ஒதியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒதியன்
Lannea coromandelica (Wodier Tree) in Hyderabad W2 IMG 5634.jpg
இந்தியாவில் ஹைதராபாத்தில் என்ற இடத்தில் எடுக்கப்பட்ட படம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரங்கள்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Sapindales
குடும்பம்: Anacardiaceae
பேரினம்: Lannea
இனம்: L. coromandelica
இருசொற் பெயரீடு
Lannea coromandelica
(Houtt.) Merr.

ஓதியான் அல்லது ஒடியர், ஒதிய மரம் [1] உதி, ஒடை, உலவை இதன் வேறு பெயர்கள் ஆகும். (அறிவியல் பெயர்:Lannea coromandelica),(ஆங்கில பெயர்: Indian ash tree) என்பது முந்திரி வகையைச் சார்ந்த மரம் ஆகும். இந்திய சாம்பல் மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை பொதுவாக இந்தியாவில் மழைக்காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.[2] இதன் வறுத்த விதை மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.[3] இந்த மரம், பயன்பாடுகள் நிறைந்த ஒரு மரம் ஆகும். இவை தீக்குச்சித் தயாரிப்புக்குப் புகழ்பெற்றவை. இதன் கட்டைகள் மரப்பெட்டிகள், வண்டிச்சக்கரங்கள், ஏர்கள், உலக்கைகள், தூரிகை கட்டைகள், சிலேட் சட்டங்கள், கரிக்கோல்கள், பல் குத்திகள், விறகு, காகிதக்கூழ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இம்மரத்தின் மரப்பட்டைகள் சாயமேற்ற பயன்படுகின்றன.

இந்த மரத்தில் வடியும் கோந்து மிக முக்கியமான பொருளாகும். இது ஜிங்கான் கோந்து என்று அழைக்கப்படுகிறது. இது காலிகோ அச்சு, தாள் மற்றும் துணி பாவுப்பசையீடு, வார்னிஷ்கள், மை, சுவர்பூச்சுகள் போன்ற பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் மிகவும் முதன்மையான இன்னொரு பயனாக இதன் இலைகள் மிகச் சிறந்த, செலவில்லாத ஊட்டச்சத்துமிக்க கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பேரைக் கேட்டாலே ஒடிந்துவிடும் மரம்". தி இந்து (தமிழ்). 28 மே 2016. 1 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Lannea coromandelica". The Plant List. Version 1. 2010. 4 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. [1]
  4. "தீக்குச்சி மரத்தின் அறியாத பயன்". தி இந்து (தமிழ்). 4 சூன் 2016. 4 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒதியன்&oldid=3576806" இருந்து மீள்விக்கப்பட்டது