வெல்வெட் ஆப்பிள்
Appearance
வெல்வெட் ஆப்பிள் | |
---|---|
வெல்வெட் ஆப்பிள் மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. blancoi
|
இருசொற் பெயரீடு | |
Diospyros blancoi A.DC. | |
வேறு பெயர்கள் | |
See text |
வெல்வெட் ஆப்பிள் அல்லது வெண்ணெய்ப் பழம் (சிங்கப்பூர் வழக்கு) (velvet apple, Diospyros blancoi) என்பது ஒரு மரமாகும். இம்மரத்தின் பழத்தை பிரித்த உடன் பாலாடைக்கட்டியின் மணம் வீசும். இந்தப் பழத்தின் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனும், இதன் சதை இளஞ்சிவப்பாகவும், மென்மையான கூழ்போன்று இருக்கும். இந்த மரங்கள் பிலிப்பீன்சை தாயகமாகக் கொண்டவை [1] என்றாலும், மைக்ரோனேசியத் தீவுகளில் உள்ள பலாவுலிம், இலங்கையின் மாத்தறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பரலியாறு, கல்லாறு ஆகியப் பகுதிகளில் விளைகிறது. வெப்ப மண்டலத்திலும், மிதவெப்ப மண்டலத்திலும் வளரக்கூடிய இம்மரங்கள் சுமார் 100 அடி உயரம்வரை வளரக்கூடியன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Boning, Charles R. (2006). Florida’s Best Fruiting Plants: Native and Exotic Trees, Shrubs, and Vines. Sarasota, Florida: Pineapple Press, Inc. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56164-372-6.