குளுக்கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி-குளுக்கோசு
D-Glucose
Glucose structure.svg
DGlucose Fischer.svg
Glucose chain structure.svg
D-glucose-chain-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
6-(hydroxymethyl)oxane-2,3,4,5-tetrol
வேறு பெயர்கள்
Dextrose, grape sugar, blood sugar, corn sugar
இனங்காட்டிகள்
50-99-7 N
Abbreviations Glc
ChemSpider 5589
EC number 200-075-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5793
பண்புகள்
C6H12O6
வாய்ப்பாட்டு எடை 180.16 g/mol
அடர்த்தி 1.54 g/cm3
உருகுநிலை
91 g/100 ml (25 °C)
methanol-இல் கரைதிறன் 0.037 M
ethanol-இல் கரைதிறன் 0.006 M
tetrahydrofuran-இல் கரைதிறன் 0.016 M
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1271 kJ/mol
Std enthalpy of
combustion
ΔcHo298
−2805 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
209.2 J K−1 mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0865
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குளுக்கோசு அல்லது குளுக்கோஸ் (Glucose, C6H12O6) என்பது ஆறு கரிம அணுக்களும் ஆறு ஆக்சிசன் அணுக்களும் 12 ஐதரசன் அணுகளுடன் சேர்ந்திருக்கும் ஓர் எளிய மாவு இனியம் அல்லது சர்க்கரை ஆகும். இது ஓர் (ஒற்றை சாக்கரைடு) வகைகளில் ஒன்று. குளுக்கோசு உயிரியலில் முக்கியமான ஒரு கார்போ ஐதரேட்டாக உள்ளது. உயிரணுக்கள் இதனை ஆற்றல் தரும் ஒரு அடிப்பொருளாகவும் வளர்சிதைமாற்றத்துக்கான இடைப்பொருளாகவும் பயன்படுத்துகின்றன. குளுக்கோசு ஒளிச்சேர்க்கையின் முக்கிய விளைபொருள்களுள் ஒன்றாகவும் உயிரணு மூச்சைத் தொடக்கும் ஒன்றாகவும் இருக்கின்றது. நீர்நீக்கிய குளுக்கோசில் இருந்து மாவுப்பொருள் அல்லது மாவியம் (தரசம்) மற்றும் செல்லுலோசு ஆகிய பாலிமர்கள் உருவாகின்றன. குளுக்கோசு என்கிற சொல் குளுகசு (γλυκύς) என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் இனிப்பு என்பதாகும். ஓசு (-ose) என்கிற பின்னொட்டு உயிர்வேதியல் பொருள்களில், இனியங்களில் (சக்கரைப்பொருள்களில்) ஒன்று என்று குறிக்கின்றது.

குளுக்கோசு பல்வேறு உருவாக்க அமைப்புகளைக் கொண்டது என்றாலும் இந்த அனைத்து அமைப்புகளையும் இரண்டு கண்ணாடி எதிர் உருவ (பிம்ப) குடும்பங்களாக (இரட்டை ஐசோமெர்கள்) பிரிக்கலாம். டி-குளுக்கோசு என்று குறிக்கப்படும் குளுக்கோசின் வலக் கை வடிவத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஐசோமர்கள் மட்டுமே இயற்கையில் கிடைக்கப் பெறுகின்றன. டி-குளுக்கோசு பெரும்பாலும், குறிப்பாக உணவுத் துறையில், டெக்ஸ்ட்ரோசு எனக் குறிப்பிடப்படுகிறது. டெக்ஸ்ட்ரோசு என்கிற சொல் டெக்ஸ்ட்ரோரொடேடரி குளுக்கோஸ் (dextrorotatory glucose) என்பதில் இருந்து தருவிக்கப்பட்டதாகும்.[1]. டெக்ஸ்ட்ரோசு கரைசல்கள் முனைநிறுத்திய ஒளியை (polarized light) வலப்புறமாக சுழற்றுகின்றன (இலத்தீன் மொழியில் டெக்ஃச்ட்டர் (dexter) என்றால் வலது). இந்தக் கட்டுரை டி-குளுகோசைப்பற்றியது. இந்த மூலக்கூறின் கண்ணாடி எதிருருவமான (பிம்பமான) இடது குளுகோசு தனியாக விளக்கப்படுகின்றது.

