அழிவாய்ப்பு இனம்
Appearance
ICUN வகைப்படுத்தல் |
"அழிவாய்ப்பு இனம்" என அடையாளப்படுத்தும் வரைவு |
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் அழிவாய்ப்பு இனம் (Vulnerable species) எனக் குறிப்பிடப்படும் இனமானது இனத்திற்கான அச்சுறுத்தல் நிலைகள் குறைந்து, அவ்வினத்தின் இனப்பெருக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலன்றி, வெகு விரைவில் 'அருகிய இனமாக' மாற்றமடையக் கூடிய இனமாகும். காப்பு நிலையில் இது அழிவாய்ப்பு இனம் (VU - Vulnerable) எனக் குறிப்பிடப்படுகின்றது. வாழிடப் பிரதேசத்தில் அழிவு ஏற்பட்டு, அவை தமது வாழிடத்தை இழத்தலே பொதுவாக அவற்றிற்கான அழிவாய்ப்பை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது.
காப்பு நிலை |
---|
அழிந்து போவதற்கான சூழ் இடரின் அடிப்படையில் |
இன அழிவு (Extinction) |
அற்றுவிட்ட இனம் (EX) இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW) |
இன அச்சுறுத்தல் (Threatened) |
மிக அருகிய இனம் (CR) அருகிய இனம் (EN) அழிவாய்ப்பு இனம் (VU) |
குறைந்த சூழ் இடர் (At Low risk) |
காப்பு சார்ந்த இனம் (CD) அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT) தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC) |
பிற நிலைகள் (Other categories) |
தரவுகள் போதாது (DD) மதிப்பீடு செய்யப்படாத இனம் (NE) |
இதனையும் பார்க்க சிவப்புப் பட்டியல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் |