உள்ளடக்கத்துக்குச் செல்

இறம்புட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரம்புட்டான்
இரம்புட்டான் பழங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Sapindales
குடும்பம்:
Sapindaceae
பேரினம்:
Nephelium
இனம்:
N. lappaceum
இருசொற் பெயரீடு
Nephelium lappaceum
L[1]

இரம்புட்டான் அல்லது இறம்புட்டான் (rambutan, தாவரவியல் பெயர்: Nephelium lappaceum), இரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழமரத்தாவரம். ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

தன்மை[தொகு]

ரம்புட்டான் ஒரு குளுமையான பழம். இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இப்பழத்தை மூன்று பாகமாக பிரிக்கலாம். அதாவது பழத்தின் மேல்தோல் பகுதி, பழத்தின் சதைப் பகுதி மற்றும் விதை பகுதி. பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதே போன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும் .

தாவரவியல்[தொகு]

ரம்புத்தானை 12–20 மீட்டர் வரை வளரக்கூடிய தாவரம்[2]. இலைகள் மாற்றொழுங்கானவை,10–30 செ.மீ நீளம், 3-11 சிற்றிலைகள் கொண்ட கூட்டிலை. சிற்றிலைகள் 5–15 செ.மீ நீளமும் 3-10 செ.மீ அகலமும் கொண்டது. ரம்புத்தான் ஓர் ஈரில்லத்தாவரமாகும். ரம்புத்தானை விதை மற்றும் ஒட்டுக்கன்று போன்ற முறைகள் வழி வளர்க்கப்படுகின்றன .ரம்புத்தான் விதைகள் என்பது கடிதோல் விதைகள் வகையை சேர்ந்தது .இவ்வகை விதைகளை அதிக காலத்திற்கு சேமித்துவைக்க முடியாது. இவ்வகை விதைகளை சிறிது காலத்திற்கு சேமித்து வைப்பதற்கு வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட ஈரநிலை சேமிப்பு முறை கையாளப்படுகின்றது . கடிதொல் வகை விதைகள் எளிதில் உயிப்பு திறனை இழந்துவிடும் என்பதால் பெரும்பாலான ரம்புத்தான் பழ விதைகள் சேகரிப்பட்டவுடனே போலிபெக் என்கின்ற விதைப்பையில் நடப்படுகின்றன. ரம்புத்தான் நடவாளர்கள் பெரும்பாலோர் ஒட்டுக்கட்டுதல் முறையை இம்மர வளர்ப்பில் பயன்படுத்துகின்றனர். இலைக் கைய்ப்புத் திறன் பெற்று எழுதுக்கோல் (பென்சில்) அளவு வளர்ச்சியடைந்த மரத்திலே ஒட்டுக்கட்டுதல் முறை பயன்படுத்தப்படுகின்றது.

நடவு முறை[தொகு]

ரம்புத்தான் கன்றுகள் நடுவதற்கு 60 x 60 அகலமும் 10 மீட்டர் ஆழமுள்ள குழிகளைத் தோண்ட வேண்டும். கன்றை நடுவதற்கு முன்பாக 10 கிலோ முதல் 15 கிலோ வரை என இயற்கை தொளுவுரத்தையும் 0 .5 கிராம் போஸ்பேட் (fosfat ) உரத்தையும் அடியுரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரம்புத்தான் மர நடவு என்பது பெரும்பாலும் மழைப்பருவங்களில் நடப்படுகின்றன. மேலும் வெப்பம் மற்றும் பிற தாக்குதலை சாமாளிக்க இம்மரக் கன்றைச் சுற்றி தென்னை ஓலைகளில் ஆன மறைப்புகள் வைக்கப்புகின்றது. இதன் மூலம் எப்பொழும் மிதமான சூழ்நிலை இக்கன்றுகளுக்கு கிடைக்கின்றன.