கட்டமைப்பு[தொகு]

குளுக்கோசு எளிய இனியம் (அதாவது ஒற்றை இனியம் அல்லது ஒற்றை சாக்கரைடு) என்று அழைக்கப்பட்டாலும், அது ஒரு சிக்கலான மூலக்கூறு அமைப்பு ஆகும். ஏனெனில் இது பல்வேறு உள்ளமைப்புகளைக் கொண்டிருக்கிறது. கரைசல்களில் சிறு அளவுகளில் மட்டுமே இருக்கக் கூடிய வளையமிலா ஐசோமரின் பொருளில் மட்டுமே இந்த அமைப்புகள் விளக்கப்படுகின்றன.

குளுக்கோசு ஆறு கார்பன் அணுக்களின் சங்கிலி ஒரு ஆல்டிஃகைடு குழுவில் முடியும் அமைப்பு கொண்ட ஃகெக்சானலில்(Hexanal) இருந்து தருவிக்கப்படுகிறது. மற்ற ஐந்து கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் ஆல்க்ககால் குழுக்களைத் தாங்கியுள்ளன. குளுக்கோசு ஓ ஆல்டோ ஃகெக்சோசு என்று அழைக்கப்படுகிறது. கரைசல்களில், குளுக்கோசு முதன்மையாக ஒரு ஆறு உறுப்பினர் வளையமாகவே இருக்கிறது. ஆறு ஐட்ராக்சி குழு மற்றும் ஆல்டிஃகைடின் வேதிவினையில் இருந்து தோன்றும் ஒரு ஃகெமியாசெடல் குழுவை இந்த வளையம் கொண்டிருக்கிறது. ஐந்து கார்பன் அணுக்களும் ஒரு ஆக்சிசன் அணுவும் கொண்ட இந்த வளையம் பைரான் தருவிப்பு ஆகும். குளுக்கோசின் இந்த வளைய வடிவம் குளுக்கோபைரனோசு என்று அழைக்கப்படுகிறது.

C-1 மீது அமைந்திருக்கும் சமச்சீரற்ற மையம் அனோமெரிக் கார்பன் அணு என அழைக்கப்படுகிறது. வளைய முடிவு நிகழ்முறையானது இரண்டு ஐசோமெர்களை உருவாக்கக் கூடும். இவை அனோமர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை α-குளுக்கோஸ் மற்றும் β-குளுக்கோஸ் எனக் குறிப்பிடப்படுகின்றன. ஹைட்ராக்சில் குழுவின் இடநிலையைப் பொறுத்தளவில் இந்த அனோமெர்களுக்கு இடையே வித்தியாசம் உண்டு. டி-குளுக்கோஸ் ஹவோர்த் நீட்சியாக பெறப்படுகையில் α என்கிற குறியீடு, C-1 க்கு இணைக்கப்பட்டிருக்கும் ஹைட்ராக்சில் குழுவானது -CH2OH க்கு மாறுபக்கத்தில் C-5 -ல் அமையப் பெற்றுள்ளது என்பதைக் குறிக்கிறது. α மற்றும் β ஆகியவற்றிற்கு இடையே வித்தியாசம் காண்பதற்கான இன்னொரு துல்லியமற்ற வழி C-1 ஹைட்ராக்சில் வளையத்தின் தளத்திற்கு மேலே அமைந்திருக்கிறதா அல்லது கீழே அமைந்திருக்கிறதா என்பதைக் காண்பதாகும். ஒரு நீர்மக் கரைசலில் α மற்றும் β குறிப்பிட்ட மணி நேரங்களில் α:β 36:64 என்கிற நிலையான ஸ்திரமான விகிதத்திற்கு இடைமாற்றிக் கொள்ளும். இந்த நிகழ்முறைக்கு மாற்றுசுழற்சி என்று பெயர்.[2] அனொமெரிக் விளைவின் தாக்கம் இல்லாதிருந்தால் இந்த விகிதாச்சாரம் α:β 11:89 என்பதாய் இருக்கும்.[3]

ஐசோமெர்கள்[தொகு]

