ஆண் (பால்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோமை ஆண் கடவுள் மார்சின் சின்னம் ஆண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக இக்குறி செவ்வாய்க் கோளையும் வேதியியலில் இரும்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆண் (About this soundஒலிப்பு ) (Male, ♂) என உயிரினங்களில் அல்லது உயிரினப் பகுதிகளில் விந்தணுக்களை உருவாக்கும் பால் குறிக்கப்படுகிறது. கருக்கட்டலின் போது ஒவ்வொரு விந்தணுவும் அதனைவிடப் பெரிய பெண் பாலணு அல்லது சூல் முட்டையுடன் ஒன்றிணைகிறது. ஓர் ஆணால் குறைந்தது ஓர் சூல் முட்டையாவது இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ஆனால் சில உயிரினங்களில் பாலியல் மற்றும் பால்சாரா இனப்பெருக்கம் நிகழ்கிறது.

அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதொரு பாலின அமைவு அமைப்பு கிடையாது. மனிதர் உட்படப் பெரும்பாலான விலங்குகளில் பாலினம் மரபணுக்கள் மூலமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. சிலவகை உயிரினங்களில் இவை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

வெவ்வேறு மரபு வழியில் வந்த உயிரினங்களில் இரண்டு பாலினங்கள் இருப்பதற்கான தெரிவு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்துள்ளது. (பார்க்க குவி பரிணாமம்).[1]

இவற்றையும் காண்க[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
males
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dusenbery, David B. (2009). Living at Micro Scale, Chapter 20. Harvard University Press, Cambridge, Mass. ISBN 978-0-674-03116-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்_(பால்)&oldid=2786309" இருந்து மீள்விக்கப்பட்டது