உள்ளடக்கத்துக்குச் செல்

இலந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தை
Ziziphus zizyphus[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Z. zizyphus
இருசொற் பெயரீடு
Ziziphus zizyphus
(L.) H.Karst.
வேறு பெயர்கள்

Rhamnus zizyphus
Ziziphus jujuba Mill.

இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த, முட்கள் உள்ள குறுமரம் ஆகும். இதன் தாயகம் இந்தியாவிலுள்ள தமிழ் நாடு அல்லது சீனா எனக் கருதப்படுகிறது. வெப்பம் அதிகமுள்ள இடங்களில், இத்தாவரம் நன்கு வளரும் தன்மை கொண்டது. இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் இயல்புடையது ஆகும். இதன் பழங்கள் செம்பழுப்பு நிறத்தில் சற்று பெரிய கொட்டைகளை உடையதாகவும், இனிப்பும், புளிப்பும் கலந்தச் சுவை கொண்டதாயும், சிறு உருண்டைவடிவத்தில் இருக்கும்...இம்மரத்தின் பழங்கள் உண்ணக்கூடியவையே...மேலும் இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகிறது.இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை எனவும் அழைக்கப்டுகின்றன. சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே ஆகும்.[2]

பலன்கள்

[தொகு]
இலந்தை இலை, பச்சை மற்றும் உலர்ந்தப் பழங்கள்
சீமை இலந்தைப் பழங்கள்

100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும், தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.[3] இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் குணம் உடையதாகவும், ஆண், பெண் என இருபாலரின் இனப்பெருக்க மண்டலத்திற்கு ஊட்டம் அளிப்பதாகவும் நம்பப் படுகிறது.இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.[4] இலந்தைமர வேர் அயர்ச்சியைப் போக்கி தீபாக்கினியை உண்டுபண்ணும். கொழுந்திலை சீழ் மூலம், இரத்தாதிசாரம், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் ஆகியப் பிணிகளைப் போக்க சித்த மருத்துவத்தில் பயனாகிறது.இப்பழத்தினை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, உடலின் சர்க்கரையின் அளவினை வேறுபாடு அடையச் செய்யும் தன்மையைப் பெற்றுள்ளது. எனவே, இப்பழங்களை அளவோடு உண்ண வேண்டும். குறிப்பாகக் கருத்தரித்த பெண்கள், இப்பழத்தினை மருத்துவர்களின் வழிகாட்டல் படி உண்ண வேண்டும்.

சித்தமருத்துவப் பயன்பாடு

[தொகு]

கால் முதல் அரை ரூபாய் எடைவரை இலந்தைமரத்துப் பட்டையை தயிரில் அரைத்தோ அல்லது துளிர் இலைகளை நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலந்தோ கொடுத்தால் வயிற்றிலுண்டான கொதிப்படங்கி வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி நீங்கும் எனவும், இவ்வாறு இரண்டு மூன்று முறை உண்பதற்குள்ளாகவே குணம் தெரியும் எனக்குறிப்பிடப்படுகிறது.

இதன் பட்டையை நன்றாகத் தூள் செய்து தேங்காய் எண்ணெயுடன் குழைத்துச் சிரங்குகள், காயம்பட்ட விரணங்களின் மேல் தடவிக்கொண்டுவர ஆறும் எனக்குறிப்பிடப்படுகிறது.

இலவம் பட்டையை பஞ்சுபோல் நசுக்கி அரை பலம் அளவு, ஒரு மட்கலயத்தில் போட்டு அரை படி தண்ணீர் விட்டு வீசம் படியளவுக்குச் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வேளைக்கு ஓர் அவுன்சு வீதம் தினமும் மூன்று வேளைகள் கொடுத்துவந்தால், சுரத்தால் உண்டான அழற்சி போககும் எனக் கருதப்படுகிறது.

கொழுந்து இலவம் இலையை நன்றாக அரைத்து எந்தவிதமான கட்டிகளுக்கும் மேல்வைத்துக் கட்டிக்கொண்டுவர அடங்குவதாகக் குறிப்புகள் உள்ளன.

இரவில் தூக்கம் இன்மையால் அவதிப்படுபவர்கள், இலந்தைப்பழத் தேநீர் குடித்தால் பலன் கிட்டும் என நம்பப் படுகிறது.

இலந்தை பழத்தில் உள்ள சபோனின், ஆல்காய்டுகள் குருதியில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தப் படுத்துகின்றன. இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் உடலில் உள்ள கோளாறுகளையும், நோய்களை நீக்க உதவுவதாகவும், நிணநீர் மண்டலத்தின் மீதுள்ள அழுத்தத்தையும் குறைக்கின்றன.[5]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Taxanomy". Archived from the original on 2012-10-25. பார்க்கப்பட்ட நாள் சூன் 8, 2014.
  2. https://www.femina.in/tamil/health/home-remedies/elanthai-pazham-medicines-817.html
  3. http://www.nutritiondata.com/facts-B00001-01c20VA.html Nutritional data for the jujube
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-28. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.
  5. https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தை&oldid=3812326" இலிருந்து மீள்விக்கப்பட்டது