நீக்க வினை
நீக்க வினை (Elimination reaction) என்பது ஒரு வகை கரிம வேதி வினை ஆகும். இவ்வினையில் மூலக்கூறு ஒன்றில் இருந்து இரண்டு பிரதியீடுசெய் பொருட்கள் நீக்கப்படுகின்றன. இது ஒரு படி அல்லது இரு படிகளில் நிகழ்கிறது.[1] ஒரு படியில் நிகழும் வினை E2 வினை எனப்படும், இரு படியில் நிகழும் வினை E1 வினை எனப்படும். எண்கள் இங்கு பொறிமுறையின் படிகளின் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, மாறாக எதிர்வினையின் இயக்கவியலைக் குறிக்கின்றன: E2 என்பது இரட்டைமூலக்கூற்று (இரண்டாவது-வரிசை), E1 ஒற்றைமூலக்கூற்று (முதல்-வரிசை) ஆகும்.
ஐதரசன் நீக்குதல் (H+)
[தொகு]பெரும்பாலான கரிம வேதியியல் நீக்க வினைகளில் குறைந்தது ஒரு ஐதரசன் அணு நீக்கமடைந்து இரட்டை பிணைப்பு உண்டாகிறது.
E2 பொறிமுறை
[தொகு]1920 களில், சர் கிறித்தோபர் இங்கோல்டு விசித்திரமான வேதியியல் எதிர்வினை ஒன்றை விளக்க E2 பொறிமுறையை மாதிரியை முன்மொழிந்தார்: E2 என்பது "இரட்டைமூலக்கூற்று நீக்கத்தைக்" குறிக்கிறது. இவ்வினை ஒரு-படி பொறிமுறையை உள்ளடக்கியது, இதில் "கார்பன்-ஐதரசன்" மற்றும் "கார்பன்-ஆலசன்" பிணைப்புகள் உடைந்து இரட்டைப் பிணைப்பை (C=C Pi bond) உருவாக்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7