ஆல்டோஹெக்சோஸ்கள் தங்களது வளையமிலா வடிவங்களில் நான்கு கைரல் மையங்களைக் கொண்டுள்ளன (அனோமெரிக் கார்பனை விட்டு விட்டால்). நான்கு கைரல் மையங்கள் 24 = 16 இரட்டை ஐசோமெர்களைக் கொடுக்கின்றன. இந்த இரட்டை ஐசோமெர்கள் ஒவ்வொன்றிலும் எட்டு சர்க்கரைகள் கொண்ட இரண்டு வகுப்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்றின் கண்ணாடி பிம்பங்களாகும். ஒரு வகுப்பு எல் வகுப்பு என்றும் இன்னொன்று டி வகுப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஐசோமெர்களில் ஏழு மட்டுமே இயற்கையில் காணப்படுகின்றன. இவற்றில் டி-குளுக்கோஸ் (குளு), டி-கலக்டோஸ் (கல்) மற்றும் டி-மனோஸ் (மன்) ஆகியவை மிக முக்கியமானவை. இந்த எட்டு ஐசோமெர்களும் (குளுக்கோஸ் உட்பட) டயாஸ்டீரியோஐசோமெர்களாகும். டி வரிசையைச் சேர்ந்தவை.

இயற்பியல் குணங்கள்[தொகு]

குளுக்கோஸின் அனைத்து வடிவங்களும் நிறமற்றவையாகவும் நீரில் கரையத்தக்கவையாகவும் உள்ளன. சூழலைப் பொறுத்து மூன்று முக்கிய வடிவங்கள் படிகமாக்கப் பெறலாம்: α-குளுக்கோஸ் மற்றும் β-குளுக்கோஸ், மற்றும் நீர் சேர்த்த β-குளுக்கோஸ்.[4]

தயாரிப்பு[தொகு]

குளுக்கோஸ் மாத்திரைகள்

உயிரியல் கூட்டுச்சேர்க்கை[தொகு]

தாவரங்களிலும் சில புரோகேரியோட் வகைகளிலும் குளுக்கோஸ் ஒளிச்சேர்க்கை தயாரிப்பாக உள்ளது. விலங்குகளிலும் பூஞ்சைகளிலும் கிளைகோஜென் என்கிற பொருள் உடைந்து குளுக்கோஸ் கிடைக்கிறது. இந்த நிகழ்முறையை கிளைகோஜெனோலிசிஸ் என்று அழைக்கிறோம். தாவரங்களில் இந்த உடைவினால் தரசம் கிடைக்கிறது.

விலங்குகளில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் கார்போஹைட்ரேட் அல்லாத பைருவேட் மற்றும் கிளிசரால் போன்ற இடைப்பொருட்களில் இருந்து குளுக்கோஸ் கூட்டுச்சேர்க்கை செய்யப்படுகின்றது. இந்த நிகழ்முறைக்கு குளுகோனியோஜெனிசிஸ் என்று பெயர்.

சில ஆழ்கடல் பாக்டீரியாவில் குளுக்கோஸ் கீமோசிந்தஸிஸ் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

வர்த்தகரீதியான தயாரிப்பு[தொகு]

வர்த்தகரீதியாக தரசத்தின் என்சைம்கள் மூலமான நீர்மப் பகுப்பு முறையில் குளுக்கோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பல பயிர் வகைகள் தரசத்திற்கான ஆதாரவளங்களாகப் பயன்படுகின்றன. உலகெங்கும் மக்காச்சோளம், அரிசி, கோதுமை, கூவைக் கிழங்கு, சோளக் கதிர் மற்றும் சவ்வரிசி ஆகியவை இதற்கெனப் பயன்படும் பயிர்களாகும். அமெரிக்காவில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் சோளத் தரசம் தான் ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுகிறது. அநேக வர்த்தகரீதியான சர்க்கரை தோராயமாக 1:1 என்கிற விகிதத்தில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் கலந்த மாற்று சர்க்கரையின் ஒரு பாகமாக இருக்கும். சூத்திர அடிப்படையில் செல்லுலோஸ் நீர்ப்பகுப்பின் மூலம் குளுக்கோஸ் ஆக மாற்றப்பட முடியும் என்றாலும் இந்த நிகழ்முறை இன்னும் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை.[4]

செயல்பாடு[தொகு]

குளுக்கோஸ் முக்கியமாக கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைகோஜெனாக சேமிக்கப்படுகிறது.

