உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிவப்புப் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்
தலைமையகம்ஐக்கிய இராச்சியம்
சேவை பகுதி
சர்வதேசம்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தாய் அமைப்பு
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
சார்புகள்இனப் பாதுகாப்புச் சபை, சர்வதேச பறவைப் பாதுகாப்பு, இயற்கை உதவி, தாவரவியல் பூங்காக்களுக்கான பாதுகாப்பு நிறுவனம், றோயல் தாவரவியல் பூங்காக்கள், டெக்ஸாஸ் A&M பல்கலைக்கழகம், ரோம சேபியன்ஸா பல்கலைக்கழகம், லண்டன் விலங்கியல் சங்கம்
வலைத்தளம்http://www.iucnredlist.org

செம்பட்டியல் அல்லது சிவப்புப் பட்டியல் (Red list) என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான பத்து நிலைகளாவன:[1][2][3]

சுருக்கங்கள்

[தொகு]
சுருக்கம் விரிவு கலைச்சொல்
EX Extinct அழிந்து போனவை, அற்றுவிட்ட இனம்
EW Extinct in the Wild இயலிடத்தில் அழிந்து போனவை, இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்
CR Critically endangered அச்சுறுத்தலுக்கு உள்ளானவை அல்லது பேரிடரிலுள்ளவை, மிக அருகிய இனம்
EN Endangered அருகிவருபவை, அருகிய இனம்
VU Vulnerable பாதுகாப்பற்றவை. அழிவாய்ப்புள்ள உயிரினங்கள், அழிவாய்ப்பு இனம்
NT Near Threatened அருகும் தருவாயில் உள்ளவை, அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள், அச்சுறு நிலையை அண்மித்த இனம்
LC Least Concern அழிந்து விடும் என்ற அச்சுறுநிலையற்றவை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
DD Data Deficient போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்காத இனங்கள், தரவுகள் போதாது.
NE Not evaluated மதிப்பீடு செய்யப்படாத இனம்
     மிக அருகிய இனம்,      அருகிய இனம்,      அழிவாய்ப்பு இனம் என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் 2007 இல் சிவப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த இனங்களின் சதவீதம்

பதிப்புகள்

[தொகு]
ஒவ்வொரு நிலையிலும் சிற்றின ஒப்பீடு

1991ஆம் ஆண்டிலிருந்து பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:[4][5]

  • பதிப்பு 1.0 (1991)
  • பதிப்பு 2.0 (1992)
  • பதிப்பு 2.1 (1993)
  • பதிப்பு 2.2 (1994)
  • பதிப்பு 2.3 (1994)
  • பதிப்பு 3.0 (1999)
  • பதிப்பு 3.1 (2001)

2001 முதல் அனைத்து புதிய பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் மதிப்பீடுகளும் வகைகள் மற்றும் அளவுகோல் பதிப்பு 3.1ஐப் பயன்படுத்தியுள்ளன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-24. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. IUCN
  4. "2001 Categories & Criteria (version 3.1)". IUCN. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 27 January 2013.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  5. "Historical IUCN Red Data Books and Red Lists". Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பட்டியல்&oldid=3665198" இலிருந்து மீள்விக்கப்பட்டது