தக்காளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தக்காளி | |
---|---|
![]() | |
Tomato from a supermarket and cross section | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
துணைத்திணை: | கலன்றாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | இருவித்திலைத் தாவரம் Dicotyledon |
துணைவகுப்பு: | Asteridae |
வரிசை: | சோலானேல்ஸ் (Solanales) |
குடும்பம்: | சோலானேசியெ (Solanaceae) |
பேரினம்: | சோலானம் (Solanum) |
இனம்: | S. lycopersicum |
இருசொற் பெயரீடு | |
Solanum lycopersicum L. | |
வேறு பெயர்கள் | |
Lycopersicon lycopersicum |
தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள். இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும்.[1] ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.
ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும். இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.
இந்தியாவில் தக்காளி[தொகு]
மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர்.
- மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
- நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி எனவும் வழங்குவர். பழம் மூடாக்குத் தோலுடன் காணப்படும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு உள்ளே இருக்கும் பசுமைநிறத் தக்காளியை உண்பர். இது காய்நிலையில் கசக்கும். எனவே உண்ணமாட்டார்கள். இந்த உள் தக்காளி பட்டாணி அளவு பருமன் கொண்டிருக்கும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு காய்நிலையில் அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
- நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்க பட்டாணி அளவு
படங்கள்[தொகு]
தக்காளி உற்பத்தி[தொகு]
இடங்கள் | நாடுகள் | தக்காளி உற்பத்தி (டன்கள்) |
---|---|---|
1 | ![]() |
33,911,702 |
2 | ![]() |
13,718,171 |
3 | ![]() |
10,965,355 |
4 | ![]() |
10,313,000 |
5 | ![]() |
9,204,097 |
6 | ![]() |
5,976,912 |
7 | ![]() |
4,826,396 |
8 | ![]() |
3,922,500 |
9 | ![]() |
3,867,655 |
10 | ![]() |
2,936,773 |
11 | ![]() |
1,938,710 |
12 | ![]() |
1,930,000 |
13 | ![]() |
1,701,000 |
14 | ![]() |
1,492,100 |
15 | ![]() |
1,338,600 |
16 | ![]() |
1,312,310 |
17 | ![]() |
1,270,000 |
18 | ![]() |
1,170,000 |
19 | ![]() |
1,163,300 |
20 | ![]() |
1,147,600 |
இடங்கள் | நாடுகள் | தக்காளி உற்பத்தி(டன்கள்) |
---|---|---|
21 | ![]() |
830,000 |
22 | ![]() |
814,376 |
23 | ![]() |
800,000 |
24 | ![]() |
770,059 |
25 | ![]() |
750,300 |
26 | ![]() |
720,000 |
27 | ![]() |
714,635 |
28 | ![]() |
702,546 |
29 | ![]() |
680,000 |
30 | ![]() |
624,420 |
31 | ![]() |
600,336 |
32 | ![]() |
575,900 |
33 | ![]() |
559,680 |
34 | ![]() |
549,310 |
35 | ![]() |
536,217 |
36 | ![]() |
490,929 |
37 | ![]() |
477,572 |
38 | ![]() |
438,419 |
39 | ![]() |
432,000 |
40 | ![]() |
420,701 |
41 | ![]() |
420,524 |
42 | ![]() |
420,000 |
43 | ![]() |
408,170 |
44 | ![]() |
355,434 |
45 | ![]() |
310,000 |
46 | ![]() |
305,300 |
47 | ![]() |
296,035 |
48 | ![]() |
293,784 |
49 | ![]() |
274,139 |
50 | ![]() |
270,000 |
தக்காளி வித்து பிரித்தெடுக்கும் முறை[தொகு]
நன்கு பழுத்த பழத்தில் இருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை நொதிக்கவிடப்படும். மறு வித்திக்களை சுற்றியுள்ள சளிப்படை நிங்கும் வகையில் நன்கு வித்துக்கள் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஏரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஆதலையூர் சூரியகுமார் (2017 சூன் 14). "தக்காளிச் செடியின் தற்காப்புக் கலை!". கட்டுரை. தி இந்து. 14 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)