கபாத்து முறை[தொகு]

ரம்புத்தான் மரத்தின் காய்த்தல் திறனை அதிகரிப்பதற்கு கபாத்து முறை பயன்பாடு மிகவும் இன்றியமையாதது. கபாத்து முறையில் (கத்தரித்து வடிவமைத்தல்) மையமுறையிலான திறந்த முறைக் கத்தரிப்பு முறையை பயன்படுத்த வேண்டும் . ஓவ்வொரு கிளைகளிலும் வீரியமானதும் நலிந்த கிளையையும் அகற்றிவிட்டு நடுத்தரமான 2 கிளைகளை விட வேண்டும். இதன் பின் ஒவ்வொரு கிளைக்கும் மேற்குறிப்பிட்டது போல் இரண்டு கிளைகளை மட்டும் விடவும். மேலும் மரத்தின் தோற்றத்தை குடைபோன்ற கத்தரித்து (வடிவமைத்து) தொடர்ந்த இலைகள் இல்லாமல் இடைஇடையே ஒளி போகக்கூடியதாக வழி செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து இலைகளுக்கும் சமமான சூரிய ஒளியை கிடைக்க வகை செய்ய முடியும்.

நோய் தாக்குதல்[தொகு]

பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் ரம்புத்தான் மரத்தில் அதிகம் ஏற்படுவதில்லை .இருப்பினும் மிக குறைந்த அளவிலே இம்மரத்தின் கிளைகளிலும் காம்புகளினும் பூஞ்ச காளான் நோய் ஏற்படுவதுண்டு . Benomyl fungicide -என்கின்ற பூச்சி மருந்தை பயன்படுத்தி இந்நோயை கட்டுப்படுத்தி விடலாம் .

விளைச்சல்[தொகு]

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான காய்களைத் தரும். புதுதாக பறித்தப் பழங்களை கூடைகளில் போட்டு வைப்பது நல்லது. அதே நேரத்தில் அதிகமான பழங்களை ஒரு கூடையில் மிகவும் நெருக்கியப் படி போட்டுவைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்வதனால் பழங்கள் விரைவிலே காய்ந்து விடும் .

காலநிலை[தொகு]

ரம்புட்டான் அயனமண்டல சூட்டுக் காலநிலைக்குப் பொருத்தமானது. ஆயினும் 22–30° சதம அளவு வெப்பநிலை வீச்சு பொருத்தமானது. கடற்காற்றினால் பாதிக்கப்படும் ஆதலால் கடற்கரைக்கு அண்மையில் செய்கை பண்ண முடியாது. ஆண்டு முழுவதும் பரவலாகப் பெய்கின்ற 1500-2000 மி.மீ மழைவீழ்ச்சி சிறந்தது.சாரீரப்பதன் 75-80 சதவீதமாக இருக்க வேண்டும்.

போசணைப் பெறுமதி[தொகு]

இரம்புட்டான்,பொதியிடப்பட்ட பானம்
ஊட்ட மதிப்பீடு - 100கி
உணவாற்றல்343 கிசூ (82 கலோரி)
20.87
நார்ப்பொருள்0.9
0.21
0.65
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(0%)
0 மைகி
(0%)
2 மைகி
உயிர்ச்சத்து ஏ3 அஅ
தயமின் (B1)
(1%)
0.013 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(2%)
0.022 மிகி
நியாசின் (B3)
(9%)
1.352 மிகி
(0%)
0.018 மிகி
உயிர்ச்சத்து பி6
(2%)
0.020 மிகி
இலைக்காடி (B9)
(2%)
8 மைகி
உயிர்ச்சத்து பி12
(0%)
0.00 மைகி
உயிர்ச்சத்து சி
(6%)
4.9 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(2%)
22 மிகி
இரும்பு
(3%)
0.35 மிகி
மக்னீசியம்
(2%)
7 மிகி
மாங்கனீசு
(16%)
0.343 மிகி
பாசுபரசு
(1%)
9 மிகி
பொட்டாசியம்
(1%)
42 மிகி
சோடியம்
(1%)
11 மிகி
நீர்78.04கி

Nutrient values and weights are for edible portion
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

இலங்கையில் சிபார்சு செய்யப்பட்ட வர்க்கங்கள்[தொகு]

  • மல்வானை ஸ்பெசல்
  • மலாயன் சிவப்பு
  • மலாயன் மஞ்சள்
  • ஜாவா ஸ்பெசல்
  • ஜாவா லபக்கபோலா
  • ஜாவா வித்தற்றது
  • ஜாவா சின்ஜன்ஜான்

ஆதாரம்[தொகு]

  1. "Nephelium lappaceum". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Tindall, H. D. (1994). Rambutan cultivation. Food and Agriculture Organization of the United Nations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789251033258. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறம்புட்டான்&oldid=3876637" இலிருந்து மீள்விக்கப்பட்டது