனங்களில் ஒன்றான சைபீரியப் புலி இனம் அருகிய எல்லையில் உள்ள இனமாகும். புலி இனத்தின் மூன்று துணை இனங்கள் முற்றாகவே அழிந்துவிட்டன.[1]

அருகிய இனம் (EN – Endangered species) என்பது, எண்ணிக்கைக் குறைவினாலோ, சூழல் மற்றும் இரைகொல்லல் தொடர்பான மாற்றங்களினாலோ, முற்றாக இல்லாது போய்விடக்கூடிய கெடுவாய்ப்பு உயிரினத்தைக் குறிக்கிறது.[2] பொதுவாக இங்கு குறிப்பிடப்படும் இனம் என்பது அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையிலான இனம் (species) ஆகும். ஆனால் கூர்ப்பு அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறு அலகுகளையும் குறிப்பிடக்கூடும். 2006 ஆம் ஆண்டில், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (International Union for Conservation of Nature or World Conservation Union) என்னும் அமைப்பானது உலகின் அருகிய இனங்கள், மொத்த உயிரினங்களில் 40% எனக் கணித்துள்ளது. அத்துடன் இவ்வகையாக அருகி வரும் இனங்கள் மேலும் குறைந்து விடாதிருக்க தடுக்கவும், இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கவும் இவ்வமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பல நாடுகள் அருகிய இனங்களைக் காப்பதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. வேட்டையாடுதலைத் தடை செய்தல், குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல், காப்பகங்களை அமைத்தல் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளுள் அடங்கும். அருகிய இனங்களில் மிகச்சிலவே இத்தகைய சட்டப் பாதுகாப்புகளைப் பெறுகின்றன. ஏனையவை உரியவர்களின் கவனத்தைப் பெறாமல் முற்றாகவே அழிந்து விடுகின்றன அல்லது நிச்சயமாக அழிந்துவிடக்கூடிய நிலையை அடைகின்றன.

செம்பட்டியல்[தொகு]

சிவப்பு பட்டியல் பிரிவுகள், மற்றும் அந்த பிரிவுகள் உள்ளடங்கும் சில விலங்குகள்:

  • காடுகளில் இருந்து அழிந்துவிட்டவை: சிறைப்பிடிக்கப்பட்டுத் தனியாக வாழலாம், ஆனால் சுதந்திரமான வாழ்க்கையோ இயற்கை குடித்தொகையோ இல்லை. உதாரணங்கள்: பர்பாரி சிங்கம் (அழிவடைந்திருக்கலாம்), ஹவாயன் காகம்

அருகிய இனமாக மாறுவதற்கான காரணங்கள்[தொகு]

பருவ நிலை அல்லது கால நிலை மாற்றம், காடுகளை அழித்தல், விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் புவி வெப்பமாதல் போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் அருகிய இனமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்[தொகு]

பாதுகாப்பான வளர்ப்பு[தொகு]

அருகிய இனமாகவும், அருகிகொண்டிருக்கும் இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் ((இனப்பெருக்கம்)) செய்து அவற்றை வளர்ப்பதனால் பாதுகாக்க முடியும்.

மரபியல் முறையில் இனங்களை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்[தொகு]
  • அருகிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள உயிரினங்களை அவற்றின் மரபணுக்களைக்கொண்டு (DNA) மரபியல் முறையில் இனவிருத்தி செய்து பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கலாம்.
  • Inbreeding எனப்படும் ஒரே குடும்பத்தை அல்லது வகையை சார்ந்த இனங்களை கொண்டு இனவிருத்தி செய்து பாதுகாக்க வேண்டும்.
  • Genetic drift என்ற மரபியற் பல்வகைமை அதாவது ஒரே இனத்தைச் சார்ந்த பல வேறுபாடான உயிரினங்கள் இருக்கும் நிலை மரபியற் பல்வகைமை எனப்படுகின்றது. இது குறிப்பிட்ட உயிரினம் பிழைத்து வாழ்வதற்குச் சாதகமான நிலைமையாகும்.

மேலும் இந்தவகையான உயிரினங்களை தாக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்

தனியார் பண்ணைகள்[தொகு]

அழிந்துவரும் விலங்கினங்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் ஆரவமுள்ள தனியார் சேவை பணி புரிபவர்களுக்கு விலங்குகளை வளர்க்க சிறப்பு அனுமதி அளித்து பன்னாட்டு இயற்க்கை பாதுகாப்பு அமைப்பு மேற்பார்வை செய்யலாம்.

