துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துளசி
Ocimum tenuiflorum 24 08 2012.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Ocimum
இனம்: O. tenuiflorum
இருசொற் பெயரீடு
Ocimum tenuiflorum
லின்.
வேறு பெயர்கள்

Ocimum sanctum

துளசி (Ocimum tenuiflorum) மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசை செய்யும் வழக்கமும் உண்டு.பெரும்பாலான வீடுகளிலும், கோவில்களிலும் முற்றத்தில் துளசி செடி மாடத்தை பார்த்திருக்கலாம். கோவில் முற்றங்களில் கூட வளர்க்கும் அளவுக்கு, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா துளசி செடி? தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே பல வீடுகளில், துளசிச் செடியை வளர்த்து வருகின்றனர். அதிகாலை வேளையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். அதிகாலை மூன்று மணி முத்ல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இய்ற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும். அதாவது இந்த நேரத்தை தான் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என்கின்றனர் அறிவிய்ல் அறிஞர்கள். இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துள்சிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம் என்பது இதன் சாராம்சம். அதாவது எல்லா ஜீவராசிகளும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்து, ஆரோக்கியமாக வாழ் வேண்டும் என்ற நோக்கத்தில், துளசி மடத்தை சுற்றி வரும், பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மருத்துவத்திலும் துளசிக்கு மிக முக்கிய் இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத் மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும். இப்படிப்பட்ட அற்புதச் செடியை கண்டறிந்து, அதன் பலனை அனைத்து மக்களும், ஆழ்மாக அனுப்விக்க வேண்டும் என்பதற்காக, ஒரு வழிபாட்டு சம்பிரதாயமாகவே பின்பற்றப்படுகிறது. துளசியை கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால், பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே. துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது. ஆண்டு முழுவதும், பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது. கூர்மையான ஊசியிலை கொண்ட காட்டு மரங்களை, வீட்டைச் சுற்றிலும் வளர்க்கக்கூடாது.


வேறு பெயர்கள்[தொகு]

துழாய் (நீல நிற துளசி. இதனை கிருஷ்ண துளசி எனவும் கூறுவர்), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி

வகைகள்[தொகு]

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காடு துளசி

வளரும் தன்மை[தொகு]

வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

காட்டுத் துளசி[தொகு]

இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் தின்பது போல இதனை யாரும் தின்னுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி&oldid=2385293" இருந்து மீள்விக்கப்பட்டது