உள்ளடக்கத்துக்குச் செல்

உயிர்ச்சத்து பி6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிடாக்சால் பாசுபேட்டு

உயிர்ச்சத்து பி6 (Vitamin B6) என்பது உயிரினங்களில் இடை மாற்றம் செய்ய இயலும் வேதிச்சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது. இது, உயிர்ச்சத்து பி தொகுதியின் ஒரு அங்கமாக உள்ளது. இதன் செயற்படும் வடிவமான பிரிடாக்சால் 5' பாசுபேட்டு (PLP) அமினோ அமிலம், குளுக்கோசு, கொழுமியம் ஆகியவற்றின் வளர்சிதைமாற்ற வினைகளில் நிகழும் பல்வேறு நொதிய வினைகளில் துணைக்காரணியாக உள்ளது.

வடிவங்கள்

[தொகு]
பிரிடாக்சின்
பிரிடாக்சமைன்

உயிர்ச்சத்து பி6- ன் ஏழு வடிவங்கள் (vitamers):

  • பிரிடாக்சின் (அ) பிரிடொக்சின் (PN), பொதுவாக பி6 சேர்க்கையாகக் கொடுக்கப்படும் வடிவம்
  • பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு (PNP)
  • பிரிடாக்சால் (PL)
  • பிரிடாக்சால் 5' பாசுபேட்டு (PLP), ஊன்ம ஆக்கச்சிதைவில் செயற்படும் வடிவம் ( 'பி-5-பி' என உயிர்ச்சத்துச் சேர்க்கையாக விற்கப்படுகிறது)
  • பிரிடாக்சமைன் (PM)
  • பிரிடாக்சமைன் 5'-பாசுபேட்டு (PMP)
  • 4-பிரிடாக்சிக் அமிலம் (PA), சிதைமாற்றப் பொருளாக சிறுநீரில் வெளியிடப்படுகிறது

பிரிடாக்சிக் அமிலத்தைத் தவிர்த்து மற்றைய அனைத்து வடிவங்களும் இடைமாற்றம் செய்யகூடியவைகளாகவே உள்ளன[1]. நம் குடலில் உறிஞ்சப்படும் பிரிடாக்சமைன், பிரிடாக்சால் கைனேசு என்னும் நொதியால் பிரிடாக்சமைன் 5'-பாசுபேட்டாக மாற்றப்பட்டு பிறகு, பிரிடாக்சமைன்-பாசுபேட்டு அமைன்மாற்றி (transaminase) (அ) பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியத்தால் பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றப்படுகிறது[2]. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியம், பிரிடாக்சின் 5'-பாசுபேட்டை பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றுவதிலும் வினையூக்கியாகச் செயற்படுகின்றது. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு ரிபோஃபிளாவின் உயிர்ச்சத்திலிருந்து பெறப்படும் ஃபிளேவின் ஒற்றை நியூக்ளியோட்டைடு துணைக்காரணியைச் சார்ந்திருக்கிறது. எனவே, இந்த உயிரிய வழிமுறையில் உணவிலுள்ள உயிர்ச்சத்து பி6-ஐ உயிர்ச்சத்து பி2 இல்லாமல் உபயோகப்படுத்தமுடியாது.


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johannson S, Lindstedt S, Tiselius H (1973). "Metabolic interconversions of different forms of Vitamin B(6)" (PDF). J Biol Chem 249 (1): 6040–6046. http://www.jbc.org/content/249/19/6040.full.pdf. 
  2. Ink SL, Henderson LM; Henderson (1984). "Vitamin B6 metabolism". Annu. Rev. Nutr. 4 (1): 455–70. doi:10.1146/annurev.nu.04.070184.002323. பப்மெட்:6380540. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்ச்சத்து_பி6&oldid=1749553" இலிருந்து மீள்விக்கப்பட்டது