ஃபிரக்டோஸ் போன்ற பிறிதொரு ஒற்றை சர்க்கரை இல்லாமல் குளுக்கோஸ் மட்டும் விலங்குகளில் மிக அதிகமாய் பயன்படுத்தப்படுவது ஏன் என்பது குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஊகிக்கின்றனர். புரதங்களின் அமினோ குழுக்களுடன் வினைபுரிவதற்கு குளுக்கோஸ் குறைவான ஒரு போக்கினைக் கொண்டிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கிளைகேசன் என்னும் இந்த வேதிவினை பல என்சைம்களின் செயல்பாட்டைக் குறைக்கிறது அல்லது அழிக்கிறது. குளுக்கோள் குறைந்த வேதிவினை சுழற்சி ஐசோமெர்களைத் தெரிவு செய்வது தான் கிளைகேசனின் குறைந்த விகிதத்திற்கான காரணமாக உள்ளது. எப்படியாயினும் நீரிழிவு நோயின் நெடுங்கால பிரச்சினைகளில் (உ-ம்., கண்பார்வை மங்குதல், சிறுநீரக செயலிழப்பு, மற்றும் நரம்பு வியாதிகள்)பலவும் புரதங்கள் அல்லது லிபிடுகளின் இந்த கிளைகேசன் வேதிவினையால் தான் அநேகமாக நேர்கின்றது.[சான்று தேவை] இதற்கு மாறாக, என்சைம் வரன்முறையுடன் புரதங்களுக்கு குளுக்கோஸை கிளைகோசிலேசன் மூலம் சேர்ப்பது பல சமயங்களில் அவற்றின் செயல்பாட்டுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது.[சான்று தேவை]

சக்தியின் ஆதாரம்[தொகு]

குளுக்கோஸ் உயிரியலில் ஒரு எரிசக்தியாக நீக்கமற நிறைந்துள்ளது. பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை அநேக உயிரினங்களில் இது சக்திக்கான ஆதாரமாய் திகழ்கிறது. காற்று வழி சுவாசம், காற்றிலா சுவாசம், அல்லது நொதித்தல் மூலமாக குளுக்கோஸ் பயன்படுத்தப்படலாம். கார்போஹைட்ரேட்டுகள் தான் காற்றுவழி சுவாசம் மூலமாக மனித உடலின் முக்கியமான சக்தி ஆதாரமாய் திகழ்கின்றன. இவை தோராயமாக கிராமுக்கு 3.75 கிலோகலோரி (16 கிலோஜூல்கள்) உணவு சக்தியை வழங்குகின்றன.[5] கார்போஹைட்ரேட்டுகள் உடைந்து (உ-ம். தரசம்) ஒற்றை மற்றும் இரட்டை சாக்கரைடுகளை அளிக்கிறது. இவற்றில் அநேகமானவை குளுக்கோஸ் ஆகும். கிளைகோலிசிஸ் மற்றும் பின்னர் சிட்ரிக் அமில சுழற்சி வேதிவினைகளின் மூலம் குளுகோஸ் இறுதியாக கரியமில வாயு (CO2) மற்றும் நீரை ஆக்சிஜனேற்றத்தால் உருவாக்குகிறது. இது எரிசக்தி ஆதாரங்களை அளிக்கிறது. பெரும்பாலும் இது ஏடிபி (அடினோசின் ட்ரைபாஸ்பேட்) வடிவில் இருக்கும். இன்சுலின் வேதிவினையும் மற்ற இயங்குமுறைகளும் இரத்தத்தில் குளுக்கோஸின் செறிவை கட்டுப்படுத்துகின்றன. அதிகமான பட்டினி அளவிலும் இரத்த சர்க்கரை அளவானது நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலைமையைக் குறிக்கிறது.

குளுக்கோஸ் மூளைக்கான சக்தியின் முதன்மை ஆதாரமாக உள்ளது. எனவே அதன் கையிருப்பு உளவியல் பாதிப்புகளையும் கொண்டுள்ளது. குளுக்கோஸ் குறைவாக இருந்தால் மூளை முயற்சி தேவைப்படும் உளவியல் நிகழ்முறைகள் (உதாரணமாக சுய கட்டுப்பாடு, முடிவு மேற்கொள்ளல் போன்றவை) பாதிக்கப்படுகின்றன.[6][7][8][9]

கிளைகோலிசிஸில் குளுக்கோஸ்[தொகு]