அருகிவரும் சில இனங்களின் பட்டியல் மற்றும் வாழும் இடம்[தொகு]

வரிசை எண் உயிரினங்களின் பெயர் வாழும் இடம்
1 பென்குயின் பறவை ஆப்பிரிக்கா
2 காட்டு நாய் ஆப்பிரிக்கா
3 ஆசிய யானை ஆசிய கண்டம்
4 நீலத்திமிங்கலம் பசிபிக் & அண்டார்டிக் பெருங்கடல்
5 பொனொபோ வகை மனித குரங்குகள் காங்கோ
6 பொர்நியன் ஒராங்குட்டான் வகை மனித குரங்குகள் பொர்நெஒ
7 சிம்பன்சி வகை மனித குரங்குகள் ஆப்பிரிக்கா
8 செந்நாய் இந்தியா, பூடான், இந்தோனேசியா, மியான்மர், மலேசியா, வங்காள தேசம்
9 எத்தியோப்பிய ஓநாய் எத்தியோப்பியா
10 முள்/மயிரடர்ந்த முயல் இந்தியா
11 இராட்சத நீர்கீறி (Giant otter) தென் அமெரிக்கா , அமேசான் காட்டு நதி
12 பாண்டா கரடி சீனா
13 இராட்சத தவளை ஆப்பிரிக்கா
14 தோணியாமை பசிபிக் & அட்லாண்டிக் பெருங்கடல்
15 வரிக்குதிரை கென்யா, எத்தியோப்பியா
16 செந்நீல ஐவண்ணக்கிளி தென்னமெரிக்கா
17 செந்தலைக் கொக்கு ஜப்பான்
18 கருநீல ஐவண்ணக்கிளி பிரேசில்
19 Malayan வகை பன்றி ஆசியா, கிழக்கிந்திய தீவுகள்
20 முறுக்கிய பெரிய கொம்புகளுள்ள காட்டு ஆடு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர், உஸ்பெக்கிஸ்தான்
21 பாரிசிய சிறுத்தைகள் ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான்
22 நீண்ட மூக்குடைய குரங்குகள் தென்கிழக்கு ஆசியா, போர்னியோ
23 சிறிய நீர்யானை மேற்கு ஆப்பிரிக்கா, லைபீரியா, கினியா
24 சிகப்பு நிற மார்புடைய வாத்து சைபீரியா, கருங்கடல், ருமேனியா, உக்ரைன்
25 ரோத்ச்சில்த் ஒட்டகசிவிங்கி கென்யா, உகண்டா
26 பனிச்சிறுத்தை மத்திய மற்றும் தெற்கு ஆசிய மலை பகுதி
27 ஸ்டெல்லேர் கடற்சிங்கம் பசிபிக் பெருங்கடல், அலாஸ்கா
28 Scopas tang வகை மீன்கள் ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்ட்ரேலிய, ப்ளோரிடா
29 Takhi வகை குதிரை மத்திய ஆசியா, மங்கோலியா
30 புலி மேற்கில் இந்தியாவிலிருந்து கிழக்கில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா , வடக்கு எல்லையானது தென்கிழக்கு சைபீரியாவில் அமுர் நதியுடன் முடிகிறது. தற்காலத்தில் புலிகள் வாழும் பெரிய தீவு சுமத்ரா மட்டுமே.
31 வியட்னாமில் வாழும் ஒருவித கோழியினம் (Vietnamese Pheasant) வியட்நாம்
32 Valcano சிறிய முயல் மெக்ஸிகோவின் மலைகள்
33 நீர் எருமை இந்தியாவின் அஸ்ஸாம்
34 எறும்பு தின்னி ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா

குறிப்புகள்[தொகு]

  1. சண்டர்பான்ஸ் புலிகள் திட்டம். புலிகளின் அழிவுநிலைத் தகவல்கள் இணையத் தளத்தின் புலிகள் பகுதியில் காணப்படுகின்றன.
  2. "IUCN RED LIST CATEGORIES AND CRITERIA". Version 3.1, Second Edition. IUCN (IUCN RED LIST CATEGORIES AND CRITERIA). பார்த்த நாள் ஏப்ரல் 10, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகிய_இனம்&oldid=2264146" இருந்து மீள்விக்கப்பட்டது