இனப்பெருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம்.
பாக்டீரியா மரபணுப் பிளவு

பெற்றோர் உயிரினத்தில் இருந்து, புதிய உயிரினங்கள் தனியன்களாக உருவாகும் உயிரியல் செயல்முறை இனப்பெருக்கம் எனப்படும். இதன்மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இனப்பெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளுள் ஒன்றாகும். நுண்ணுயிர்கள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள், எனப் பல்வேறு வகையான உயிரினங்கள் இருந்தும், அவைகளின் இனப்பெருக்க நடைமுறைகள் வெவ்வேறாகத் தோன்றினாலும், அடிப்படையாக, அவை கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் என இருவகைப்படும்.

கலவியற்ற இனப்பெருக்கம்:[தொகு]

முதன்மைக் கட்டுரை: கலவியற்ற இனப்பெருக்கம்

இருபாலரின் புணரி உயிரணுக்களின் சேர்க்கையின்றி, தனிப்பட்ட முறையில் பெருகும் முறை கலவியற்ற இனப்பெருக்கமாகும். பெரும்பாலான ஒருகல (unicellular) உயிரினங்கள், பூஞ்சை வகைகள், மற்றும் சில தாவரங்கள் இவ்வாறாகப் பெருகுகின்றன.

கலவியற்ற இனப்பெருக்கம் பொதுவாக ஆறு வகைப்படும்.

  • உயிரணுப் பிளவு

சில உயிரினங்களில், கலவியற்ற இனப்பெருக்கத்தில், ஓர் உயிரிலிருந்து பிறந்த அனைத்து உயிர்களுமே, மூல உயிரின் மரபணுக்களைக் கொண்டே பிறக்கும். இவ்வகையில் புதிய மரபுப் பொருட்களின் சேர்க்கை இல்லாததால், இதனை ஒருவகை நகலாக்கம் எனவே கூறலாம். பல பாக்டீரியாக்கள், உயிரணுப்பிளவு மூலம் நகல்கள் செய்கின்றன.

சில பாக்டீரியாக்களில் வெளியில் இருந்து மரபணுக்கள் உட்செலுத்தப்படுவதன் மூலம், மரபணுத்தொகை விரிவாக்கம் செய்யப்படுவதாலோ அல்லது மாற்றம் செய்யப்படுவதாலோ கலவியற்ற இனப்பெருக்கத்திலிருந்து சிறிது வேறுபட்ட இனப்பெருக்கம் நிகழ்கின்றது. இங்கு உயிரணுவில் இருக்கும் டி.என்.ஏ. நகர்வு மூலம் உயிரணுப் பரிமாற்றம் நிகழ்கின்றது. பல பாக்டீரியாக்களுக்கிடையே உயிரணுப் பரிமாற்றம் நடக்கும் போதும், இவ்வகை பெருக்கம் இருபாலரின் புணரி உயிரணுக்கள் இல்லாததனால், கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. இங்கு புதியதாகத் தோன்றும் பாக்டீரியாக்கள், பல பாக்டீரியாக்களின் உயிரணுக்களால் ஆனவை, நகல்கள் அல்ல.[1] உயிரணுப் பரிமாற்றத்தின் பின் மீண்டும் உயிரணுப் பிளவின் மூலம் தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன.

  • அரும்புவிடுதல்

சில செடிகள் அரும்புவிட்டு பெருகுகின்றன.

  • பதியமுறை இனம்பெருக்கம்

பதியம் வைத்தல் மூலம் பெருக்கம் செய்தலாகும்.

  • நுண்வித்தி முறை இனப்பெருக்கம்
  • துண்டாதல்முறை இனப்பெருக்கம்
  • பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம்

இதில் கன்னிப்பிறப்பு, கலப்பில்லா வித்தாக்கம் என்பன அடங்கும். பல்கல உயிரினங்களில், சிலவகையான மீன்கள், ஊர்வன[2], அரிய சில பறவைகள்[3] போன்றவை கன்னிப்பிறப்பு எனும் வகையான கலவியற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் புணரி அணுக்கள் இல்லாமல் கரு உருவாகும்முறை என்பதால் கன்னிப்பிறப்பு எனப்படுகின்றது. அண்மையில் கொமொடொ டிராகன்கள் கன்னிப்பிறப்பு மூலம் பெறுகக்கூடியவை எனக் கண்டுபிடித்துள்ளனர்[4].

கலவிமுறை இனப்பெருக்கம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: கலவிமுறை இனப்பெருக்கம்

ஆண், பெண் புணரி உயிரணுக்கள் உருவாகி அவற்றுக்கிடையிலான இணைவின் முலம் இனப்பெருக்கம் நிகழ்ந்து, உயிரினம் பெருக்கம் அடைவதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Narra HP, Ochman H (2006). "Of what use is sex to bacteria?". Current Biology 16: R705–710. doi:10.1016/j.cub.2006.08.024. பப்மெட் 16950097. 
  2. Halliday, Tim R.; Kraig Adler (eds.) (1986). Reptiles & Amphibians. Torstar Books. பக். p. 101. ISBN 0-920269-81-8. 
  3. Savage, Thomas F. (September 12, 2005). "A Guide to the Recognition of Parthenogenesis in Incubated Turkey Eggs". Oregon State University. பார்த்த நாள் 2006-10-11.
  4. "Parthenogenesis in Komodo dragons"Watts PC, et al. . Nature 444, p1021, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனப்பெருக்கம்&oldid=1865190" இருந்து மீள்விக்கப்பட்டது