α-D-Glucose Hexokinase α-D-Glucose-6-phosphate
D-glucose wpmp.png   Alpha-D-glucose-6-phosphate wpmp.png
ATP ADP
Biochem reaction arrow forward YYNN horiz med.svg
 
 
வார்ப்புரு:KEGG compound வார்ப்புரு:KEGG enzyme வார்ப்புரு:KEGG compound வார்ப்புரு:KEGG reaction

செல்களில் குளுக்கோஸ் ஒரு எரிசக்தி ஆதாரமாகப் பயன்படுவது காற்றுவழி சுவாசத்தின் வழியாகவோ அல்லது காற்றிலா சுவாசத்தின் வழியாகவோ நிகழ்கிறது. இந்த இரண்டுமே கிளைகோலிசிஸ் வளர்சிதைமாற்றப் பாதையின் ஆரம்ப படிகளுடன் தான் துவங்குகின்றன. இதன் முதல்படியாக ஹெக்சோகினேஸ் முலம் குளுக்கோஸின் பாஸ்போரிலேசன் நடக்கிறது. பின்னர் சக்தியாக உடைவதற்கான தயாரிப்பு படியே இதுவாகும்.

குளுக்கோஸ் ஒரு ஹெக்சோகினேஸ் மூலம் உடனடியாக பாஸ்போரிலேசன் செய்யப்படுவதற்கு முக்கியக் காரணம் செல்லில் இருந்து கசிந்து விடாமல் இருப்பதற்காக ஆகும். பாஸ்போரிலேசன் ஒரு ஊட்டமேற்றிய பாஸ்பேட் குழுவை சேர்ப்பதால் குளுக்கோஸ் 6-பாஸ்பேட் செல் சுவரை எளிதாகத் தாண்ட முடியாது. ஒரு வளர்சிதைமாற்ற பாதையின் திரும்பவியலா ஆரம்ப படிகள் வழக்கமான நோக்கங்களில் பொதுவானவையாக உள்ளன.

ஒரு முன்னறிகுறியாக[தொகு]

குளுக்கோஸ் புரதங்கள் உற்பத்தி மற்றும் லிபிட் வளர்சிதைமாற்றத்தில் மிக முக்கியமானதாய் இருக்கிறது. தாவரங்களிலும் அநேக விலங்குகளிலும் இது வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) உற்பத்திக்கான ஒரு முன் அறிகுறியாகவும் இருக்கிறது. இந்த நிகழ்முறைகளில் கிளைகோலிசிஸ் பாதை மூலம் இது பயன்பாட்டுக்கென மாற்றப்படுகிறது.

பல முக்கிய பொருட்களின் கூட்டுச் சேர்க்கைக்கு ஒரு முன் அறிகுறியாக குளுக்கோஸ் பயன்படுகிறது. தரசம், செல்லுலோஸ் மற்றும் கிளைகோஜென் (”விலங்கு தரசம்”) ஆகியவை பொதுவான குளுக்கோஸ் பாலிமர்கள் (பல சாக்கரைடுகள்) ஆகும். பாலில் பிரதானமான சர்க்கரையாக பயன்படும் லாக்டோஸ் ஒரு குளுக்கோஸ்-கலக்டோஸ் இரட்டை சாக்கரைடு ஆகும். இன்னொரு முக்கியமான இரட்டை சாக்கரையான சுக்ரோஸில் குளுக்கோஸ் ஃபிரக்டோஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த கூட்டுச்சேர்க்கை நிகழ்முறைகளும் கிளைகோலிசிஸ் நிகழ்முறையின் முதல் படி வழியான குளுக்கோஸ் பாஸ்போரிலேசனையே சார்ந்திருக்கின்றன.

ஆய்வகப் பயன்பாட்டுக்கான குளுக்கோஸ்.

தொழில்துறை பயன்பாடு[தொகு]

தொழில்துறையில் சிட்ரிக் அமிலம், குளுகோனிக் அமிலம், பயோ-எத்தனால், பாலிலேக்டிக் அமிலம், சார்பிடால் ஆகியவற்றின் தயாரிப்பில் ரெய்ச்ஸ்டீன் நிகழ்முறையில் வைட்டமின் சி -க்கான ஒரு முன் அறிகுறியாக குளுக்கோஸ் பயன்படுகிறது.

