புருக்டோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புருக்டோசு

புருக்டோசு (Fructose) என்பது ஓர் எளிய ஒற்றைச்சர்க்கரை ஆகும். இது பழச் சர்க்கரை (Fruit sugar) எனவும் அறியப்படுகின்றது. இது தாவரங்களில் பொதுவாகக் காணப்படுகின்றது.[1] இதனை முதன் முதலில் கண்டு அறிந்தவர் பிரான்சிய வேதியியலாளர் ஒகஸ்டின்-பியரே டப்ருன்போவ்ட் (Augustin-Pierre Dubrunfaut) ஆவார். குளுக்கோசு, காலக்டோசு ஆகியவற்றைப்போல் புருக்டோசும் இலகுவில் சமிபாடு அடையக்கூடிய சர்க்கரை ஆகும். சுக்குரோசு எனும் இரட்டைச் சர்க்கரையை உருவாக்குவதற்கு இவ்வொற்றைச்சர்க்கரையும் குளுக்கோசும் இணைய வேண்டும். இது 1847 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.ref>Dubrunfaut (1847) "Sur une propriété analytique des fermentations alcoolique et lactique, et sur leur application à l'étude des sucres" (On an analytic property of alcoholic and lactic fermentations, and on their application to the study of sugars), Annales de Chimie et de Physique, 21 : 169–178. On page 174, Dubrunfaut relates the discovery and properties of fructose.</ref>[2] இது வெள்ளை நிறத்தில், மணமின்றி காணப்படுவதுடன் நீரில் அதிகம் கரையக்கூடிய சர்க்கரை இதுவே ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fructose is a carbohydrate that is roughly 1.2 times the sweetness of table sugar and is found in fruits and other foods.". பார்த்த நாள் 7 சனவரி 2017.
  2. Fruton, J.S. Molecules of Life 1972, Wiley-Interscience
  3. William Allen Miller, Elements of Chemistry: Theoretical and Practical, Part III. Organic Chemistry (London, England: John W. Parker and son, 1857), pages 52 and 57.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருக்டோசு&oldid=2219287" இருந்து மீள்விக்கப்பட்டது