நீராற்பகுத்தல்
நீராற்பகுப்பு (Hydrolysis) (/haɪˈdrɒlɪsɪs/) என்பது வேதிவினை ஒன்றில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதிப்பிணைப்புகளை நீர் மூலக்கூறானது பிரிக்கும் வேதிவினையாகும். நீர் மூலக்கூறானது ஒரு கருக்கவர் பொருளாகச் செயல்படும் நேர்வில் இவ்வினை வகையானது பதிலீட்டு வினைகள், நீக்கல் வினைகள் பதிலீட்டு வினை, நீக்க வினை மற்றும் கரைத்தல் வினை என்றும் அழைக்கப்படுகின்றன.[1]
உயிரியல் வினைகளில் நீராற்பகுப்பென்பது நீர் மூலக்கூறுகள் உயிரியல் மூலக்கூறுகளால் நுகரப்படும் போது பெரும் மூலக்கூறுகளானவை அதன் பகுதிப்பொருள்களாக பிரிக்கப்படும் பிணைப்பு பிளவு நிகழ்வாகும். ஒரு கார்போவைதரேட்டு நீராற்பகுக்கப்படும் போது சர்க்கரையின் பகுதிப்பொருள்களான சுக்குரோசாகவும் பின்னர் அது சிதைந்து குளுக்கோசு மற்றும் புருக்டோசாகவும் மாறுகின்றன.[2]
நீராற்பகுப்பு வினையானது இரண்டு எளிய மூலக்கூறுகள் இணைந்து நீர் மூலக்கூற்றினை வெளியேற்றி விட்டு ஒரு பெரிய மூலக்கூறு உருவாகும் குறுக்க வினையின் மறுதலையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால், நீராற்பகுப்பு என்பது நீரைச் சேர்த்துக் கொண்டு சிதைவுறும் வினையாகவும் குறுக்க வினையானது நீர் மூலக்கூற்றினை நீக்கி விட்டு இணையும் வினையாகவும் அமைகின்றன. [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Hydrolysis". Compendium of Chemical Terminology Internet edition. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Solvolysis". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ "Definition of Saccharification". www.merriam-webster.com (ஆங்கிலம்). 7 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 8 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Steane, Richard. "Condensation and Hydrolysis". www.biotopics.co.uk. 2020-11-27 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2020-11-13 அன்று பார்க்கப்பட்டது.