ஆதாரங்களும் உட்கிரகித்தலும்[தொகு]

உணவின் அநேக கார்போஹைட்ரேட்டுகளில் குளுக்கோஸ் இருக்கும். தரசம் மற்றும் கிளைகோஜென் போன்றவற்றில் உள்ளது போல் அவற்றின் ஒரே கட்டுமான அடுக்குகளாகவோ அல்லது சுக்ரோஸ் மற்றும் லேக்டோஸில் உள்ளது போல் இன்னொரு ஒற்றை சாக்கரைடு உடன் இணைந்தோ இது இருக்கும்.

முன்சிறுகுடல் மற்றும் சிறுகுடலின் குழாய்களில், குளுக்கோஸ் ஒலிகோ மற்றும் பல சாக்கரைடுகள் கணையச் சுரப்புகள் மற்றும் குடல் கிளைகோசிடேஸ்கள் மூலமாக ஒற்றை சாக்கரைடுகளாக உடைக்கப்படுகின்றன. மற்ற பல சாக்கரைடுகள் மனித சிறுகுடலால் உடைக்கப்பட முடியாது. சுக்ரோஸ் (ஃபிரக்டோஸ்-குளுக்கோஸ்) மற்றும் லேக்டோஸ் (கலக்டோஸ்-குளுக்கோஸ்) இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாய் உள்ளன. அதன்பின் குளுக்கோஸ் SLC5A1 மூலம் எண்டிரோசைட்டுகளின் ஏபிகல் சவ்வுக்குள் கடத்தப்படுகிறது. அதன் பின் அவற்றின் பேஸல் சவ்வுக்குள் SLC2A2 மூலம் கடத்தப்படுகிறது.[10] குளுக்கோஸின் ஒரு பகுதி மூளை செல்கள், குடல் செல்கள் மற்றும் ரத்த சிவப்பு செல்களால் நேரடியாக சக்தி ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியவை கல்லீரல், அடிபோஸ் திசு மற்றும் தசை செல்களை எட்டுகின்றன. அங்கு அது உறிஞ்சப்பட்டு இன்சுலினின் தாக்கத்தால் கிளைகோஜெனாக சேமிக்கப்படுகிறது. கல்லீரல் செல் கிளைகோஜென் குளுக்கோஸாக மாற்றப்பட்டு இன்சுலின் குறைவாக அல்லது இல்லாதிருக்கும் போது மீண்டும் இரத்தத்திற்கு திரும்ப முடியும். கொழுப்பு செல்களில் குளுக்கோஸ் சக்தி வேதிவினைகளுக்குப் பயன்படுகிறது. கிளைகோஜென் உடலின் ‘குளுக்கோஸ் சக்தி சேமிப்பகமாக’ செயல்படுகிறது.

வரலாறு[தொகு]

குளுக்கோஸ் பல உயிரினங்களின் அடிப்படை அத்தியாவசியம் என்பதால் அதன் வேதியியல் கட்டமைப்பு மற்றும் உருவாக்கம் குறித்த ஒரு சரியான புரிதல் கரிம வேதியியல் முன்னேற்றத்திற்கு பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளது. எமில் பிசர் செய்த சோதனைகள் தான் இந்த புரிதலில் பெரிய அளவில் பங்களிப்பு செய்தன. இந்த ஜெர்மன் வேதியியல் அறிஞர் தனது கண்டுபிடிப்புகளுக்காக 1902 ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றார்.[11] குளுக்கோஸ் கூட்டுச்சேர்க்கை கரிமப் பொருளின் கட்டமைப்பை நிறுவ உதவியது. இதன் விளைவாக வேதி வினைவேகவியல் மற்றும் கார்பன் தாங்கு மூலக்கூறுகளில் வேதி இணைப்புகள் குறித்த ஜேகபஸ் ஹென்ரிகஸ் வாண்ட் ஹோஃபின் தத்துவங்களை முதன்முதலில் திட்டவட்டமாக சோதித்துப் பார்க்க முடிந்தது.[12] 1891 முதல் 1894 ஆம் ஆண்டு வரையான காலத்தில், அனைத்து அறியப்பட்ட சர்க்கரைகளின் இரட்டைவேதியமைவையும் பிசர் நிறுவினார். அத்துடன் ஒத்ததல்லாத கார்பன் அணுக்கள் குறித்த ஹோஃபின் தத்துவத்தை செயலுறுத்தி சாத்தியமான ஐசோமர்களையும் சரியாகக் கணித்துக் கூறினார்.

மேலும் காண்க[தொகு]

பிற்சேர்க்கை[தொகு]

குளுக்கோஸ் மிகவும் சிக்கலானதொரு ரசாயன சேர்மம் ஆகும் ஏனெனில் இது பல ஐசோமெரிக் வடிவங்களில் இருக்க முடியும்.[13]

குறிப்புதவிகள்[தொகு]

 1. "dextrose", Merriam-Webster Online Dictionary, 2009-09-02 அன்று பார்க்கப்பட்டது.
 2. 6.5
 3. Juaristi, Eusebio; Cuevas, Gabriel (1995), The Anomeric Effect, CRC Press, pp. 9–10, ISBN 0849389410.
 4. 4.0 4.1 Fred W. Schenck “Glucose and Glucose-Containing Syrups” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a12_457.pub2 10.1002/14356007.a12_457.pub2
 5. [15] ^ [14]
 6. Fairclough, Stephen H.; Houston, Kim (2004), "A metabolic measure of mental effort", Biol. Psychol., 66 (2): 177–90, doi:10.1016/j.biopsycho.2003.10.001, PMID 15041139.
 7. Gailliot, Matthew T.; Baumeister, Roy F.; DeWall, C. Nathan; Plant, E. Ashby; Brewer, Lauren E.; Schmeichel, Brandon J.; Tice, Dianne M.; Maner, Jon K. (2007), "Self-Control Relies on Glucose as a Limited Energy Source: Willpower is More than a Metaphor", J. Personal. Soc. Psychol., 92 (2): 325–36, doi:10.1037/0022-3514.92.2.325, PMID 17279852.
 8. Gailliot, Matthew T.; Baumeister, Roy F. (2007), "The Physiology of Willpower: Linking Blood Glucose to Self-Control", Personal. Soc. Psychol. Rev., 11 (4): 303–27, doi:10.1177/1088868307303030, PMID 18453466.
 9. Masicampo, E. J.; Baumeister, Roy F. (2008), "Toward a Physiology of Dual-Process Reasoning and Judgment: Lemonade, Willpower, and Expensive Rule-Based Analysis", Psychol. Sci., 19 (3): 255–60, doi:10.1111/j.1467-9280.2008.02077.x, PMID 18315798.
 10. Ferraris, Ronaldo P. (2001), "Dietary and developmental regulation of intestinal sugar transport", Biochem. J., 360 (Pt 2): 265–76, doi:10.1042/0264-6021:3600265, PMC 1222226, PMID 11716754, 2006-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2010-06-17 அன்று பார்க்கப்பட்டது.
 11. [32] ^ [31]
 12. Fraser-Reid, Bert, "van't Hoff's Glucose", Chem. Eng. News, 77 (39): 8.
 13. குளுக்கோஸின் வளைய வடிவத்திற்குள்ளாக, ω -கோணம் என்று அழைக்கப்படும் O6-C6-C5-O5 முறுக்குவிசைக் கோணத்தை சுற்றி சுழற்சி நேரலாம். ω -கோணம் மற்றும் O6-C6-C5-C4 கோணத்தின் திசைநிலைகளைக் குறிப்பிடுகையில், கோசெ -கோசெ (gg), கோசெ -டிரான்ஸ் (gt) மற்றும் டிரான்ஸ் -கோசெ (tg) ஆகிய மூன்று ரோடமர் நிர்ணயங்கள் குறிப்பிடப்படுகின்றன. மெத்தில் α-டி-குளுக்கோபைரனோசுக்கு சமநிலை அமைவில் ஒவ்வொரு ரோடமர் நிர்ணயத்திலுமான மூலக்கூறுகளின் விகிதம் 57:38:5 gg:gt:tg ஆக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.Kirschner, Karl N.; Woods, Robert J. (2001), "Solvent interactions determine carbohydrate conformation", Proc. Natl. Acad. Sci. USA, 98 (19): 10541–45, doi:10.1073/pnas.191362798, PMC 58501, PMID 11526221. ω-கோணம் கோசெ நிர்ணயத்தை தெரிவு செய்யும் போக்கிற்கு கோசெ விளைவே காரணமாகக் கூறப்படுகிறது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Glucose
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுக்கோசு&oldid=3509122" இருந்து மீள்விக்கப்பட்டது